தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 014 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2023001209030465.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீ ஸ்ரீனிவாசராவ் அவர்கள்

ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் சிவன் சாருடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீனிவாச ராவ் அவர்கள். ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா பட்டத்துக்கு வருவதற்கு முன் ஸ்ரீ மகா பெரியவாளிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்கிறார்.