தீபாவளி ஒவ்வொரு வருடமும் மறக்க முடியாத அனுபவங்களை பட்டாசு போல வெடித்து விட்டு செல்லும்.
பெரிய நகரங்களை போல பெரிய பரபரப்பு இல்லாமல் இருந்தாலும் தீபாவளி கொண்டாட்டம் என்பது குளு குளு ஊட்டியில் வெரைட்டியாக களை கட்டுவதை பார்க்க முடியும் .
அதிலும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் தீபாவளி மக்கள் வாங்கும் புத்தாடைகளை கொண்டு அழகாக பிரதிபலிக்கும் ஒன்று .
தீபாவளி புத்தாடைகள் ஊட்டி மலர்களை போல இருப்பது தான் ஆச்சிரியமான ஒன்று .
ஊட்டி மெயின் பஸாரில் உள்ள வெரைட்டி ஹால் என்ற நூறு வயது ஜவுளி கடை வருடந்தோறும் தீபாவளியை கொண்டாட சிறப்பாக ரெடியாகுவது அதன் வெரைட்டி புத்தாடைகள் தான் .
ஊட்டியை பொறுத்தமட்டில் தீபாவளி புத்தாடைகள் வாங்க உள்ளுர் வாசிகள் தேர்ந்தெடுக்கும் கடைகள் பாரம்பரியமான ஒன்றை தான் .
பாரம்பரியமான ஜவுளி கடை வெரைட்டி ஹால் சொந்தக்காரர் ஜெயந்தி லாலை அவரின் கடையில் சந்தித்தோம் .
" எங்க கடை கடந்த நூறு வருடமாக ஆடைகள் விற்பனை தொழிலை செய்து வருகிறோம் .
எங்க தாத்தாவுடைய அப்பா சௌபாக் மூல் 1899 ஆம் வருடம் ஊட்டி வந்து மேட்டுப்பாளையம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை அமைக்க பட்ட மலை ரயில் பணிக்கு ஒரு கருவூலமாக செயல் பட்டு வந்துள்ளார் .
என் தாத்தா லூன் கரண் பரேக் தான் இந்த வியபாரத்தை இங்கு துவக்கினார்.
என் அப்பா மூல் சந்த் பரேக் எழுபத்தி ஐந்து வருடத்திற்கு மேல் இந்த தொழிலை நிர்வகித்தார் அவருடன் கைகோர்த்து நான் 48 வருடமாக நிர்வகித்து வர என் மகன் ஹர்ஷத் பரேக் தற்போது எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறார் .
ஒரு காலத்தில் தீபாவளி , கிறிஸ்துமஸ் மற்றும் ரம்சானுக்கு தான் புத்தாடை வாங்க வருவார்கள் அதிலும் பண்டிகைகளுக்கு குடும்பத்துடன் வந்து புது துணி எடுப்பது ஒரு திருவிழா கோலம் தான் .அதே சமயம் இப்பொழுது எல்லாம் இளைஞர்கள் நன்றாக சம்பாரிக்க துவங்கியதால் வருடம் முழுவதும் வித வித மான ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இது கடந்த 15 வருடமாக நான் பார்க்கும் ஒன்று .
எங்களிடம் மிக சிறப்பான சாரிகள் தான் உள்ளது . காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு நெய்பவர்களை நாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு ஜெரி , டிசைன் போன்றவைகளை கொடுத்து புடவைகளை தயாரிக்க கூறுகிறோம் .மிகவும் அருமையான புதுமையான வடிவமைப்பை எங்க கஸ்டமர்களுக்கு தருவதில் தான் தீபாவளி உட்சாகம் களை கட்டுவதை உணரமுடிகிறது .
நாங்க ஏராளமான கஸ்டமர்களை சந்தித்துள்ளோம் .
உள்ளூர் வாசிகளை தவிர வெளி மாநில கஸ்டமர்களும் எங்க கடைக்கு விஜயம் செய்ய தவறியதில்லை .
அந்த காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் எங்க கஸ்டமர்கள் .
