தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

20230020163214993.jpg

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் திரிஷா நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஐஸ்வர்யா ராயுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே அஜித் ஐஸ்வர்யா ராய் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நயன்தாரா கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்க இருக்கிறது.

பாட்டிவேடத்தில் யோகி பாபு

20230020163803537.jpg

லதா ஆர் மணி அரசு இயக்கும் மிஸ் மேகி என்ற படத்தில் ஆங்கிலோ இந்திய பாட்டியாக நடித்துள்ளார் யோகி பாபு. இதில் மாதம் பட்டி ரங்கராஜ் ஹீரோ ஆத்மிகா ஹீரோயின்.

தமன்னா முயற்சி

தமிழ் படங்கள் குறைந்த நிலையில் நடிகை தமன்னா இந்தி தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். இதற்காக படு கவர்ச்சியாக ஒரு போட்டோ செஷன் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதாவது கவர்ச்சியாக நடிக்க தயாராம்.

ஜெயம் ரவியின் இறைவன்

20230020164445274.jpg

ஜெயம் ரவி நயன்தாரா நடிக்கும் படத்துக்கு இறைவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படத்தை இயக்கிய அகமது இந்த படத்தின் இயக்குனர். இது ஒரு ஆக்சன் திரில்லர் கதை என்கிறார் இயக்குனர்.

பிக் பாஸ் ஜனனி

20230020164745401.jpg

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்து கொடைக்கானல் மற்றும் காஷ்மீரில் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் திரிஷா ஹீரோயின் இது தவிர மிஷ்கின் கௌதம் மேனன் சஞ்சய் தத் ஆகியோர் வில்லனாக நடிக்கிறார்கள். லேட்டஸ்டாக இந்தப் படத்தில் பிக் பாஸ் புகழ் ஜனனியும் இணைந்துள்ளார்.

பணம் வருகிறது போதும்

20230020165109729.jpg

சின்னத்திரை சீரியலில் நடிக்க வந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு என்று பல படங்களின் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் சொன்னது சினிமாவிற்கு வரும்போது ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்று நான் கவலைப்படவில்லை பணம் வருகிறது அதற்காகத்தான் நடித்தேன் என்ற உண்மையை போட்டு உடைத்தார் அம்மணி.

புஷ்பா பட வில்லன்

20230020165548129.jpg

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் புஷ்பா பட வில்லன் நடிகர் சுனில் இணைந்துள்ளதாக படப்பிடிப்புக்கு குழுவினர் அறிவித்துள்ளனர்.

லேடிசூப்பர் ஸ்டார் பதவி காலி

20230020165729512.jpg

நயன்தாராவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் மேல் என்பதால் லேடிசூப்பர் ஸ்டார் பட்டம் இனிமேல் அவருக்கு இல்லையாம். இப்போதைக்கு அந்த இடம் காலிதானம் யாரும் இப்போதைக்கு இல்லை.

ஐ டோன்ட் கேர்

20230020170017233.jpg

மலையாளம் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்திருந்தார். சாய் பல்லவி அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி இன்னமும் மலர் டீச்சரை மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். எனவே அந்த கேரக்டர் இமேஜை தக்கவைத்துக் கொள்வது போல் படத்தை தேர்வு தேர்வு செய்கிறேன். இது பற்றி யார் என்னை விமர்சித்தாலும் ஐ டோன்ட் கேர் என்கிறார் சாய் பல்லவி.

கல்யாணி பிரியதர்ஷன்

20230020170242530.jpg

சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் கல்யாணி பிரியதர்ஷன். சிம்புவின் மாநாடு படத்தில் நடித்த அதன் பிறகு தமிழில் யாரும் கூப்பிடவில்லை என்பதால் மலையாளத்துக்கு போனார். இப்போது துல்கர் சல்மான் ஹீரோகல்யாணி பிரியதர்ஷன் நாயகி இயக்குனர் கார்த்திக் வேலப்பன் இவர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.