தொடர்கள்
அனுபவம்
சென்னையில் 3 ஆறுகள் இறந்தது!- ஆர்.ராஜேஷ் கன்னா

20230019182638715.jpg

சென்னை என்றதும் நினைவுக்கு வருவது கூவம் ஆறு தான். சென்னை நகரில் பாயும் இரண்டு ஆறுகளில் கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் என நீண்ட நாட்களுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

இந்த நீர்நிலைகளில் தூய நீர் ஓடியதால் ஆற்றில் மீன்பிடி தொழிலும் , படகுகளும் சென்றது 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இந்த ரம்மியமான காட்சியை பார்த்து வியந்து இருப்பார்கள்.

சென்னை நகரை 2004 ஆண்டில் சுனாமி தாக்க வந்த போது கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் தான் கடல் நீர் உள்ளே புகாமல் மனித உயிர்களை காப்பாற்றியது.

சுனாமியின் போது ஆற்றின் கழிமுகப்பகுதியில் இருந்த அசுத்தம் நீங்கியது, எப்போதும் இந்த நீர்நிலைகளில் இருக்கும் நீர் கருப்பு நிறமாக இருக்கும் ஆனால் சுனாமிக்கு பின்பு மூன்று நாட்களுக்கு பின்பு தண்ணீர் முகம் பார்க்கும் கண்ணாடி போல் மின்னியது.

கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் சுத்தம் செய்ய அப்போதைய தமிழக அரசு ரு 3400 கோடி நிதி ஒதுக்கி 4 இடங்களில் கூவம் அடையாறு ஆற்றின் அருகே கழிவு நீர் கலக்கும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஓரளவு செயல்பட்டது .அதன்பின் வந்த ஆட்சியாளர்கள் இந்த திட்டத்திற்கான முக்கியத்துவம் அவ்வளவாக தரவில்லை என்பது பேச்சாக உள்ளது.

கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் இருக்கும் தண்ணீரை சேகரித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டது. சென்னையில் ஜீவநதியாக மக்களின் தாகத்தை தீர்த்து வந்த நீரில் தற்போது நகரின் மொத்த கழிவுநீரும் கலந்து மாசு அடைந்துவிட்டது. இந்த நீர்நிலைகளில் இருக்கும் தண்ணீரில் கரைந்த ஆக்சிஜன் எங்கும் ஆய்வில் தென்படவில்லை. அத்துடன் இனி இந்த ஆற்று நீர் குடிக்க லாயிக்கற்றது மனித பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது என 32 இடங்களில் தமிழநாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த நீர் சோதனைகளை செய்து தற்போது ரிசல்ட் வெளியாகி உள்ளது.

கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் இருந்து சாம்பிளுக்கு எடுக்கப்பட்ட 1 லிட்டர் நீரில் 700 முதல் 5000 மிலிகிராம் திடப்பொருட்கள் கலந்துள்ளது . தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையின் போதும் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்ட நீரில் கூட தண்ணீரில் கரைந்த ஆக்சிஜன் சிறிதளவும் இல்லை என்ற வேதனையான செய்தி வெளியாகியுள்ளது.

கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் மாசு அடைய செய்வதை தடுக்க ஆன்லைன் புகார் அளிக்கும் முறையை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் அத்துடன் இந்த மூன்று நிலைகளையும் கழிவு நீர் கலக்க செய்பவர்கள் மீது அதிக அளவு அபராதம் சென்னை மாநகராட்சி விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

20230019182703727.jpg

சென்னையில் 1800 வருடங்களில் மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் மாசுப்பட்டு சாக்கடையாக மாறிவிட்டது நகரமயமாக்கலின் மற்றொரு கொடூர முகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் .

இப்போது க்ளைமாக்ஸ் வருவோம்… கூவம் , அடையாறு , பக்கிங்காம் கால்வாய் நீர்நிலைகள் மாசு அடைந்து இந்த மூன்று ஆறுகளும் இனிப்பயன்படுத்த முடியாத அளவிற்கு வந்துவிட்டது. அதாவது மூன்று ஆறுகளும் இறந்துவிட்டது என்று அதிர்ச்சிகரமான தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது நீர்நிலை ஆய்வறிக்கையில் தெரிவிப்பது தான் வேதனையான நெஞ்சை சூடும் செய்தி.