"நம்பள் அச்சா. நிம்பள் அச்சா?" என்றார் சுப்புசாமி சத்தமாக.
"வெரி குட். பஹூத் சுக்ரியா...!" என்றார் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி.
"யாருகிட்ட வெட்டிப் பேச்சு? பாவம், கேக்கறவன் காது கிழிஞ்சிட போகுது. கொஞ்சம் போனில் டீசன்ட்டாதான் பேசுங்களேன். தமிழே தெரியாமல் கக்கினானாம். அப்புறம் இந்திலேவேற முக்கினானாம்?" என்றாள் கோமுப்பாட்டி.
"உஷ்..." என்ற சுப்புத் தாத்தா, தொடர்ந்து பதிலளித்தவை பின்வருமாறு:
"தமிழ்நாடு மட்டுமென்ன, இனிமே பாண்டிச்சேரியிலும் நம்பள் ஆட்சிதான். கவலை நஹி பிரதமர்ஜி...!"
"ஒரு கக்கூஸ்; ஒரு லட்சம் சேவை - திட்டத்தை நாடு பூராவும் அமல்படுத்துங்க. நாம எங்கேயோ போய்விடுவோம்...!"
"என்னது எங்கள் வீட்டுக்கு கக்கூஸ் கட்ட பிரதான் மந்திரி நிதியா? தேவையில்லை ஜீ. எங்கள் வீட்டில் இரண்டு இருக்கின்றன. இந்தியன் கக்கூஸ் எனக்கு. வெஸ்டன் டைப் எனது ஸ்டைல் சம்சாரத்துக்கு...!"
"காயத்ரி ரகுராமை திருப்பி எடுத்துக்குவோம். அப்புறம் குஷ்பு, டெய்சி, அலிஷா... இந்த நாலு பேர் என் கூடவே இருக்கட்டும். யூ டியூப் வெடிக்கும் அளவுக்கு வீடியோ போடுவோம். அப்போதுதான் கட்சி விளம்பரப்படும்...!"
"சம்சாரம் வாங்கிக் கொடுத்த ஜிப்பாக்களை தூரப் போடணும். நீங்க 30 புது ஜிப்பாக்களை ரெடி பண்ணி அனுப்புங்க. அப்படியே உங்களைப் போலவே பளபளன்னு ரெண்டு மூணு உருப்படியும் இருக்கட்டும்...!"
"முதல்லே பேரை அறிவிக்கிறதுக்கு முன்னாடி, அந்த சொகுசு காரை உடனடியாக அனுப்பி வையுங்க. டெல்லியில் மீட் பண்ணலாம்...!"
"பஹூ த் சுக்ரியாஜீ...ஜெய் ஹிந்த்...!" - என்ற தாத்தா மூச்சு வாங்கினார்.
"வரவர வெட்டிப் பேச்சு அதிகமாயிடுச்சு, பைத்தியக்காரன் பட்டிமன்றத்தில் பேசினமாதிரி...!" என்றாள் பாட்டி.
"வெகுவிரைவில் உனக்குத்தான் ஐயாவோட புதிய வளர்ச்சியைக் கண்டு, பயித்தியம் பிடிக்கும்...!" என்றவர், "தாமரை கன்னங்கள்... தேன்மலர்க் கிண்ணங்கள்...." என்று பாடிக்கொண்டே, தன் உடன் பிறவா தோழர்களைக் காணப் புறப்பட்டார், சுப்புசாமி.
'சம்திங் ஃபிஷ்ஷி...!' என்று யோசித்தாள் பாட்டி.
+++++
பப்பு ராகுல், தன் அக்காவோடு காஷ்மீரில் ஐஸ் எறிந்து விளையாடும் காட்சியை இருபதாவது தடவையாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் மோடிஜி. கூடவே ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்.
'ஆதங்குவாதிக்கே - பயங்கரவாதிக்கே அந்தக் குறள் மனசுக்குள் நுழைவது கஷ்டம்!'
"தூப்பார்க்கு...தூப்...பாயா...துப்பாக்கி..."
