தொடர்கள்
ஆன்மீகம்
கம்பங்குடி வம்சத்தின் கதை பால்கி

2023001016461242.jpg

சாஸ்தாப்ரீதி என்றாலே சாஸ்தா பூஜை, அய்யப்பன் பூஜை அன்னதானம் .

கடந்த ஐம்பதாண்டுகளில் சபரிமலை செல்பவர்கள் கேரளா தமிழகத்திலிருந்துதான் என்றிருந்த நிலை போய் தென்னக மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆறு வார மண்டல நோன்பிருந்து முறைப்படி பூஜை செய்து செல்பவர்கள் கோடிக் கணக்கில் அதிகரித்துள்ளனர்.

சாஸ்தாப்ரீதி கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் வாசகர்களுக்காக இதோ:-

20230010170103759.jpg

20230010170213867.jpg

தற்போது இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் தென்னக மக்கள் இந்தியா முழுவதும் வசிக்க அங்கிருந்தும் அவர்கள் சபரிமலை செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டு செல்ல அங்குள்ள மற்ற மாநிலத்தவரும் இந்த புனித யாத்திரையில் சரளமாக ஏராளமாக பங்கு கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

20230010170309428.jpg

20230010170405670.jpg

சாஸ்தாப்ரீதி என்னும் உத்தமமான வழிபாடும் கம்பங்குடி வம்சத்தாரால் கிடைத்த சிறப்புக்களே எனபது தான் உண்மை.

20230010170507861.jpg

இந்த வம்சத்தவர் நமது தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த அந்தணர்களே.அவர்களது குலதெய்வம் ஸ்ரீபூர்ணா புஷ்கலாம்பா சமேத குளத்தூரிலய்யன். இதோ குளத்தூரிலைய்யன் குடி கொண்டிருக்கும் அந்த ஆலயமும் வெவ்வேறு அலங்காரங்களில் அந்த மூலஸ்தானமும்.

20230010164939781.jpg

20230010165022642.jpg

20230010165101566.jpg

20230010165202578.jpg

20230010165239473.jpg

கரந்தையர் பாளையத்தில் இந்த புராதனமான் ஸ்ம்ப்ரதாயத்தை ஒட்டிய சாஸ்தா ப்ரீதி வருடா வருடம் ஆடி மாதத்தில் நடைபெறும். இந்த பெரு விழாவில் இந்த பாளையத்தைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களும் வருடத்திற்கொரு முறை ஒவ்வொரு கிராமமாக பொறுப்பேற்று நடத்துமாம். மற்ற கிராமங்களும் இதில் துணை நின்று பங்கு கொள்வர். அவ்விதம் தலைமைப் பொறுப்பேர்க்கும் கிராமம் கிழிக்கிராமம் என்றழைக்கப்படும். கிழி என்றால் பொறுப்பு என்று அர்த்தம்.

ஆதி சமூகமான கரந்தையர் பாளையம் பிராம்மண மஹா சமூகத்தாரால் நடத்தப்படும் சாஸ்தாப்ரீதி பெரிய அடியேந்திரம் என்று அழைக்கப்படுகின்றது.

சித்திரை 1 அன்று சாஸ்தா ஆலயத்தில் சமூகத்தார் கூடி மாலை பஞ்சாங்க படனத்திற்குப் பிறகு சாஸ்தாப்ரீதிக்கும் உகந்த நாள் குறிக்கப்படும். நாள் குறித்ததும், ஸ்தாபனக்க்காரர்களாகிய கம்பங்குடியார், செல்லப்பிள்ளை, யக்ஷி, சங்கிலி பூதத்தார் குண்டாந்தடி சாஸ்தா வம்சத்தவர்க்கு அழைப்பு அனுப்பப்படுமாம். அவர்களும் தவறாமல் வந்து கலந்து கொண்டு வைபவத்தை சிறப்பித்துத் தருவார்களாம். இது தான் காலம் தொட்டு நடந்து வரும் முறை என கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தனது வம்சத்தினரைப் பற்றிய வரலாற்று புத்தகத்தில் பெருமிதத்துடன் கூறுகிறார்.

