1. சுஜாதா ,பாலகுமாரன் இருவரில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்?
இரண்டு பெரிய எழுத்தாளர்களை ஒப்பிடுவதில் எனக்கு விருப்பம் கிடையாது. இருவருமே தனித்திறமை வாய்ந்தவர்கள். எதற்கு ஒப்பிட வேண்டும்? என்னை இருவருமே கவர்ந்தவர்கள்.
2. எனக்கொரு மகன் பிறப்பான் என்று பாடிய புரட்சித் தலைவருக்கு மகன் இருந்தால், அதிமுக அநாதையாக இருந்திருக்காதோ ?
அரசியல் வேறு மாதிரி போயிருக்கும்.அவர் கெட்டிக்காரராக இருக்க வேண்டுமே!
3. போலீஸ் / திருடன் / கள்ளக்கடத்தல்காரன் / அரசியல்வாதி உங்களுக்கு யாராக விருப்பம் ?
அரசியல்வாதி தான். அவருக்குள் இவை எல்லாமே இருக்கிறது.
4. இலங்கையின் இன்றைய நிலை கர்ம பலனா ?
நீங்கள் வேண்டுமானால் அப்படி நினைத்து திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள். எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை இலங்கையின் இன்றைய நிலைமைக்கு காரணம் மோசமான ஆட்சி!
5. சர்வ நிச்சயமாக இவ்வுலகம் சாஸ்வதம் இல்லை என்று தெரிந்தும் ஏன் தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள். (அவர்கள் தனியாளாக இருந்த போதும்.)?
தாங்கள் சாஸ்வதம் என்று நம்புவதால்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload