தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

2022921202533321.jpeg

வெள்ளைப் புறாவை பறக்க விட்டார் ஓபிஎஸ்.

சமாதானம் பேச அந்த புறா சசிகலா வீட்டுக்கு போச்சா இல்லையா

பஞ்சாப் முதல்வர் வீடு விவசாயிகள் முற்றுகை

இப்பதான் நீங்க கரெக்டான விலாசத்திற்கு வந்திருக்கீங்க

முதல்வரின் ஆலோசனைப்படி தான் பேரவைத் தலைவர் செயல்படுகிறார் எடப்பாடி

இது எப்பவும் நடப்பது தானே தலைவரே இது என்ன புதுசா கேக்குறீங்க உங்களுக்கு தெரியாதா

ஆங்கிலத்தை கட்டாயப்படுத்துவது தமிழுக்கு அபாயம் அண்ணாமலை

அதாவது தலைவர் ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்று சொல்கிறார் அப்படித்தானே

கட்சித் தேர்தல் விதி மீறல் சசி தரூர் மீண்டும் குற்றச்சாட்டு

இவருக்கு மட்டும் தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிஞ்சு போச்சு

எந்த விசாரணைக்கும் தயார் சசிகலா

நீங்க பாக்காத விசாரணையா ஜெயிலா

வங்கியிலிருந்து தேவரின் தங்க கவசம் வாங்கும் உரிமை எனக்கு மட்டுமே திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் மனு

பேசாம உங்க கட்சி ஆபீஸ் கோர்ட்டு வாசலில் வச்சுடுங்க சவுரியமா இருக்கும்

பள்ளி தேர்வு வினாக்கள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பயனற்றது நீதிபதிகள் எச்சரிக்கை

இதத்தான் பசங்களும் சொல்றாங்க நீங்க சின்ன பசங்க சொல்றது நம்ப மாட்டேங்கறீங்க

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தடை திருமாவளவன் மனு தள்ளுபடி

திருமாவளவன் பாவம் ரெண்டு மாசமா ஆர்எஸ்எஸ் ஜுரத்தில் அவஸ்தைப் படுகிறார்.

இந்தியாவில் போலீஸ் பணி எளிதல்ல பிரதமர் மோடி

ஆளும் கட்சி தொந்தரவு ஜாஸ்தியா இருக்கும்ன்னு சொல்றாரு

விவசாயிகளுக்கு பாதிப்பு இருக்காது 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைகிறது அமைச்சர் தங்கம் தென்னரசு

இப்படித்தான் பொய்யா நம்பர மாதிரி சொல்லணும்

காவிரி நதியிலிருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் திட்டம் அமைச்சர் துரைமுருகன்

இதை இன்னும் எத்தனை வருஷம் தான் சொல்லுவீங்க

மக்கள் ஆதரவு எங்கள் பக்கம் இருக்கிறது ஓபிஎஸ்

அது போதாது தலைவரே தொண்டர்கள் நம்ப பக்கம் இருக்கணும்.