அந்த சாஸ்தாப்ரீதியில் கணேசர், குரு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீதர்ம சாஸ்தாவை நான்கு குத்து விளக்குகளில் ஆவாஹனப்படுத்தி விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்குகளை யார் பார்ப்பினும் மெய் சிலிர்த்து போவது நிச்சயம். அப்படியொரு சாந்நித்தியத்தை அந்த பூஜா மண்டபத்தில் உணர்வது நிச்சயம்.

2023001017271375.jpg

இந்த கல்லிடைக்குறிச்சியை கரந்தயர் பாளயம் என்றும் அழைப்பர். ஜீவநதியாம் தாமிரபரணியின் தென் கரையில் அமைந்த அழகிய கிராமம். இது பொதிகை மையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அப்போது, அதன் இயற்கை எழிலை விவரிக்க வேண்டுமோ? ஊரின் வடபகுதியில் கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. நீர்வளம் நிலவளம் மிகுந்த இடம். இந்த இடம் கரந்தை நகர், கரந்தாபுரி, தென் கரந்தை என்ற பெயர்களல் அழக்கப்படுகிறன.

திருநெல்வெலி என்ற இடத்தில் மட்டும் தான் தமிழ் இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களுண்டு என்பது இங்கு போனஸ் தகவல்.

கம்பங்குடி வம்சம் ஆரம்பம்

இந்த ஊரில் விஜயன் என்ற அந்தணன் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். அவர்களுக்கு மக்கட் செல்வம் இல்லாத குறை இருந்தது.

அவரதில்லத்திற்கு வந்த ஒரு மஹான் கூறியபடி பம்பை நதிக்கு மேலேறி சபரி பீடமதில் ஸ்ரீசபரிஅன்னையின் அருள் பெறுவீர் எனில் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்ற அறிவுரையின் படி அங்கே சென்றார். அவரின் கட்டளைப்படி அருகே இருந்த கும்பதளம்(கும்பளம் தோடு) சிற்றோடையில் நீராடி இறைவனை வேண்டி நின்றார். அப்போது ஜோதிமயமான ஒளி ஒன்று தோன்றி அசரீரியாக அவரின் தவத்தை மெச்சியதாகவும், விரைந்து அவரது இல்லத்தில் வரவிருப்பதாகவும் அருள்வாக்கு கேட்டது.

ஆனந்தமடைந்த விஜயன் இல்லம் திரும்பினார்.

அவரதில்லத்திற்குஒரு நாள் சிறு பாலகன் வனத்தில் அலைந்து களைத்ததாகவும், பசிக்கும் இளைப்பற இடமும் கேட்க, அவர்களும், கம்பு தானியத்தில் கம்பங்கூழ் தானிருக்கிறது என்றிட அந்த பாலகனும் அதை விரும்பி ஏற்று புசித்தான். அந்த தம்பதியர் இடையே அந்த சிறுவனும் படுத்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து பார்க்கையில் அந்த சிறுவனைக்காணாது திகைக்க.” அங்கு எங்கும் ஒரே ஒளிமயமாக இருந்ததாம்.தம்பதியர் புலம்பியவாறு இறைவனைப் பிரார்த்தித்தனர். திவ்ய மங்கள ஸ்வரூபியாக பகவான் ஸ்ரீஅய்யப்பனாகிய ஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்த்தாவாக அவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து அந்த அந்தணனைப் பார்த்து, பக்தியில் சிறந்த பெரியோரே, கும்பளம் சிற்றோடையில் உமக்கு அசரீரியாக அருள் பாலித்தபடினான் இங்கு வந்துள்ளேன். உங்களுக்கு புத்திர பாக்கியம் கொட்டும்.உங்கள் குடும்பம் தழைத்தோங்கும். உங்கள் வம்சத்தில் வருகிற ஆண்-பெண் இரு பாலருக்கும் எப்போது நினைத்தாலும் யாம் அருள் புரிவோம். உமது குடும்பத்தினர் அனைவரும் எமது அடிமைகளாகவும், யாம் உங்கள் குடும்பத்திற்கு உடைமையாகவும் இருப்போம். எம்மைப் போற்றிப் பணிந்து எம்மயே உம்முடைய சொந்த புதல்வனாக கம்பங்கூழ் உணவளித்து ஏற்றுக்கொண்டதால் உமது பரம்பரைக்கு கம்பும் கொடி என்ற ஸ்தானப் பெயர் ஏற்படும். கம்பும் கொடியும் மருவி கம்பங்குடி ஆயிற்று.

