தொடர்கள்
கவர் ஸ்டோரி
தாய் மண்ணே வணக்கம்.... - இந்துமதி கணேஷ்.

20220706003621176.jpg

சுதந்திர தினம் எப்போதுமே என் மனதிற்கு நெருக்கமான நாளாகவே இருந்திருக்கிறது. மிகச் சிறிய வயதில் நீலம்போட்டு துவைத்த தூயமையான வெள்ளை சீருடையுடனும், வெள்ளை கேன்வாஸ் ஷூவுடனும் கொடியேற்ற மட்டும்பள்ளிக்கு போய் வருவதும் பள்ளியிலேயே கொடியேற்றத்திற்கு பிறகு கொடுக்கப்படும் மிட்டாய்களும் அந்தநாளை மேலும் வசீகரமாக்கி இருக்கும் போலும், கொஞ்சம் வயதான பின்பு நமது நாடு இந்தியா என்கிறபெருமிதம் நிறைய உண்டு, அதுவும் எங்கள் பள்ளியில் சுதந்திர தினத்திற்கு என்று பிரத்யேகமான பலபோட்டிகளும் கொண்டாட்டங்களும் உண்டு அவை ஒரு தீபாவளி போன்ற மனோபாவத்தை மனதிற்குள் ஏற்படுத்தும்.

20220706003648350.jpg

ஐம்பதாவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடிய போது தான் ஏ ஆர் ரஹ்மானின் 'வந்தேமாதரம்' பாடல்வெளியானது, அந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவியதற்கு வெறும் இசை மட்டும் காரணமல்ல அப்போதுமக்களுக்குள் இருந்த தேச பற்றும் ஒரு காரணம் 'வந்... தே மாதரம்..' என்று ரகுமான் உச்ச ஸ்தாயியில் பாடும்போது என்னையே அறியாமல் ஒரு உணர்வு கிளர்ந்தெழுந்து என்னை பரவச படுத்தி இருக்கிறது. சலிப்பில்லாமல்எத்தனை முறை போட்டாலும் திரும்ப திரும்ப அதே உணர்வுடன் அதைகேட்ட நாட்கள் பல. ரஹ்மானா அல்லதுஇளையராஜாவா என்று வந்தால் எப்போதுமே ராஜாவின் பக்கம் பறக்கும் என் கொடி இந்த பாடலுக்கு மட்டும்ரஹ்மான் பக்கம் தான் சாயும். எதார்த்தமாக 'இஸ்ரோவின் கதை' என்று ஒரு புத்தகத்தை வாசிக்க தொடங்கியதுஎன் ஞாபக அடுக்கில் புதைந்திருந்த நினைவுகளை மீட்டெடுத்தது என்றே சொல்லவேண்டும். இந்தியர்களின் விண்வெளி சாதனைகளை வாசித்து பெருமிதம் கொண்டேன்.

அந்தநாட்களில் கிரிக்கெட் பார்ப்பது நம் தேசத்திற்கு செய்யும் தொண்டு என்பது போன்ற ஒரு எண்ணம் பரவலாகமக்களிடையே உண்டு, "என்னது நீங்க கிரிக்கெட் பாக்க மாடீங்களா.. அப்போ நீங்க வேற்று கிரகவாசிதான்" என்பதைப் போல நம்மை பார்ப்பார்கள். அநேகமாக எல்லா வீடுகளிலும் யாராவது ஒருவராவது கிரிக்கெட்பார்ப்பவராய் இருப்பார்கள். அதிலும் உலககோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் விளையாடுவதை பார்க்கஅடுக்களையை விட்டு நகராத ஆச்சிமார்கள் கூட பட்டாசலுக்கு அடுப்போடு வந்துவிடுவார்கள், "அட பாவி பயலேகல்ல கொண்டு எறியது கணக்காலா எரியுதான்... இவன் நல்லா இருப்பானா" என்று நம் இந்திய வீரனைஅவுட்டாக்கிய பாக்கிஸ்தான் வீரனை திட்டுவார்கள் ஆச்சிகள். இந்தியர்கள் பொதுவாய் பேட்டிங் சிறப்பாகசெய்வார்கள் என்பதால் இந்தியா முதலில் பேட் செய்தாலே அன்று வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கை வந்துவிடும், அதிலும் சச்சின் டெண்டுல்கருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும் அவரின் முறைவருவதற்காக, ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடும் போது நம் வீரர்கள் அனைவருமே மிக சிறப்பாகவேவிளையாடுவார்கள். சில நேரம் தொடர்ந்து இரண்டு பேர் அவுட் ஆகி விட்டால் ஏற்படும் டென்ஷனில், "நாமஉக்காந்திருக்க இடம் சரியில்லை" என்று பக்கத்து அறைக்கு போய்விட்டு வருவதும், நாம் ஏதாவதுதின்பண்டங்களை எடுக்க போன சமயம் நாலு அல்லது ஆறு அடித்தால் அதே முறையை பின்பற்றி அடிக்கடிசமயலறைக்கு போய்வந்து அம்மாவிடம் திட்டு வாங்குவது என்று இப்படி பல கூத்துக்கள் அரங்கேரும். மேட்ச்முடிந்து இந்தியா ஜெயித்து விட்டால் அதை பற்றி கிட்டத்தட்ட குறைந்தது ரெண்டு வாரமாவதுபேசிக்கொண்டிருப்போம். எந்த மேட்சில் இந்தியா தோற்றாலும் தாங்கி கொள்ளும் மக்கள் பாகிஸ்தானிடம்இந்தியா தோற்றால் மட்டும் கதறி அழுவார்கள்(நான் எல்லாம் படம் பார்த்தாலே அழுற ஆளு).

