தொடர்கள்
பொது
சாதனைப் பெண்கள் - லேடீஸ் ஸ்பெஷல் - கிரிஜா ராகவன் - வேங்கடகிருஷ்ணன்.

20230006123615190.jpg

நாம் சாதனைப் பெண்கள் வரிசையில், இதுவரை பார்த்தவர்களில் இவர் மிகவும் வித்தியாசமானவர். ஏனென்றால் இவரே நிறைய சாதனைப் பெண்களை ஊக்குவித்து, தயார் செய்தவர். நிறைய சாதனைப் பெண்கள் உருவாக காரணமானவர். தன்னுடைய பத்திரிக்கையை வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் நடத்தாமல் அதன் மூலம் நிறைய உள்ளங்களை தொட வேண்டும், அவர்களையும் சாதனை படைக்க செய்ய வேண்டும் என்பதை தனது நோக்கமாகக் கொண்டவர்.அவர்களுக்காக "ஸ்ரீ சக்தி " என்னும் விருது வழங்கி கௌரவிப்பவர்.

20230006123741163.jpg

இவருடைய பத்திரிக்கையின் குறிக்கோள் வாசகமே "புறப்படு பெண்ணே ! புவியசைக்க " என்பது தான்.

20230006125023316.jpg

எப்போதும் சிரித்த முகத்தோடும், உற்சாகமான பேச்சோடும் வலம் வரும் திருமதி.கிரிஜா ராகவன் சாதிக்கத் துடிக்கும் சகோதரிகளுக்கான கலங்கரை விளக்கம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பத்திரிக்கை நடத்துவது என்பது மிக,மிக கடினமான ஒன்று. அந்த சாதனையை வெற்றிகரமாக 25 வருடங்கள் தாண்டி செய்து கொண்டிருப்பவர். "லேடிஸ் ஸ்பெஷல்" மாத இதழ் வெள்ளி விழா ஆண்டினை கடந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 25000 புத்தகங்கள் மாதந்தோறும் வெளியிடுவதென்பது இமாலயச்சாதனை. தனக்கென்று ஊடகம் பத்திரிக்கை மற்றும் பொதுவாழ்வில் முத்திரை பதித்த,நமது விகடகவியின் பிரம்மாக்களான மதன் சார் , சுதாங்கன் சார் ஆகியோரை தனது குருவாக நினைக்கும் 'ஏகலைவி'இவர்.சமீபத்தில் இவரை விகடகவிக்காக நேரில் சந்தித்து உரையாடும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

இவருடைய வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு ஒரு உதாரணமான ஒன்று. அதை அவர் வாய்மொழியாய் கேட்பது இன்னும் விசேஷம் என்ற நோக்கில் தான் அவரை நேரில் சந்தித்து உரையாடினோம். அந்தக் காணொளி இதோ வாசகர்களுக்காக...