இந்த குடும்பத்தார் தொடங்கி வைத்த சாஸ்தாப்ரீதி தான் கடந்த 900 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைமெற்று வருகிறது.

உலகில் உள்ள தர்ம சாஸ்தா க்ஷேத்திரங்களுக்கெல்லாம் ஒரு தலைமை க்ஷேத்திரமாகவே இந்த கரந்தையர் பாளையம் க்ஷேத்திரம் விளங்குகிறது. சாஸ்தா ப்ரீதி என்ற விசேஷ வழிபாடு முதன் முதலாக தொடங்கிய ஸ்தலம் இங்கு தான்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் எங்கு பெருமாள் வழிபாடு நடந்தாலும், அது திருப்பதி வெங்கடாஜலபதிக்குப் போய் சேருவது போலத்தான் இதுவும். உலகினில் எங்கு சாஸ்தாப்ரீதி நடந்தாலும் அது கரந்தாபுரியான கல்லிடைக்குறிச்சியில் குடி கொண்டுள்ள ஸ்ரீகுளத்தூரிலய்யனுக்குத்தான்.

கம்பங்குடி வம்சத்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் கௌரவிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

2023001016571340.jpg

இதற்கு இன்னொரு அசைக்கமுடியாத சான்று ஒன்று உண்டு. அதாவது, சாஸ்தா ப்ரீதிகளில் சாஸ்தா வரவு விருத்தங்கள், பஞ்சகங்கள் மற்றும் பாடல்கள் பாடுவது மரபு. அனைத்திலும் குளத்தூரிலய்யன் என்றே இருக்கும்.

அம்மாதிரி சாஸ்தா வரவு பாடலுக்கு தன்னையே மறந்த பக்தரின் உணர்வு இங்கே....

குஞ்சரவதனா உந்தன் தஞ்சமாமலர் பாதத்தை

தஞ்சமென்றடி பணிந்தேன் தாரகா போற்றி போற்றி

வஞ்சிமாமலை மீது வாழும் தெங்குளத்தூரில் அய்யன்மீதில் பாட

சஞ்சலமகற்றி எந்தன் நெஞ்சில் குடி கொள்வாய்

என்று தொடங்கும் கணேசர் வணக்கம் முதல் வேதியர் தான் புகழும் வீரமணிகண்டா உன் பதம் நம்பினேன் என்று மங்கள ஆரத்தி வரை உள்ள பாடல்களில் எல்லாவற்றிலும் வரும் குளத்தூரிலய்யன் இவர் தான்.

தர்ம சாஸ்தா மீது அவரது திருவிளையாடல்களையும் லீலைகளையும் ஜீவன் உள்ள பாடல்களாகவும், விருத்தங்களாகவும், பஞ்சகங்களாகவும் இயற்றிய மணி தாசரும், சுமார் 150 வருடங்களுக்கு முன்பாகவே ஹரிவராசனம் என்ற சொல்லை அய்யப்பனே எடுத்துக் கொடுத்து அஷ்டகம் பாடிய குளத்தி அய்யரும். ஜவந்திபுரம் – ஜவந்தியூர் – தளபதிசமுத்திரம் – பெருவேம்புடையார் ஆகிய ஸ்தலங்களில் கோயில் கொண்டுள்ள தரம சாஸ்தாவின் நாமங்கள அடங்கிய மந்த்ர ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த ரைவதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாய நமோ நமஹ என்று தொடங்கி ப்ரம்மா விஷ்ணு சிவாத்மைக்கிய ஸ்வரூபாயை நமோ நமஹ என்று முடியும் ஸ்ரீமஹ சாஸ்த்ரு அஷ்டோத்திர சத நாமாவளி எழுதிய கவி ஸ்ரேஷ்டர் விஜய பட்டர் என்பவரும், 90 வருடங்களுக்கு முன்னம் அய்யனார் சரித்திர சுருக்கம் என்ற நூலை எழுதிய சுந்தரம் குளத்து அய்யரும் இந்த கம்ப்ங்குடி வம்சத்தவரே.

குளத்தூரிலய்யனே சரணம் அய்யப்பா.