மஞ்சள் புடவையில் கீர்த்தி சுரேஷ்
ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா படம் தெலுங்கு தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகிறது. சென்ற வாரம் கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளன்று வெண்ணிலா என்ற கிராமத்து பெண் வேடத்தில் மஞ்சள் புடவையில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் படத்தை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது.
சமந்தாவுக்கு பதில் தமன்னா
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது போன படத்தில் குத்தாட்டம் போட்ட சமந்தா இரண்டாம் பாகத்தில் இல்லை.முதலில் இந்தி நடிகை என்று சொன்னார்கள். இப்போது தமன்னா என்று முடிவு செய்துவிட்டார்கள் ஏற்கனவே கே ஜி எப் படத்தில் தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.
மாளவிகா மோகனன்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இன்னும் பெயர் தீர்மானம் ஆகாத படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கியிருக்கிறது மாளவிகா மோகனன் நாயகி அதெல்லாம் இருக்கட்டும் இப்போது எல்லா தமிழ் படமும் தெலுங்கு தேசத்தில் தான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் வருமானம் எல்லாம் அங்கே தானே போகும் தமிழ் ஆர்வலர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்களா
தெலுங்கிலும் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 உள்பட நிறைய படங்களில் நடிக்கிறார் இப்போது தெலுங்கிலும் நடிக்க தொடங்கிவிட்டார் இந்தப்படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்சய என்று இரண்டு ஹீரோக்கள்
வாடகைத்தாய் எல்லாம் இல்லை
பின்னணி பாடகி சின்மயி வைரமுத்துவை பாடாய் படுத்தியவர் அவ்வப்போது கருத்துக்கள் சொல்வார் எல்லாம் டமால் டூமில் டைப் தான் ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக தகவல் சொன்னார் ஆனால் சின்மயி வளைகாப்பு சீமந்தம் போட்டோக்கள் எல்லாம் வெளியிடவில்லை.எனவே இவரும் நயன்தாரா மாதிரி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்என்று வதந்தி பரவ அவர் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு நானே சொந்தமாக பெற்றுக்கொண்டேன் என்று போட்டோ மூலம் சொல்லியிருக்கிறார்.
Leave a comment
Upload