தொடர்கள்
அரசியல்
ஜெயலலிதாவின் முடிவு !!-ஜாசன்

ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கேள்விகள் !!

2022922054525629.jpg

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று சந்தேகத்தை எழுப்பியது முதலில் ஓபிஎஸ் தான். அவர் எடப்பாடி உடன் இணைய விதித்தமுக்கிய நிபந்தனையே ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பதுதான்.

ஓபிஎஸ் தனி அணியாக இருந்த போது அவருடன் இருந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் அவர் மகன் மனோஜ் பாண்டியன் இருவரும் நிறைய சந்தேகக் கேள்வியை எழுப்பினார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மாடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அகற்ற உத்தரவிட்டது யார். ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்ட சுவாசக் கருவியை ஜெயலலிதாவிடம் இருந்து அகற்ற சொல்லிய ரத்த சம்பந்தமான உறவு யார் அவர் அதற்கான ஒப்புதல் தந்து கையெழுத்து போட்டு இருக்கிறாரா சுவாசக் கருவியை பொருத்த பொருத்திய சுவாசக் கருவியை எடுப்பதற்கு ரத்த சம்பந்தமான உறவு அனுமதி தந்து கையெழுத்தை போட வேண்டும். இது பொதுவான மருத்துவ விதி இந்த மருத்துவ விதி ஜெயலலிதா விஷயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா என்று இருவரும் கேள்வி எழுப்பினார்கள்.

2022922054619408.jpg

ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை அது ஏன் என்றும் கேட்டார்கள். அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் உள்ளது. அவர் கீழே விழுந்தாரா அல்லது தள்ளிவிடப்பட்டரா என்றும் கேட்டார்கள் இதைவிட முக்கியம் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்றார் பி எச் பாண்டியன் இவை எல்லாமே ஒரு நிருபர் சந்திப்பில் வெளிப்படையாக சொல்லப்பட்ட விஷயங்கள் தான். அப்போது ஓபிஎஸ் உடன் இருந்தார். ஆனால் அதற்குப் பின் என்ன ஆனதோ எல்லோரும் அமைதியாகி விட்டார்கள் இந்த மர்மத்தை விசாரணை கமிஷன் கண்டுபிடித்ததாக என்று தெரியவில்லை. இதைவிட வேடிக்கை ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று சொன்னது ஓபிஎஸ் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கேட்டது,

ஓபிஎஸ் ஆனால் விசாரணைக் கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பிய போது வீட்டுப்பாடம் எழுதாத சிறுவர் ஆசிரியரிடம் சொல்லும் சாக்கு போல் ஒவ்வொரு முறையும் ஆஜர் ஆகாமல் இருப்பதற்கு ஒரு புதிய காரணத்தை சொன்னார் ஓபிஎஸ். கடைசியில் ஒருவழியாக ஆஜரானார் அங்கு அவர் சொன்ன வாக்குமூலம் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை சசிகலா மீதும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதுதான் இப்போது கூட விசாரணை அறிக்கை வெளி வந்த பிறகு நிருபர்கள் கருத்து கேட்ட போது ஓபிஎஸ் சொன்னது நோ கமெண்ட்ஸ் என்பதுதான்.

செப்டம்பர் 25, 2017இல் விசாரணைக் கமிஷன் செயல்படத் தொடங்கியது. நவம்பர் 22இல் விசாரணையை எதிர்த்து அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஏப்ரல் 2019 இல் இடைக்கால தடை விதித்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது ஏப்ரல் 26 விசாரணை நிறைவடைந்தது. முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கை ஆகஸ்டு இருபத்தி ஏழாம் தேதி விசாரணை அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி தந்தார்.

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இவை தான். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அது தொடர்பான எல்லா ஆவணங்களிலும் சசிகலா தான் கையெழுத்திட்டு இருக்கிறார் என்பது

சசிகலா டாக்டர் சிவகுமார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நீதிபதி தவிர சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பை கவனித்து வந்த டாக்டர் சிவகுமார் அதற்கான பொறுப்புடன் நடந்து கொண்டதாகக் கூற முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்திருக்கிறார்.

சட்டசபையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை மருத்துவத் துறையின் முதன்மை செயலாளரிடம் வழங்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமைச் செயலாளர் தனது ஆணையில் தெரிவித்திருக்கிறார்.

2022922054649330.jpg

ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா சிகிச்சை சம்பந்தமாக எல்லா முடிவுகளையும் எடுத்தது சசிகலாதான் என்று குறிப்பிட்டிருக்கிறது.ஆனால் சசிகலா அதை மறுத்திருக்கிறார். எனக்கு அந்த அளவுக்கு படிப்பறிவு எல்லாம் இல்லை சிகிச்சை பொருத்தவரை எல்லாம் முடிவு செய்து அப்போலோ மருத்துவமனை தான் என் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை நான் எல்லாவற்றையும் சந்திக்கத் தயார் என்று மூணு பக்க அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா.

ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா தேதி டிசம்பர் மாதம் 4ம் தேதி 2016 பிற்பகல் காலமாகி இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா ஐந்தாம் தேதி இரவு இறந்து போனதாக மருத்துவமனை குறிப்பு வெளியானது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 4.81 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக எல்லா சந்தேகத்தையும் தீர்த்து விட்டது என்று சொல்ல முடியாது இதுபற்றி விரிவான தகவல்.....

அடுத்த வாரம் பார்ப்போம்.