தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

லட்சுமிமேனன்

20230204070147516.jpg

ஈரம் படம் மூலம் வெற்றி பெற்ற இயக்குனரான அறிவழகன் இப்போது சப்தம் என்ற திரில்லர் படத்தை இயக்குகிறார். நடிகர் ஆதி நடிக்கும் இந்த படத்தில் லட்சுமிமேனன் இணைந்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் இந்தப் படத்தை இயக்குவதோடு தயாரிப்பாளர் பொறுப்பும் அவருடையது தான்.

ரித்திகா சிங்

20230204072643523.jpg

இன்கார் ஹர்ஷவர்தன் இயக்கியுள்ள தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளத்தில் வெளியாகும் பன்மொழி படம் மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸ். இந்தப் படத்தில் ரித்திகா சிங் நாயகி கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பாள் அதன் பாதிப்பு போன்றவற்றை ரொம்பவும் நுணுக்கமாக சொல்லும் படம். இன்கார் என்கிறார் நடிகை ரித்திகா சிங்.

மூன்றரை மணி நேரம் மேக்கப்

20230204070634774.jpg

இந்தியன் 2 படப்பிடிப்பு தற்சமயம் சென்னையில் நடந்து வருகிறது. கமலஹாசன் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி ஆக நடிக்கிறார். அவரது மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலஹாசன் போல் காஜல் அகர்வாலுக்கும் சிறப்பு மேக்கப் போடப்படுகிறது. இந்த மேக்கப் போட மூன்றரை மணி நேரம் ஆகிறது திரையில் பார்த்தால் இது காஜல் அகர்வால் தான் என்று சுலபமாக கண்டுபிடிக்க முடியாது என்கிறார்கள் பட குழுவினர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20230204072346807.jpg

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள் என்று மகிழ்ச்சியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மீடியாவிடம் பெருமையாக பேசிகொண்டிருந்தார்.

எரிச்சலில் ஓவியா

20230204070912646.jpg

தற்போது பட வாய்ப்புகள் இன்றி சும்மா இருக்கும் நடிகை ஓவியா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார். ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று கேட்க எனக்கு கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆசையே சுத்தமாக இல்லை இந்த மாதிரி கேள்வி கேட்டு ஏன் தான் என் உசுரே வாங்குகிறிர்களோ என்று கோபப்பட்டார் நடிகை ஓவியா.

சம்யுக்தா வாழ்க

20230204071116349.jpg

மலையாள நடிகையான சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார். சமீபத்தில் தனுஷ்டன் இணைந்து வாத்தி படத்தில் சம்யுக்தா நடித்திருக்கிறார். சம்யுக்தா நடித்த மலையாள படமான எடக்காடு பட்டாலியன் படத்துக்கான ஊதியம் அவருக்கு 65 சதவீதம் தான் தரப்பட்டது. படம் வெளியாகி சில மாதம் கழித்து மீதி 35 சதவீத ஊதியத்தை படத்தின் தயாரிப்பாளர் சான்ட்ரா தரப்போன போது வேண்டாம் சார் அந்தப் படம் சரியாக போகவில்லை என்னால் உங்களுக்கு நஷ்டம் எனவே இந்த பணம் எனக்கு வேண்டாம் எந்த உறுதியாக சொல்லிவாங்க மறுத்துவிட்டார். இப்படிப்பட்ட நல்ல மனதுள்ள நடிகர், நடிகைகள் தான் படலகத்துக்கு இப்போது தேவை என்று புகழ்ந்து சொல்கிறார் படத்தயாரிப்பாளர்.

அரண்மனை 4

2023020407161055.jpg

அரண்மனை முதல் பாகம் சக்க போடு போட்டது. ஆனால், இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை, இருந்தாலும் அரண்மனை 4 படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்துவிட்டார். சுந்தர்.சி இந்த படங்களில் இரண்டாவது நாயகனாக இருப்பது வழக்கம் இந்தப் படத்துக்காக ராஷிக் கண்ணா. தமன்னா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், அவர் ஏதோ காரணம் சொல்லி விலகிவிட்டார் இப்போது நாயகனை தேடிக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி.

நயன்தாரா திடீர் முடிவு

20230204071713750.jpg

திருமணம் ஏற்கனவே திருமணம் திடீரென குழந்தை இப்படி பரபரப்பு செய்தியாக இருந்த நயன்தாரா இப்போது கொஞ்சம் கவலையில் அவரது படங்களும் இப்போது சுமார் ரகம் ஆகிவிட்டது. இது எல்லாவற்றிக்கும் மேலாக அஜித் படம் இயக்கம் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு இல்லாமல் போனது இவை எல்லாவற்றிற்கும் ஒருவர் மேல் ஒருவர் காரணம் என்று பிரச்சனை வரக்கூடாது என்று இனிமேல் குடும்பத் தலைவியாக படம் தயாரிப்பாளராக மட்டும் நான் இருக்கிறேன் நடிப்பு எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் நயன்தாரா.

காத்திருக்கும் ஸ்ரேயா

20230204071942276.jpeg

தமிழில் ரஜினி ,விஜய் என்று முக்கிய நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஸ்ரேயாவிற்கு இப்போது தமிழில் எந்தப் படமும் இல்லை. ஆனால், மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஹிட் அடிக்கிற படமாக இருக்க வேண்டும் அதற்காக காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை ஸ்ரேயா.