பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்புள்ள சிலரை தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு இவை எல்லாமே உளவு அமைப்பான " ரா " தந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கியது தொடர்ந்து இந்தக் கைது படலம் நடந்தது.
ஆம்பூரை சேர்ந்த மீர் அனாஸ் அலி பொறியியல் கல்லூரி மாணவரான இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். இவரது தந்தை துபாயில் வேலை செய்கிறார். இவருக்கு இந்தியா பற்றிய எந்த நல்லெண்ணமும் கிடையாது அதேசமயம் பாகிஸ்தான் மீது கரிசனம் காட்டுவார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த அமைப்பு பற்றி வலைதளங்களில் தேடத் தொடங்கினார் இதையெல்லாம் கண்காணித்து வந்த ஐ எஸ் அமைப்பு இவரை தொடர்பு கொண்டு தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டது. ஐ எஸ் அமைப்புகான செயலியில் இவரும் இணைந்து கொண்டார். இந்த குழுவில் பாகிஸ்தான் பங்களாதேஷ் காஷ்மீர் இளைஞர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். இவர்கள் செயலியில் வரும் எல்லா தகவல்களும் இந்தியாவுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிப்பது போலவும் இருக்கும் சதி திட்டம் தீட்டுவது உள்ளிட்ட விவரங்களை கூட இவர்கள் இந்த செயலி மூலம் பகிர்ந்து கொண்டார்கள். இதை மெல்ல மோப்பம் பிடித்த இந்திய உளவு அமைப்பான " ரா " இவர்களை கண்காணிக்கத் தொடங்கியது அதன் பிறகு இவர்கள் தொடர்பு சம்பந்தமான விவரங்களை ரகசியமாக சேகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து என் ஐ ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. தமிழ்நாட்டில் சேலம் ஆம்பூர் ஈரோடு மூன்று இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி தீவிரவாத தொடர்பு உள்ள தீவிரவாதிகளை கைது செய்தது.
மீர் அனாஸ் அலி வீட்டுக்கு உள்ளூர் போலீஸ் துணையுடன் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டி அவரை எழுப்பி விசாரித்தது. ஆம்பூர் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி அங்கேயே வைத்து அவரை விசாரணை செய்வது தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பும் என்பதால் அவரை அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து அதன்பிறகு அவரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு மீர் அனாஸ் அலி படித்த கல்லூரியிலும் சில இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட அவர்களை ஈடுபடுத்தி இருக்கிறார். இதனால் அந்தக் கல்லூரியை உளவு அமைப்பு கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்திருக்கிறது.
மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தந்த தகவலின் அடிப்படையில் சேலம் மாநகர காவல் ஆணையர் 3 தனிப்படை அமைத்து சேலம் மாநகரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்கள் சிலரை கண்காணிக்க வைத்திருக்கிறார். சேலம் மாநகர காவல்துறை தந்த தகவலின் அடிப்படையில் ஆஷிக் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. :அவரது வீட்டில் பாகிஸ்தான் கொடி செல்போன் பென் டிரைவ் முதலானவற்றை கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வகத்துக்கு ஆய்வு செய்ய அனுப்பியிருக்கிறது. அவரது செல்போன் மற்றும் பென் டிரைவ் இவற்றில் சேகரித்த விவரங்களை வைத்து மேலும் அந்த இளைஞரை விசாரிக்க இருக்கிறது. தேசிய புலனாய்வு அமைப்பு ஆஷிக் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து தீவிரவாத செயலில் ஈடுபட அவருக்கு ஐ எஸ் அமைப்பு அவருக்கு பண உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ஐ எஸ் பயங்கரவாதிகள் உடன் தொடர்பில் இருந்த ஆசிப்முசாப்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு டைல்ஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை தீவிரவாத நடவடிக்கை ஈடுபட்டிருக்கிறார். ஆசிப் அந்தப் பகுதியை சேர்ந்த சிலரை இந்த பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக சேர்த்திருக்கிறார். தற்போது அவர்களும் விசாரணை வளையத்தில் .
இதேபோல் அல்கொய்தா இயக்கத்தில் தொடர்பில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் அப்துல் அலீம் முல்லாவை கர்நாடகா போலீஸ் கைது செய்தது. இவர் சேலத்தில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் சமீபத்தில்தான் வேலையில் சேர்ந்து இருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த அத்தர் உசேன் லஷ்கர் என்பவரை போலீஸ் கைது செய்தது. அவர் தந்த தகவலின் அடிப்படையில் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர் மங்களூர் அருகே ஒரு மசூதியில் நான்கு ஆண்டுகளாக தங்கி தென்னிந்தியாவில் அல்கொய்தா இயக்கத்துக்கு ஆட்கள் திரட்டும் பணியை செய்து கொண்டிருந்தார். காஷ்மீரில் திடீரென்று நடந்த தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட அல்-கொய்தா தலைவர் தந்த தகவலின் அடிப்படையில் மங்களூரில் இவர் பிடிபட்டார் இதனைத் தொடர்ந்து தான் இந்திய உளவு அமைப்பு தென்னிந்தியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அதிரடியாக இறங்கியது அதனைத் தொடர்ந்து தான் இந்த கைது படலம்.
