தொடர்கள்
இசை
நாயிகா - பெண்மையை கொண்டாடும் நடனம் - சதீஷ்

20230014003648263.jpeg

கடந்த வாரம் சென்னையில் ஒரு நாட்டிய விழா நடந்தேறியது.

சென்னையில் நடக்காத நாட்டியமா எனில் இது கொஞ்சம் வித்தியாசமானது.

நடனக் கலைஞர்கள் அபிநயா மற்றும் ஶ்ரீயா சாய்ராம் அவர்கள் சொந்தமாக திட்டமிட்டு உருவாக்கிய நாட்டிய நிகழ்ச்சி நாயிகா.

பெண்மை பல்வேறு பாத்திரங்களில், படைப்பாளியின் படைப்பாளியாக, ஒரு சீராட்டும் தாயாக, ஆண்டாள் போல ஒரு தெய்வீகக் காதலியாக, ஒரு நண்பியாக, பக்தையாக, உலகையே காத்தருளும் அம்பிகையாக, இப்படி பல விதமான பெண்மையின் பரிமாணங்களை வெளிப்படுத்தினார்கள் அபிநயாயும் ஶ்ரீயாவும்.

மகிழ்ச்சி, வருத்தம், கருணை, பரிதவிப்பு, கோபம், உற்சாகம் இப்படி பல வித விதமான பெண்மையின் பரிமாணங்கள் தான் அன்றைய தீம்.

20230014004243193.jpeg

புஷ்பாஞ்சலியி துவங்கி தில்லானாவில் முடிந்த நாட்டிய நிகழ்ச்சிக்குள் பார்வையாளர்களுக்கு புரிவது போல பெண்மையை பிரம்மாண்டமாக்கி தாங்கள் சொல்ல வந்ததை நடனத்தின் மூலம் கடத்தினார்கள் இருவரும்.

அபினயா ஒரு கட்டிடக் கலைஞர். ஶ்ரீயா ஒரு விளம்பர மாடல்.

சுஜாதா சொல்லுவார் கர்நாடக இசை தெரியாதவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை இழக்கின்றனர்.

அது போலவே தான் பரதநாட்டியம் இரசிக்க முடியாதவர்களும்.