கடந்த வாரம் முழுக்க இது தான் பேச்சு.
ஆவில் பால் பாக்கெட்டில் நூறு மில்லி குறைகிறது. அல்லது 50 மில்லி குறைகிறது.
இதனால் ஒரு நாளை இத்தனை கோடி வருடத்திற்கு 800 கோடி அல்லது 1200 கோடி என்று வாட்சப் செய்திகள் பறந்த வண்ணம் இருந்தன.
சின்ன வயதில் ஆவின் பால் பூத்துக்கு சென்று அதாவது பட்டனை போட்டால் பால் கொட்டுமே அந்த பூத்திற்கு சென்று ஜில்லென்ற ஏசியில் அந்த பால்வாசனை மூக்கை துளைக்க கொட்டி முடித்ததும் ஜில்லென்ற அந்த பாலை கொஞ்சம் வாயில் விட்டுக் கொண்டால் தான் மனசு சாந்தப்படும்.
அப்போதெல்லாம் இந்தப் பாலில் தண்ணீர் கலந்திருப்பார்களா என்று யோசித்தது கூட இல்லை.
இப்போது பாக்கெட்டிலேயே தண்ணீர் கலப்பார்கள் அல்லது பாலை குறைப்பார்கள் என்றால் அதையும் நம்ப முடியவில்லை.
நாம் வாட்சப்பை வைத்திருக்கிறோமா அல்லது வாட்சப் தான் இந்த மக்கள் அத்தனை பேரையும் வைத்திருக்கிறதா என்ற சந்தேகமே சில சமயங்களில் எழுகிறது.
அத்தனை பிரச்சாரம். அத்தனை பயமுறுத்தல். அத்தனை அறிவுறுத்தல். அல்லது அத்தனை அயோக்கியத்தனம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
இருந்தாலும் இந்த செய்திகளில் உள்ள உண்மைத் தன்மையை நாமே சோதித்தால் என்ன என்று ஆசிரியர் குழுவிற்குள் ஒரு முடிவு கட்டி ஒவ்வொரு ஏரியாவிலும் ஆவின் பால் பாக்கெட் வாங்கி பார்த்து விடுவோம் என்று முடிவு செய்து அதன் அளவை ஜூம் மீட்டிங் வாயிலாக நேரடியாக முயற்சிப்போம் என்று முடிவானது.
வழக்கம் போல நானாச்சு வருகிறேன் என்று சொல்லி விட்டு ஜகா வாங்கியவர்களையும், தேர்வு அன்று மட்டும் வயிற்று வலி வந்து லீவு போடும் ஆசாமிகளையும், எனக்கு முக்கியமான கோவிலுக்கு போகணும் என்று கழண்டு கொண்ட ஆன்மீகவாதிகளையும் தவிர மிஞ்சியது மூன்று ஏரியாதான். ) பேரெல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்)
மும்பையிலிருந்து பால்கி சும்மா மாட்ச் ரெஃப்ரீ மாதிரி தான் அமர்ந்திருந்தார்.
சரி ஜூம் மீட்டிங் முடிவில் என்ன நடந்தது ?? ஆவின் பாலில் எத்தனை மில்லி குறைந்திருந்தது ????
இங்கே.....
Leave a comment
Upload