அது என்ன ரஜினியின் மந்திரங்கள் . ரஜினியே ஒரு மந்திரம் தானே
PC பாலசுப்ரமணியன் என்ற பிரபல எழுத்தாளரின் மற்றுமொரு அருமையான படைப்பு " ரஜினி மந்த்ராஸ் ". ஏற்கனவே பன்ச் தந்த்ரா என்ற தனது படைப்பின் மூலம் தனக்கான ஒரு முத்திரையை ,ஒரு வாசகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். அதற்கு பின் Grand Brand Rajini என்ற புத்தகம் இப்போது ரஜினி மந்த்ராஸ் . இன்னும் சில புத்தகங்களும் எழுதியுள்ளார்.
04-08-2022 அன்று ஹிக்கின்போதம்ஸ் புத்தக அரங்கில் மிக விமர்சையாக வாசகர்களும், ரசிகர்களும் சூழ சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் கிட்டி, இயக்குனர்கள் வசந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் பிரதிகளை வெளியிட்டனர்.
பின்பு அவதார் சௌந்தர்யா ராஜேஷ் அவர்களின் ஒருங்கிணைப்போடு ஒரு சிறிய கலந்துரையாடல் நடைபெற்றது. மூன்று சிறப்பு விருந்தினர்களும் ரஜினியுடனான தங்களின் முதல் பரிச்சயம் குறித்து சிலாகித்து பகிர்ந்துகொண்டார்கள்.
சினிமா துறைக்கு வருவதற்கு முன் தான் ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்யும்போதே ரஜினியின் அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டதை கிட்டி பகிர்ந்துகொண்டார். ஒரே நடிகரோடு அதிக படம் நடித்தது ரஜினியுடன் மட்டும் தான் என்பதை பெருமையோடு சொன்னார். ரஜினிக்கும் கமலுக்குமான வித்தியாசத்தையும் வித்தியாசமாக அவரது பாணியில் கூறினார் கிட்டி.
ஒரு பத்திரிகையாளனாக இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் இல்லத்தில் முதன் முதலில் சந்தித்தது தொடங்கி அதன் பின் ஏற்பட்ட சந்திப்புகள் பற்றியும் வசந்த் ஒரு ரசிகனாக வெளிப்படுத்தினார். தான் ரஜினியை அவரது இல்லத்தில் சந்திக்கும் போது ஓம் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்ததை ஆச்சரியத்துடன் சொன்னார். ஆனால் நாகரிகம் கருதியா என்று தெரியவில்லை அவர் இயக்கவிருந்த அண்ணாமலை அவரால் முடியாமல் போனது பற்றி எதுவும் வாய் திறக்க வில்லை.
மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் தயாராக உள்ளேன் என்றார் தீவிர ரசிகன் கார்த்திக் சுப்புராஜ். இன்னும் அடங்க வில்லை பேட்டையின் தாக்கம். அது தான் உண்மை. பல வருடங்களுக்கு முன் தன்னிடம் ரஜினி நாம இந்த கதையை பண்ணுவோம் என்று சொன்ன வாக்கு பல வருடங்களுக்கு பிறகு நடந்தது. ஒரு விஷயம் நடக்கணும்னு இருந்தா அது கண்டிப்பா நடக்கும் என்றார் பெருமையுடன்.
அதே போல் ரஜினியின் தங்களுக்கு பிடித்த பன்ச் டயலாக்குகள் என்ன என்ன என்று பகிர்ந்து கொண்டார்கள்
.
இவர்களின் பகிர்வுகளுக்கு நடுவே இந்த புத்தகத்தின் ஆசிரியர் பாலா தன் அனுபவத்தையும் பகிர்ர்த்துக்கொண்டார்.
ரஜினியின் திரைப்படத்தின் டைலாக்குகள் ,மேடைப்பேச்சுகள்,குட்டி கதைகள் என ரஜினியின் வாழ்வியலோடு நடந்த பல விஷயங்களை நம் வாழ்க்கைக்கு தேவையான மந்த்ரங்கள் என்பதை உணர்த்தும் ஒரு படைப்பு இப்போது கடைகளில்.
இணையத்தில் வாங்க amzn.to/3unD6Yj
Leave a comment
Upload