கலந்தாலோசனை என்பது மனநல ஆலோசகருக்கும் உதவி நாடுபவருக்கும் இடையேயான ஒரு கூட்டு முயற்சி . கவுன்சிலர்கள் பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர்கள் .
ஆலோசனையில் உதவி நாடுபவரின் பேசும் முறையில் தேவையான மாற்றங்களை செய்வது, சவால்களை சமாளிக்கும்திறன்களை மேம்படுத்துவது, சுயமரியாதையை வலுப்படுத்துவது , அவசியமான நடத்தை மாற்றம் செய்வது மற்றும் உகந்தமன ஆரோக்கியத்தை ஊக்குவித்தல் ஆகியவை மூலம் உதவி செய்யப்படும்.
பதட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் ஒரு நடுத்தர வயது பெண்மணி என்னிடம் உதவி நாடினார். குடிப்பழக்கம் உடைய அவரது கணவர் வேலைக்கு செல்லாததனாலும் , கடன் மற்றும் மற்ற குடும்ப சுமைகளினாலும் இந்த பெண்மணி மிகஅழுத்தமான சூழலுக்கு தள்ளப்பட்டார். என்னதான் குடும்பத்திற்காக பெண் கடுமையாக உழைத்தாலும் அவள் ஆதரவற்றநிலைக்கு தள்ளப்படுகிறார் அவள் சிரமத்திற்கு காரணம் வேலையில்லாத குடிகார கணவனோ கடன் பிரச்சனைகளோ மட்டும்அல்ல.
கூடுதல் பிரச்சனையாக ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் வழிகளை அறிந்து கொள்ளாததும் தான் . மேலும் தன்னுடையசம்பளத்தை நிர்வாகிக்கவும் தெரியாததும் அவளுடைய பிரச்சனைகளை அதிகரித்து இருக்கிறது. இது அவள் கணவனுக்கு அவளின்சேமிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அமைந்தது. போதிய படிப்பறிவு மற்றும் அது தரும் நடைமுறைஅறிவு ஆகியவை தான் ஒருவரின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும் ..
தான் சம்பாதித்தாலும் தன் சம்பள பணத்தை தன் கணவனே நிர்வாகம் செய்யட்டும் என்று விட்டுவிட்டது சமூகத்தில்புரையோடி போன பழைய கண்மூடித்தனமான அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக ஆண் பண நிர்வாகம் பார்த்துக்கொள்ளட்டும் பெண் வீட்டு விஷயங்களை பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணங்கள்தான்.
இது போன்ற பிரச்சினைகளுக்காக நிறைய பெண்கள் என்னை அணுகி இருக்கிறார்கள். எல்லா காலத்திலும் பெண்கள்தொடர்ந்து உழைக்கிறார்கள். தங்கள் குடும்ப கடமைகளிலும் பரிணமித்து வருவதை காண்கிறோம் .
ஆனால் அவர்கள் இன்னும் முழுமையாக தன்னிறவு பெறவில்லை . பெண் முன்னேற்றம் என்பது பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. முன்னேற்றம் என்பது மற்றவர்களைஅதிகாரம் செய்வதோ ஆதிக்கம் செலுத்துவதோ அல்ல . அது ஒரு சுயமதிப்பு உணர்வை ஊக்குவிப்பது மேலும் சரியானமுடிவுகளை எடுக்கும் பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வது.
எனதருமை வாசகர்களே பொறுப்பு என்று இங்கு நான் குறிப்பிட்டிருப்பது நம்மையும் நமக்கான வாழ்க்கைக்கும் நாம் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு தான். நம் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வது , அறிவை பெருக்கிக் கொள்வது, நம்மை நாமே நம்புவது ஆகிய விஷயங்கள் தான் நம்மை முன்னேற்ற பாதையில் இட்டுசெல்லும். இதுதான் உண்மையான முன்னேற்றம் .
அந்த பெண்மணிக்கு இது புரிந்த போது அவளுக்கு தெளிவு கிடைத்தது. தான் தான் தன் பிரச்சனைகளுக்கு காரணம் தன்னுடைய முயற்சி இன்மை தான் காரணம் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ளாதது தன் தவறு என்பதையும் அவள் உணர்ந்து கொண்டாள்.
சுய சார்பாக எப்படி இருப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
பொறுப்பு
தன் வாழ்க்கைக்கு தான்தான் பொறுப்பு என்று உணர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொள்வது. தினசரி கடமைகளுக்கு கூடமற்றவர்களை நம்பி இருப்பது உங்களுக்கு எந்த திறமையும் இல்லாமல் போய்விடும். நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்புஎன்று உணர்ந்து நீங்கள் செயல்படும் பொழுது உங்கள் தன்னம்பிக்கை வளர்வதை உங்களால் காண முடியும் அதுதான்உண்மையான முன்னேற்றமாக கருதப்படும்.
நமக்கான முடிவுகளை எடுத்தல்:
நாம் சிறுவயதாக இருக்கும் பொழுது பெற்றோர்கள் நமக்கு முடிவு எடுத்தார்கள் வளர்ந்த பிறகு நம் வாழ்க்கையின் முக்கியமுடிவுகளை எடுப்பதிலும் நம்மை நாமே பார்த்துக் கொள்வதிலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு சுயசார்பு மனிதன்என்பவன் அடுத்தவரின் உதவிக்காக காத்திராமல் தன்னைத்தானே காக்கவும் முடிவுகளை எடுக்கவும் கூடிய திறன்களோடுஇருப்பவனாக இருப்பான். தன்னுடைய வாழ்க்கையில் இது போன்ற சமயங்களில் பிரச்சனைகள் வரும் பொழுது தன்னால்முடிந்த அளவுக்கு அதை சரி செய்ய முயல்வான் . அவனுக்கு சிக்கல்களை, சவால்களை சமாளிக்கும் திறன்தேவைப்படுகிறது. அது குறைந்திருக்கும் பொழுது அதை வளர்த்துக் கொள்வான்.
உளவியல் கலந்தாலோசனைகள் இது போன்ற சிக்கல்களை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் குடும்பத்தார் ,உறவினர்கள் நண்பர்கள் போன்றவருக்கு இடையிலான உறவு சார்ந்த பிரச்சனைகள், வேலையில்லாதநிலை அல்லது அளவுக்கு அதிகமாக உழைத்தல் போன்ற வேலை தொடர்பான பிரச்சனைகள், போதுமான பணம் இல்லாமைஅல்லது கடன் தொல்லை போன்ற பணம் தொடர்பான பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் , சமூகத்தில்தனிமைப்படுத்தப்படும் பிரச்சனைகள் ,உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்று பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குகலந்து ஆலோசனை உதவி நாடுவர்.
தேர்ந்த உளவியலாளர்கள் அப்பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண அல்லது தீர்வை நோக்கி நகர உதவி புரிகிறார்கள்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..
ஸ்ரீநிதி.தி
உளவியல் ஆலோசகர்
சென்னை
Leave a comment
Upload