நாங்களெல்லாம் பிரம்மச்சாரிகளாக இருந்த போது இந்த யூடியூப் சமாச்சாரமெல்லாம் இல்லை. தொலைபேசியிலேயே அம்மாவிடம் சமையல் ரெசிபி கேட்டு செய்து பார்த்து சாப்பிட்ட தலைமுறை
இப்போதெல்லாம் யாரேனும் சமையல் தெரியாத ஆட்களாக இருந்தால் யூடியூப் இருக்கிறது. வலைதளம் இருக்கிறது. டக் டக்கென்று அன்னின்னிக்கு ஒரு ரெசிபி பார்த்து தயாரித்து தின்று மகிழலாம்.
ஆனா இதுக்குப் பின் பெண்களின் கடின உழைப்பு இருக்கிறது.
இது போல எனக்குத் தெரிந்த மூன்று பெண்களிடம் சமையல் வலைப்பூ நடத்துவதில் உள்ள சவால் என்ன ? எது உங்களை இப்படி செய்யத் தூண்டுகிறது ?? என்று பொதுவாக கேட்ட போது அவர்களின் குரல் வழிச் செய்தியை கேட்டு வாங்கினேன்.
அவர்களாகவே சொல்லும் போது அவர்களின் சமையல் போலவே அதுவும் ஆதண்டிக்காக இருக்கும் என்ற வகையில், டிஜிட்ட்ல் விகடகவியில் அவர்களின் பேட்டி இங்கே.......
ஜெயஶ்ரீ கிச்சன்
https://www.jeyashriskitchen.com
ஜெயஶ்ரீயின் குரலில்....
அடுத்ததாக ஏகம்மையின் செட்டிநாடு அடுக்களை.
இங்கே அசைவ உணவு பிரியர்களுக்கு வேட்டை தான்
செட்டுநாடு அடுக்களையை செலுத்துவது எது ??
கடைசியாக குக் வித் தேவி என்ற சமையல் சானலை நடத்திய தேவி தற்போது அதை வணக்கம் ஹாங்காங் என்று மாற்றி விட்டார். காரணம் ?? தொடர்ந்து சமையல் வலைதளம் இருந்தாலும் ஹாங்காங் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வருகிறது.......
COOK WITH DEVI NOW VANAKKAM HONG KONG
சமையல் குறிப்புகளின் கணக்குகள் புரிபடுவதற்கே எனக்கு நேரம் பிடிக்கும் போல தோன்றுகிறது.
இருந்தாலும் இணையம் முழுக்க சமையல் சானல்கள் விரவிக் கிடக்கிறது.
ஏராளம் ஏராளம் ரெசிபிகள் மில்லியன் கணக்கில் கொட்டிக் கிடக்கிறது.
செய்து பார்த்து சாப்பிடத்தான் நேரம் இல்லை.
சமையல் கட்டிலும் அரசாட்சி நடத்தும் அத்தனை பெண்மணிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
Leave a comment
Upload