20220706003800457.jpg

இந்தியா பாகிஸ்தானின் போர் மற்றும் மதிப்பிற்குரிய அய்யா அப்துல் கலாம் அவர்களின் உழைப்பும் பங்களிப்பும்என்று இஸ்ரோவின் கதை(எழுதியவர் ஹரிஹரசுதன்) புத்தகம் பேசிய பல விஷயங்கள் எனக்கு பிடித்ததாய்இருந்தது. என்னுடைய பள்ளி நாட்களில் வெளியான கலாம் அவர்களின் விங்ஸ் ஆப் பயர்(அக்கினி சிறகுகள்) எனக்குள் ஏற்படுத்திய உத்வேகத்தை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது உடனேயே ஒரு ராக்கெட்டைவிண்ணுக்கு அனுப்பி விடும் உத்வேகத்துடன் ரெண்டு நாட்கள் பள்ளியில் நடத்திய பாடங்களை எல்லாம்உடனுக்குடன் படிப்பதும் பின்பு மெல்ல மெல்ல சோம்பேறித்தனம் தலை தூக்க "நாம என்ன படிக்காமலாஇருக்கப்போறோம் அதான் படிச்சிருவோமே" என்று லட்சியக கனவு நீர்த்து போவதும் பலருக்கும் அந்தகாலகட்டத்தில் நடந்திருக்க வாய்ப்புண்டு. போதாத குறைக்கு பல மாணவ(வி)ர்கள் தூங்கி வழிந்து விட்டு "கலாம்தான் சொல்லி இருக்காரு கனவு காணுங்கள் அப்படின்னு தூங்கினா தானே மிஸ் கனவு வரும்" என்றுஆசிரியர்களின் வயித்தெரிச்சலை வாங்கி கட்டி கொள்வார்கள். இது ஒருபுறமிருக்க இயக்குனர் ஷங்கர் எடுத்த'இந்தியன்' திரைப்படத்தை சுதந்திர தினத்திற்கு ஒளிபரப்புவதும் நம் டிவி சானெல்களின் தலையாய கடமையாகஇருந்து வந்தது.

நான் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வந்த சுதந்திர தினங்கள் எல்லாம் நான் இந்தியன்படத்தை பார்த்தபடி ரெகார்ட் நோட்டில் படம் வரைந்து எழுதியது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. அந்த படத்தில் வரும் 'கப்பலேறி போயாச்சு சுத்தமான நாடாச்சு கண்ணம்மா..' பாடலை கேட்கும் போது நாமேசுதந்திரத்திற்காக போராடி அதை வாங்கியது போன்ற பெருமிதத்தை அடையும் மனது. தேச பற்று என்பதுரத்தத்தில் இருந்தாலும் அதை வீடு, பள்ளி கல்லூரிகள் ஊட்டி வளர்த்தால் ஒழிய அது குழந்தைகள் மனதில் ஆழவேரூன்ற முடியாது, என்னுடைய பள்ளியில் எல்லாம் தேசிய கீதத்தை பிழை இல்லாமல் பாட எங்களுக்கு தனிநேரம் ஒதுக்கி, ரெகார்டில் தேசிய கீதத்தை போட்டுக்காட்டி அதில் எந்தெந்த வார்த்தைகளை நாம் தவறாகஉச்சரிக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டி அதை திருத்தி பாடச் செய்வார் செல்வின் சார், பள்ளி முழுவதும் இருந்தஅனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இதை செய்தார்கள், மேலும் தேசிய கீதத்திற்கு அர்த்தமும் கூட தெரிந்துகொண்டோம். தேசிய கீதத்தை பயின்றதையே தனி பதிவாக எழுதும் அளவுக்கு அப்போது பல நகைச்சுவையானஅனுபவங்கள் நடந்ததுண்டு. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பில் பயிலும் குழந்தைகளில் பாதிபேருக்கு தேசிய கீதமென்றால் என்ன என்று கூட தெரியாது, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும்அதற்கு மக்கள் எழுந்து மரியாதையை செய்ய வேண்டும் என்ற முன்னெடுப்பு கூட எனக்கு சிறப்பானதாகவே தோன்றியது அப்படியாயினும் இது என்ன பாட்டு என்று குழந்தைகள் பெற்றோரிடம் கேட்பார்கள் இல்லையா ?

நம் தேசியக் கொடியை ஏற்றிய உடன் நாம் பெருமிதமாய் வைப்போமே ஒரு சல்யூட், அது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு நாட்டுப் பற்றை ஏற்படுத்தி விடும்.

20220706003944442.jpg

தற்போது எழுபத்தி ஐந்தாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் அனைவரும் தங்கள் வீட்டில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கே செல்லாத குழந்தைகளுக்கு தேசிய கீதமும், கொடியும் புதிதாகத் தான் இருக்கும். வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை வாங்குவது மூலம் நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்குள் நம் நாடு இந்தியா, நம் தேசிய கொடிக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும் போன்ற உணர்வுகளையூட்ட இது உதவும் என்றே தோன்றுகிறது. இது அரசியல் நோக்கத்தால் செய்யபட்டதாய் எனக்கு தோன்றவில்லை அப்படியே இருப்பினும் வீட்டில் தினமும் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி தரும் நாம் ஏன் ஒரு தேசிய கொடியை வாங்க கூடாது, குழுவாய் ஒரு விஷயத்தை செய்யும் போது நமக்குள் அது மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் அல்லவா! வாருங்கள் நம் நாட்டின் எழுபத்தி ஐந்தாம் சுதந்திர தினத்தை கொண்டாடலாம்....

ஜெயஹிந்த்....