பின்னர் வெலிங்டன் ராணுவ குடும்பங்கள் எங்க கஸ்டமர்கள் அதே போல வெளியூரில் இருந்து இங்கு வந்து எங்க கடையில் ஆடைகள் வாங்குபவர்கள் ஏராளம் அதிலும் இங்கு உள்ள இன்டர்நேஷனல் ஸ்கூல்களில் படிக்கும் குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் எங்க கடையில் இருந்து தான் .
நீலகிரி கலெக்டர் குடும்பம் முதல் இங்கு வரும் வி வி ஐ பி களும் எங்க கஸ்டமர்கள் .
முன்னாள் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா எங்களிடம் தான் குடும்பத்துடன் வந்து டிரஸ் வாங்குவார்கள் .
கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ஊட்டி வருகையின் போது கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா மேடம் எங்க கடையில் வாங்கின சாரி அணிந்து கொண்டு தான் ஹெலிபேடில் ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பத்தாரை வரவேற்க ,
ஜனாதிபதி மனைவி காலெக்டரின் சாரியை பார்த்து பிரமித்து நானும் இதே போல சாரி வாங்கவேண்டும் என்று கேட்க , கலெக்டர் ஜனாதிபதி மனைவியை எங்க கடைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய , நாங்களும் இரவு 10 மணிவரை காத்திருந்தோம் அவரின் நான் ஸ்டாப் நிகழ்வினால் வரமுடியாமல் போனது .
ஒரு விஷயம் எங்க கடை சாரி டிசைன் ஜனாதிபதி குடும்பத்தாரை கவர்ந்தது மிக்க மகிழ்ச்சி தான் என்கிறார் .
கடந்த இரண்டு வருடம் தான் கோவிட் தொற்றால் பாதிக்க பட்டோம் பின் தற்போது இந்த தீபாவளி பிசினஸ் அருமை . ஊட்டியில் ஒரு பெரிய ஜவுளி கடை திறக்கப்பட்டு எங்க கஸ்டமர்கள் கூட புதிய வரவை தேடி சென்று விட்டனர் .அது பாரம்பரிய பிசினஸ் செய்யும் எங்களை போன்றவர்களுக்கு ஆட்டோ பாம் போல தான் இருந்தது .
அதே சமயம் எங்க கஸ்டமர்கள் எங்க சர்வீஸ் மற்றும் குவாலிட்டியை அறிந்து சுவைத்து புரிந்து கொண்டதின் விளைவு அது அங்கு கிடைக்கவில்லை என்று இந்த தீபாவளிக்கு மீண்டும் எங்களின் சிறிய கடைக்கு திரும்பி வந்து விட்டது தான் ஒரு இனிய பாரம்பரிய வெரைட்டி தீபாவளி .
மற்ற ஒரு விஷயம் எங்க அறுபது ஆண்டு பெண் கஸ்டமர்கள் " இங்கு 60 ஆண்டுக்கு முன் வாங்கின சாரி அப்படியே இருக்கு பாருங்க " என்று கூறும் போது எங்க குவாலிட்டி சர்விசை நினைத்து பிரமித்து போகிறோம் என்கிறார் ஆச்சிரியமாக .
ஊட்டி மக்கள் தொகை மிக குறைவு அதனால் தான் கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்கிறது .
எங்களின் மிக பெரிய கஸ்டமர்கள் படுக சமுதாய மக்கள். அவர்கள் பண்டிகை மற்றும் தீபாவளிக்கு வாங்கும் ஆடைகளின் செலக்ஷன் சூப்பராக இருக்கும். அவர்களுக்காகவே மார்டன் இங்கிலிஷ் கலர் டிசைன் செலக்ட் செய்து வைத்துள்ளோம் .
பொதுவாக கஸ்டமர்கள் தீபாவளி மற்றும் பண்டிகை கால ஆடைகள் வாங்குவதை முன் கூட்டியே வாங்குவது நல்லது அப்பொழுது நல்ல செலெக்ஷன் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
இந்த வருடம் தீபாவளி தித்திக்கும் வெரைட்டி தீபாவளி .
எங்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
Leave a comment
Upload