'இன்னொரு அதானியைக்கூட உருவாக்குவது சுலபம். அற்ப ஒண்னே முக்கால் குறள் அடிகளை மனனம் செய்வது இத்துணைக் கடினமா?'
உள்துறை நண்பன் அமித்ஷாவை மொபைல் மூலம் அழைத்து, தான் மனப்பாடம் செய்த குறளை சொல்லி பயிற்சி எடுத்தார்.
"துப்பாக்கி மத்லப்... ரிவால்வர் ஜீ. அது நம்மகிட்ட இல்லாததா? ஓ, நிறைய துப்பாக்கிகள் வேணுமா?" என்று கேட்டார் அமித் அப்பாவியாக.
அந்த ஜோக்கை உணர்ந்து, சிரித்தார் மோடி.
'ஏதோ சொல்லி, நகைக்கிறார். பிரதமர் இன்று நல்ல மூடில் இருக்கிறார் போலும்...!'
உளவுத்துறைத் தலைவர் உள்ளே வந்து, பாரம்பரிய வணக்கம் தெரிவித்து, அந்த செய்தியை ஊர்ஜிதப்படுத்தினார்.
"ஆத்மி சென்னையையும் பாண்டிச்சேரியையும் கலக்கியிருக்கிறார். கலாட்டா செய்தே பிரபலமான மனிதர்...!"
"டமில் நாடு ஆத்மி?"
"ஹாங் ஜி. மதராஸி வாலா. முன்னாள் ஹானரரி மாஜிஸ்திரேட்டு கணவர். வெல் எஜூகேடட் லேடி. ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரியை. கணவரோ சாது (மனதுக்குள் - உங்களைப் போலவே...!), ஆனால், எடுக்கும் காரியங்கள் டெரர். ஒரு காலத்தில் இந்த மனுஷரை, இடீலி என்ற ஓர் ஆப்பிரிக்க இளவரசி காதலித்து, திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். வாழ்க்கை அனுபவம் நிரம்பிய முதியவர். ஆனால், ஓர் இளைஞனுக்குரிய சுறுசுறுப்பு மிகுந்தவர். அவரைச் சுற்றி சதா பொழுதும் சில இளைஞர்களும், ஒரு ரவுடியும் அடியாட்கள் போல இருப்பார்கள். மொத்தத்தில் மர்ம மனிதர். மனைவிக்குத் தெரியாமல் லூட்டி அடிப்பவர், தன் மனைவியை வெல்லத் துணிபவர், பல வியூகங்கள் செய்தும், அந்த அயர்ன் லேடியால் தவிடு பொடியானவர்...!"
"அப்ப உடனடியாகத் தலைவராக ஆக்கிடலாம்...!"
"யாரு, அந்த லேடியையா?"
"ஊஹூம், அந்த மனிதரை...! கட்சிக்கு ரொம்ப புத்திசாலியை நியமிக்கக் கூடாது. எவன் ஒருவன் மனைவியைச் சகித்துக் கொள்கிறானோ அவன் மனிதன்; எவன் ஒருவன் மனைவியைச் சமாளிக்கிறானோ அவன் மாமனிதன்; எவன் ஒருவன் மனைவியோடு போராடுகிறானோ அவன் மகான்...!"
"சூப்பர்ஜி. மிஸ்டர் சுப்புசாமி ஈஸ் தி கிரேட்டஸ்ட் சாய்ஸ் ஃபார் தமிழ் நாடு பி.ஜே.பி. லீடர்...!"
"நான் அவரிடம் முதலில் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி விடுகிறேன். தென் வில் ஹேவ் மீட்டிங் வித் ஹிம் இன் தில்லி. பின்னர், அறிவித்து விடுவோம்...!" என்றார் மோடி.
"சாரி டூ ஆஸ்க் யூ பிரைம் மினிஸ்டர், நம்ம அண்ணாமலை...?"
"நிறைய உழைச்சு, களைச்சுட்டார். எங்கேயாவது கவர்னராகப் போடுவோம்..
Leave a comment
Upload