ருக்கு, ருக்கு, எனக் கூப்பிட்டபடி வந்தார் அய்யாசாமி. இப்போ என்ன கோரோனோ தொறத்திறதா உங்களை ஏன் பதறிண்டு ஓடி வரேள்? ஆமா ருக்கு, கணக்கு இடிக்குது. இன்றைக்கு ஆத்திற்கு மளிகை சாமான் வாங்கினியோன்னோ, ஆமாம் அதற்கென்ன இப்போ ? என்றாள் இரண்டுவாட்டி தொகை டெபிட் ஆயிருக்கே ? என ஏதோ புதிதாக தான் கண்டுபிடித்தது போலச்சொன்னார். அதுவா? நன்னாப்பாருங்கோ, நான்தான் இரண்டு வாட்டி கார்டை ஸவைப் பண்ணி இருப்பேன் என மெதுவாக சொன்னாள் ருக்கு. எதுவோ, இரண்டு செலவு ஆயிருக்கே ஏன்? என்றார் அய்யாசாமி. ஒரு பில் நம்ம ஆத்திற்கு, இன்னொரு பில் அந்த ஆத்திற்கு என்றாள். என்ன விவரமா சொல்லு ருக்கு இந்தாம்,அந்தாம் சொல்லி பீதியைக் கிளப்பாதே! என்றார். ஓ .. ஓ இந்த நினைப்பு வேற இருக்கா உங்களுக்கு? கடந்த மாதம் லாக்டவுன் ஆனதாலே அந்த ஆத்திற்கு ஒரு மாதம் மளிகை சாமான் வாங்கி கொடுத்தோம் இல்லையா?! ஆமாம், அவாளுக்குதாண்ணா, திரும்ப வாங்கினேன். இந்த பெட்டியில்தான் இருக்கு, கூடவே கொஞ்சம் காய்கறி வாங்கிண்டு கொண்டுபோய் அவாத்திலே சேர்த்திட்டு வாங்கோ என்றாள் ருக்கு
ருக்கு, அவா ஆத்திலே இருக்கிற அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையிலே மாற்றுத் திறனாளிகள்தான் பாவம்தான் நாமும் உதவி செய்ய வேண்டியதுதான்,.. ஆனால்..
இதை சொன்னால் ருக்கு வருத்தப்படுவாளே, அவளிடம் இதைச்சொல்வதா வேண்டாமா என யோசித்து பேச்சை பாதியில் நிறுத்தினார்
என்ன சொல்லுங்கோ என்றாள்.ருக்கு.
ருக்கு, நாம நல்லது என நினைத்துதான் கடந்த மாதம் செய்தோம், அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தன்னார்வலர்களும், அரசு நிர்வாகமும், உதவிகள் பல செய்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்தது அதைப்பார்த்ததிலிருந்து எனக்கு மனசு கேட்கலை ருக்கு,
இவர்களைப் போல பலர் இருக்க உதவிகள் ஒரே இடத்திற்கு, அவர்கள் கேட்காமலே தேவைக்கு மிகுதியாக கிடைப்பதும்,அவரைப் போன்ற பலர் பட்டினியாகப் பொருள் உதவி கிடைக்காமல் இருப்பதையும் நினைத்தால் பாவாமாக இருக்கு ருக்கு என்றார் அய்யாசாமி அண்ணா, நீங்க சொல்றது சரிதான் ஆனா பேப்பரில் வருகிற எல்லா விஷயங்களும் உண்மை என நம்பக் கூடாது என பீடிகைப் போட்டாள் ருக்கு.
என்ன இப்படி சொல்கிறாய்? நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்,
அதில் அவர்கள் சிரித்தபடி நின்று பெருள்களை வாங்குகிற மாதிரி போட்டோவெல்லாம் வந்தது தெரியுமோ உனக்கு ? என்றார் அய்யாசாமி.
அய்யா, சாமி, அதே பேப்பரைத்தான் நானும் படிக்கிறேன், இதையே நானும் அவர்களிடம் கேட்டேன், அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? என திரும்பக் கேட்டாள் ருக்கு.
நிறைய தன் ஆர்வலர்கள் உதவி செய்ய வந்ததும்,போட்டோ எடுத்ததெல்லாம் உண்மைதான், ஆனால் எங்கள் ஒரு மாத தேவைக்கான அத்தியாவசிய பொருள்கள் எங்களுக்கு கிடைத்து விட்டது, ஆகையால் தேவைப்படும் வேறு நபர்களுக்கு இதனை கொடுத்து உதவிடுங்கள் என சொல்லி வாங்க மறுத்து விட்டோம்,
வாங்குவதுபோல் போட்டோவிற்கு போஸ் மட்டும் கேட்டு அவர்கள் வற்புறுத்தியதால்,அதையும் கொடுத்தோம் என்றார்கள் நான் கேட்டபோது.
அப்படி செய்த அந்த பெரும் மனது படைத்த அந்த மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய நலல செய்திகளை இப்போ வரும் செய்தித்தாளில் பார்க்க முடியாதுண்ணா.. மேலும் உதவியை ஏற்க மறுத்து விட்டதால் அவர்களுக்கு யார்கிட்டே இருந்தும் உதவிகளும் இனி கிடைக்காது ஆகையால் அவர்களுக்கு நாம்தான் மீண்டும் இந்த மாதமும் உதவிட வேண்டும், எனவேதான் அவர்களுக்கும் சேர்த்தே மாத மளிகைப் பெருள்களை வாங்கினேன் என்றாள் ருக்கு. லாக்டவுன் முடிகிறவரை இதே மாதிரி கார்டு அடிக்கடி டெபிட் ஆகும் பயப்படாதீங்கோண்ணா என்றாள் ருக்கு. நான் அதற்கு பயப்படவில்லை, வங்கி கணக்கில் சராசரி மினிமம் இருப்பு இருக்கனுமோன்னோ, அதற்குத்தான். வாழ்க்கை எனும் கணக்கிலும் புண்ணியத்தை மினிம இருப்பையாவது சேர்த்து வைக்கனும்ணா! அதுக்குத்தான் ருக்கு, நீ இருக்கியே, நான் செய்த புண்ணியப்பலனாக என்று அய்யாசாமி சொன்னதும் நிஜமாகவே வெட்கப்பட்டாள் ருக்கு.
Leave a comment
Upload