தூய்மைப் பணியாளர்களுக்கும் ......
பொதுவாக அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு என்று தனியாக அறை எல்லாம் இருக்காது தங்கள் உடமைகளை தங்களுக்கு பரிச்சயமான ஊழியரின் அறையில் வைத்து இருப்பார்கள் மதிய உணவு கூட திறந்த வெளியில் அலுவலகத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் தான் இருக்கும். தலைமைச் செயலாளர் இதை எங்கோ கவனித்திருக்கிறார் போலும் எனவே எல்லா அரசு அலுவலகங்களும் தூய்மைப் பணியாளருக்கு என்று தனி அறை ஒதுக்க வேண்டும் அவர்கள் இளைப்பாற மதிய உணவு உட்கொள்ள போதிய வசதி செய்து தரவேண்டும் என்று எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார் கூடவே மாவட்டத்தில் உள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது என்று உறுதிப்படுத்த புகைப்படம் எடுத்து அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
மல்லிகார்ஜுன கார்கே
ஒருவழியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடந்திருக்கிறது சோனியா காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் சோனியா குடும்ப ஆதரவு இருக்கிறது என்று தெரிந்ததால் தான் அவருக்கு 7000 ஓட்டு கிடைத்தது தலித் வகுப்பைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே 12 முறை தேர்தலை சந்தித்து பதினோரு முறை வெற்றி பெற்றிருக்கிறார் ஒன்பது முறை கர்நாடகா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி பிரியங்கா காந்தி இருவரும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேரில் போய் வாழ்த்து சொன்னார்கள். பிரதமர் மோடியும் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.
சட்டசபையில் எடப்பாடி அணி
சட்டசபையில் தனக்குப் பக்கத்தில் ஓபிஎஸ் உட்காரக்கூடாது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர் பி உதயகுமார் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அவர்தான் அங்கு உட்கார வேண்டும் ஓபிஎஸ்-க்கு மாற்று இடம் தாருங்கள் எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார் பேரவைத் தலைவருக்கு பேரவைத்தலைவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவே கேள்வி நேரத்தின் போது எடப்பாடியை இந்த பிரச்சினையை கிளப்ப பேரவைத்தலைவர் அப்பாவு நீங்கள் நீண்டகால சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சராக இருந்து இருக்கிறீர்கள் கேள்வி நேரத்தில் எந்த குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா கேள்வி நேரம் முடிந்ததும் பேசுங்கள் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் விடாப்பிடியாக எடப்பாடி பேச முற்பட அவருக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க கேள்வி நேரத்தில் பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் துரைமுருகன் வெறுத்துப்போய் இவர்களை வெளியேற்றுங்கள் என்று பேரவை தலைவரிடம் கோரிக்கை வைக்க அவர் காவலர்களை கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டு வெளியேற்றி அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தார். இதில் வேடிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் எதுவுமே தெரியாதது போல் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு சீரியசாக படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தார் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அமைதி காத்தனர் அப்படித்தான் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
Leave a comment
Upload