இந்தியா முழுவதும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பு இந்திய இளைஞர்களை மூளை சலவை செய்து பண ஆசை காட்டி தீவிரவாத செயலில் ஈடுபட திட்டம் தீட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதனை கண்டுபிடித்த இந்திய உளவு அமைப்பு சில மாதங்களாக இந்தியா முழுவதும் சோதனை நடத்துகிறது. பீகார் குஜராத், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து வருகிறது.
தென்னிந்தியாவைப் பொருத்தவரை கேரளாவில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் சில இயக்கங்கள் அங்கு உண்டு. அந்த இயக்கங்களுக்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தருவது வழக்கம் இதையெல்லாம் இந்திய உளவுத்துறை அவ்வப்போது மோப்பம் பிடித்து கைது நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கம். இதன் விளைவாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு கர்நாடகம் தமிழ்நாடு என்று தங்கள் எல்லையை மாற்றிவிட்டது அதன் விளைவாகத்தான் ஈரோடு ஆம்பூர் சேலம் போன்ற பகுதிகளில் சிலர் இந்த தீவிரவாத அமைப்புகளின் வலையில் சிக்கி விட்டனர். இப்போது என் ஐ ஏ தாங்கள் சேகரித்த விவரங்களை தமிழக காவல்துறையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது. கூடவே விழிப்புடன் இருந்து கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லியிருக்கிறது.
திருச்சியில் கிடைத்த அதிர்ச்சி தகவல்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் சிறப்பு முகாமில் என் ஐ ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. ஜூலை 20 ஆம் தேதி இந்த சோதனை நடந்தது அதிகாலை தொடங்கப்பட்ட இந்த சோதனை மாலை வரை நீண்டது. இந்த சோதனையில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆதாரங்கள் கிடைத்தது.
அகதிகள் முகாம் எனப்படும் சிறப்பு முகாம் தமிழக அரசின் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. போலி பாஸ்போர்ட் காலாவதியான பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை விதிகளை மீறும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் போதை கடத்தல் கைதிகள் இந்த சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு ஜாமீன் கிடைத்தாலும் வழக்கு முடியும் வரை இந்த முகாமில் தான் இவர்கள் தங்க வேண்டும். இந்த முகாமில் வங்கதேசம் நைஜீரியா இலங்கை பல்கேரியா சீனாவில் இந்தோனேஷியா இப்படி பல நாட்டைச் சேர்ந்த 143 பேர் இந்த முகாமில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய சில தமிழக அரசியல் தலைவர்கள் அறிக்கை எல்லாம் கூட வெளியிட்டிருக்கிறார்கள்.
இருபதாம் தேதி ஜூலை மாதம் நடந்த சோதனை பற்றி என் ஐ ஏ ஒரு செய்திக்குறிப்புவெளியிட்டிருக்கிறது.அந்த செய்திக்குறிப்பில் இலங்கையிலிருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு போதை மருந்து கடத்தல் நடைபெற்று வருவது தொடர்பாக என் ஐ ஏ தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் இலங்கையைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் மாஃபியா வைச் சேர்ந்த குணசேகரன் என்ற குணாபுஷ்பராஜ் என்கின்ற பூக்குட்டி கண்ணா ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜிசலீம் என்பவரோடு இணைந்து போதை மருந்து கடத்தல் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் கட்டமைக்க இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட என் ஐ ஏ இந்த சோதனையில் பல்வேறு டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன விசாரணை தொடர்கிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.
என் ஐ ஏ சோதனை நடந்த மறுநாள் திருச்சி முகாமில் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தியது. என் ஐ ஏ சோதனை செய்தபிறகு வெளியிட்ட செய்திக்குறிப்பு அடிப்படையில் தமிழக ஆளுநர் திருச்சி முகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு தீவிரவாத ஆயுதக் கடத்தல் போதை மருந்து கடத்தல் தொடர்பு உள்ள சம்பவம் நடந்திருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது என்று கேள்வி கேட்டு ஆளுநர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்தக் கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை.இந்தக் கைதிகள் அனைவரும் தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள் இவர்களுக்கு செல்பேசி சிம் கார்டு லேப்டாப் போன்ற அதிநவீன கருவிகள் எல்லாம் எப்படி கிடைத்தது என்ற கேள்வியையும் என் ஐ ஏ தமிழக அரசிடம் கேட்டிருக்கிறது இதற்கும் பதில் இல்லை.
எது எப்படியோ தமிழ்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளே நுழைந்து விட்டது என்பது மட்டும் இந்த சோதனைகள் மூலம் தெரியத் தொடங்கியிருக்கிறது காவல்துறை என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போதைக்கு உள்ள கேள்வி.
Leave a comment
Upload