தொடர்கள்
பேரிடர்
ஜோஷி மட் – புதைகிறதா?

20230016175937486.jpeg

திவ்ய தேசம் அழிகிறதா?

முதலில் புராணத்தையும் பின்னர் காரணத்தையும் காண்போம்.

புராணம்

பரிமளவல்லி தாயார் சமேத பரம புருஷ பெருமாள் குடி கொண்டு அருள் பாலிக்கும் 108 திவ்ய ஸ்தலங்களுள் இது முக்கியமாக கருதப்படுகிறது.

இந்த தலம் பல செங்குத்தான உயர்ந்த சிகரங்கள் மற்றும் மிகவும் தாழ்ந்த பள்ளத்தாக்குகள்கொண்ட பிரம்மிப்பூட்டும் மலைத்தொடர் ஆனதால் இந்த பகுதியையே பெருமாள் வ்யாபித்துள்ளார் என்ற உணர்வை பக்தர்களுக்கு அளிக்கிறது. இந்த பரந்த மலைப்பகுதியில் ஏற்பட்ட நில மாற்றங்களால் முந்தைய சயனக் கோல பெருத்த மூலவர் விக்ரகம் பூமிக்குள் மறைந்துவிட்டது.

பின்னர் மிஞ்சிய கோயில் வளாகத்தில் சுமார் 2525 வருடங்களுக்கு முன்னால் ஆதி சங்கர பகவத் பாதாள் இங்கு பிரதிஷ்டை செய்த விக்ரஹங்களில் நரசிம்மர் இப்போது பிரதான மூலவராக கருதப்படுகிறார். சுமார் ஒரு அடி உயர சாளகிராம நரசிம்மரின் நுண்ணிய விக்ரகம் தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். நரசிம்மரின் வலது கை காலப் போக்கில் மெலிந்து வருவதாகவும் அது பிரிந்து விட்ட நிலையில் இந்த மலைப் பகுதி மாறுதல் அடைந்து பத்ரிநாத் புண்ணியத் தலம் மறைந்து விடுமென்று பக்தர்கள் ஒரு விஷயத்தை நம்புகின்றனர்.

ஒருவேளை இதன் விளைவோ தற்போது ஏற்பட்டுள்ள நிலப் பிசகுகள் ?

இத்துணை விவரங்களையும் எனது உறவினர் ஸ்ரீமான். சாய்ராம் அவர்கள் கூறியது. இந்த ஸ்தலத்தை 2008 மற்றும் 2019 லும் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர். 108 திவ்ய தேசங்களில் பூமியில் காணக்கிடைக்கும் 106 திவ்ய தேசங்களை இரு முறை வலம் வந்தவர்.

20230016180048948.jpeg

ஜோஷிமட்டைப் பற்றி அவர் எழுதி வெளியிட்டுள்ள பாசுரங்கள் பாடப்பெற்ற வைஷ்ணவ ஸ்தலங்கள் என்ற புத்தகத்திலிருந்ததையும், அவருடன் தொடர்பு கொண்டு பேசியதையும் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.

ஆதி சங்கரர் அமைத்த விக்ரஹங்களை 2019ல் புதியதாக கட்டப்பட்ட கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்றும் கூறுகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக போர் நிலை அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷி மட் என்னுமிடத்தில் பிளந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கும் கட்டிடங்களை சமோலி மாவட்ட நிர்வாகம் “X” மார்க் இட்டு அடையாளப்படுத்தி வருகிறது..

20230009221216645.jpg

அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உத்தரகாண்ட் அரசு நிவாரண முகாம்கள் மற்றும் உலர் உணவுப் பொருள்கள் மட்டுமின்றி, மருத்துவக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுகாதாரப் பரிசோதனை செய்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கி வருகின்றது.

20230009221255465.jpg

நிவாரண முகாம்.

அந்த பகுதியை பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது,

ஜோஷிமத் நிலைமை குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பிகே மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். சம்பத்தப்பட்ட மத்திய மாநில அமைச்சகங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, மொத்தம் 603 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு 68 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கிடையில், கூட்டத்தில், ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஏழு வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவை மையம் அமைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், ஐஐடி ரூர்க்கி, வாடியா ஹிமாலயன் ஜியாலஜி நிறுவனம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹைட்ராலஜி மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து கொடுக்க பணிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைப்புக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் போன்ற புனித இடங்களுக்கு ஜோஷிமத் ஒரு நுழைவாயிலாக இருப்பதால் இந்த போர் நிலை செயல்கள் வெகு துரிதமாக நடந்தேறி வருகின்றன. இந்த சார் தாம் என்ற புனித நான்கு புண்ணிய ஸ்தலங்களை பக்தர்கள் சிரமமின்றி யாத்திரை மேற்கொள்ள வைப்பதை தனது கனவாக பிரதமர் மோடி வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

என்டிபிசி சுரங்கப்பாதை மற்றும் சார் தாமுக்கான பிற கட்டுமானத் திட்டங்களே மூழ்குவதற்குக் காரணம். அவை நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இந்த நிலைமையை இயற்கை பேரழிவாக கருத வேண்டும். பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்தில் செய்தது போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் அறை கூவல் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், உத்தரகாண்டின் ஜோஷிமத் நெருக்கடியை தேசியப் பேரிடராக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரிய மனு செவ்வாய்க்கிழமையன்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுமையும் மன உறுதியும் தேவை. ஜோதிடர்கள் முதல் தர்ம சாஸ்திரிகள் வரை பல்வேறு நிபுணத்துவம் கொண்டவர்களை நாங்கள் அழைத்துள்ளோம். ஜோஷிமட்டைப் பாதுகாப்பதற்கான சடங்குகளைப் பற்றி அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். இன்று சடங்குகளைத் தொடங்குவோம்,”என்கிறார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி.

