மக்கள் பார்வையில் கம்பர்
பாலகாண்டத்தில் ஆற்றுப்படலத்தின்
பாடல்
நீரிடை உறங்கும் சங்கம்
நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு
தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை
துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்
பொழிலிடை உறங்கும் தோகை
நீருக்கு அடியில் இருக்கும் சங்குககள்
தண்ணீரின் மேற்பரப்பில் யார்
இடையூறு இன்றி உறங்குகின்றன
எருமைகள் மர நிழலில் உறங்குகின்றன
மாலை அணிந்தோர் நடமாடிக்
கொண்டிருந்தாலும் அம் மாலையில்
வண்டுகள் உறங்குகின்றன
திருமகள் நிரந்தரமாக இடம்
பெயராமல் நிம்மதியாக தூங்குககிறாள்
ஆமைகள் சேற்றிலே உறங்குகின்றன
முத்துச் சிற்பிகள் நீரில் உறங்குகின்றன
அன்னங்கள் நெற்போரிலே
உறங்குகின்றன
மயில்கள் சோலைகளில்
உறங்கிக்கொண்டிருக்கின்றன
பிறர் இடையூறு இன்றி அவரவர்
வேலையை பார்ப்பதால்
கவலையின்றி மனிதர்களும்
நிம்மதியாக உறங்குகின்றன
என்று உரைப்பதின் மூலம்
கோசல நாட்டு
மக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக
இருந்தார்கள் என்பதை விளக்குகிறார்.
கோசல நாட்டில் திருமள் இடம்
பெயர்தலின்றி செல்வம்
தவறான வழியில் பாயுமோ
என்ற அச்சமின்றி தூங்குகிறாள்
என சாதாரண பாமர மக்களுக்கும்
புரியும் வகையில்
கவி பாடிய கம்பரை போற்றுவோம்
பாராட்டுவோம், கொண்டாடுவோம்
மீண்டும் சந்தித்து சிந்திப்போம்....
Leave a comment
Upload