தான் சொல்ல வந்த கருத்தை
எளிய உவமை நயத்தோடு
எளிதில் புரியும் படியான
தாடகை வதைப்படலத்தின் பாடல்
சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் கழன்று கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என போயிற்று அன்றே
நிறை மொழி மனிதரின் சொற்களை
ஒத்த வேகத்தை உடைய அம்பை
கரிய நிற அழகுடைய இராமன்
இருள் போன்ற நிறமுடைய தாடகை
மீது செலுத்த அது கல்வி அறிவில்லாதவர்க்கு
நல்லோர் சொன்ன சொல் போல்
நெஞ்சில் தங்காமல் முதுகு வழியாக
சென்றது என்பதே பாடலின் பொருள்
எளிய உவமை நயத்தோடு
நயமாக கவி பாடிய கம்பரை
போற்றுவோம் பாராட்டுவோம்
மீண்டும் சந்திப்போம்...
Leave a comment
Upload