20230009221409862.jpg

ஜனவரி 22-31 காலத்தில் நரசிங் கோவிலில் சிறப்பு யாகம் நடத்த உள்ளோம். அதையும் செய்வோம். நிலைமைக்கான காரணத்தை ஆராய நிபுணர்களும் அழைக்கப்படுவார்கள். உள்ளூர் மக்களுடன் தொடர்ந்து நிற்போம் என்று சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். சங்கர மடத்தில் நிறைய விரிசல்கள் ஏற்பட்டுள்ளனவாம்.

இந்த பேரிடரிலிருந்து காப்பாற்ற மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். பிரதமர் இந்த் விஷயத்தில் தொடர்ந்து அண்மை விவரங்களையும் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இது நிலமட்டத்திலிருந்து 6,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் குளிர்காலம் உச்சத்தில் இருக்கிறது. இந்த காரணங்களும் நிவாரண பணிகளுக்கு இடைஞ்சலாகவே இருக்கின்றன.

கர்வால் இமயமலையில் உள்ள ஜோஷிமத், கடந்த கால நிலச்சரிவுகளின் சுமார் 500-மீட்டர் இடிபாடுகளில் தான் குடியேறியுள்ளது, இது குறைந்த மண் தாங்கும் திறன் மற்றும் நகரத்தின் "மூழ்குவதற்கு" ஒரு முக்கிய காரணம், மக்கள் தொகை மற்றும் சுற்றுலாவின் அழுத்தத்திற்கு கூடுதலாக, நெருக்கடி மண்டலத்தை அடைந்துள்ள நிபுணர்கள் மற்றும் மத்திய குழுவின் முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நில பிசகல்களுக்கு கீழ் காணும் காரணங்களும் சொல்லப்படுகின்றன.

  • திட்டமிடப்படாத குடியேற்றம் மற்றும் நீர் கசிவு காரணமாக வடிகால் அமைப்பு இல்லாததால் தாங்கும் திறன் மேலும் குறைந்தது.
  • NTPC சுரங்கப்பாதை காரணமாக இருக்கலாம் ஆனால் இந்தியாவின் புவியியல் ஆய்வு, IIT ரூர்க்கி, WIHG ஆகியவற்றின் எந்த நிபுணரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
  • மக்கள்தொகை மற்றும் சுற்றுலா அழுத்தம் காடழிப்பு மற்றும் நிலையற்ற நிலப்பரப்பை ஆக்கிரமித்தது
  • நிலச்சரிவுகள் அடிக்கடி நடப்பதுதான் மேலும் அவை கட்டுமானத்தை கடுமையாக சேதப்படுத்துகின்றன.
  • ஸ்திரத்தன்மையற்ற நிலப்பரப்பு
  • கசிவு மற்றும் நீரின் ஓட்டம் போன்றவற்றின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் தீவிர விசாரணை தேவை.
  • ஒழுங்கு மற்றும் கட்டுப்படில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள்.
  • உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் விரிசல்களை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
  • 2013 & 2021 ல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிலப்பரப்பில் ஏர்பட்ட அரிப்பு மற்றும் உறுதியற்ற தன்மை
  • ஜோஷிமட்டின் சில பகுதிகள் 'மூழ்கிக் கிடக்கும் மற்றும் குடியிருப்பாளர்களை மாற்ற வேண்டும்' என்று 17 ஆண்டுகள் பழமையான கணக்கெடுப்பு கூறியிருந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காதது.
  • ஜோஷிமட் ஒரு "மூழ்கிவரும் நகரம்". இன்று இருக்கும் அவசர நிலை ஒரே இரவில் ஏற்பட்டதல்ல. இது பல தசாப்தங்களாக பொறுப்பற்ற கட்டுமானம் மற்றும் அறிவியல் பரிந்துரைகளை அப்பட்டமாக மீறியது, இது ஆராய்ச்சி குழுக்கள் முன்னிலைப்படுத்தியது.

வருடத்தில் இரு முறையாவது இந்த சார் தாம் யாத்திரை மேற்கொள்ளும் ஆன்மீக ஆர்வலர் அடிக்கடி நிகழும் நிலச்சரிவை சுட்டிக்காட்டுகிறார். முறையின்றி புத்தீசல் போன்றும் விரியும் கட்டடங்கள் ஆகியவற்றை காரணம் காட்டுகிறார். உள் கட்டமைப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டுவது சேலம் எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வைத்த நாட்டின் வளர்ச்சியில் சந்தோஷப்படாத அமைப்புக்கள் போன்றவை தாம். சாலைகள் வந்துவிட்டால் இவர்களது தன்னிஷ்டமாக போக்குவரத்து வாடகை நிர்ணயிப்பில் யில் துண்டு விழுந்துவிடும். ரூ.75 ஆயிரம் வாடகை என்றிருந்த பஸ் ஏற்பாடு இந்த வருடம் 1.5 லட்சமாகிவிட்டது.

இந்த இடரில் மத்திய மாநில அரசுகள் துணையாகவே இடைவிடா இணை முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த பேரிடருக்கு ஒரு நிலையான தீர்வு விரைந்து காணும் என்றும்

கடைசி செய்தி :

ISRO படங்கள் 5.4 செ.மீ அளவுக்கு ஜோஷிமட் மூழ்கியிருப்பதாக காட்டுகின்றன