தொடர்கள்
பொது
என்ன நடக்குது ஊட்டி நகராட்சியில் ! -ஸ்வேதா அப்புதாஸ்

உலக பிரிசித்தி பெற்ற சுற்றுலா தலம் . உலகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாக்கள் வந்து குவியும் ஒரு அழகான மலை பிரதேசம் தான் ஊட்டி .

20220704174142358.jpg
நாட்டின் ஜனாதிபதி முதல் சாமானியர்கள் வரை ஊட்டியை விசிட் செய்யாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை . அப்படி என்னதான் ஊட்டியில் இருக்கிறது என்றால் இயற்கை அழகை தன்னுள் கொண்டுள்ளது உலகத்தின் உயிர் சூழல் பகுதி

20220704155203171.jpg
பொட்டானிக்கல் கார்டன் , படகு இல்லம் , தொட்டபெட்டா சிகரம் , பைக்காரா படகு இல்லம் மற்றும் இயற்கை அழகு தான் அதிகம் . திரைபடங்கள் நிறைய படமாக்கப்பட்டதின் விளைவு ஊட்டி அனைவரையும் ஈர்த்த ஒரு நகரம் .

20220704160447950.jpg
அதை விட ஒரு படி போனால் ஊட்டி 200 வருடங்களுக்கு முன் அன்றைய கோவை கலெக்டர் ஜான்சலிவன் கண்டு பிடித்து உருவாக்கின ஒரு நகரம் தான் மலைகளின் அரசி கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தான் ஊட்டி உலகத்திற்கு தெரிந்த நாள் .

20220704161155371.jpg
மே மாதம் 21 ஆம் தேதி நம் முதல்வர் ஸ்டாலின் ஊட்டி 200 ஆம் வருடத்தை துவக்கி வைத்து நவீன ஊட்டியை உருவாக்கின ஜான்சலிவனின் திருஉருவத்தை ஊட்டி கார்டன் சாலையில் திறந்து வைத்தார் .

20220704161727756.jpg
இப்படி உருவாகின நகர் முழுவதும் ஊட்டி நகராட்சியின் பராமரிப்பில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது . ஊட்டி நகர் டேவிஸ் என்ற ஆணையாளர் மற்றும் நகர் மன்ற தலைவரால் சிறப்பாக நிர்வகிக்க பட்டு பிரிட்டிஷ் ஆணையாளர்கள் , தலைவர்களின் கரத்தில் இருந்து இந்திய ஆணையாளர்கள் தலைவர்கள் நிர்வாகத்தில் வந்து முன்னேற்றங்களை அடைந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக நவீன படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை .
நீண்ட இடைவெளிக்கு பின் தி மு க தலைமையிலான நகர மன்றம் பொறுப்பேற்று இது நாள் வரை எந்த பணியும் நடக்கவில்லை என்பது தான் பலரின் மனக்குமுறல் .
புதிய நகர மன்ற தலைவி வாணீஸ்வரி முதல் கூட்டத்தில் இருந்து நான்கு மன்ற கூட்டங்களில் வாய் திறந்து பேசவில்லை . நகர மன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் சொன்னது என்னவோ துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் ஆணையாளர் காந்திராஜ் தான் .

20220704170449773.jpg
தி மு க கவுன்சிலர்கள் மட்டும் 23 பேர் இருக்கின்றனர் அவர்கள் ஒட்டுமொத்தமாக நகராட்சியின் மேல் அதிர்ப்தியில் உள்ளனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது . அதே சமயம் எதிர் கட்சி கவுன்சிலர்கள் நகர மன்றத்தில் நகராட்சியின் செயல்பாட்டில் எந்த திருப்தியும் இல்லை என்பதை நகர மன்ற கூட்டத்தில் வெடிக்க செய்தனர் .
புதிய நகர மன்றம் பொறுப்பேற்று எந்த வேலையும் செய்வது இல்லை ஊட்டி நகர் குப்பை கூளமாக இருக்கிறது .தனியார் ஒப்பந்த காரர்கள் மிகவும் கடமையாக வீடு வீடாக வந்து எடுத்து சென்ற நல்ல விஷயம் தற்போது ஏன் இல்லை என்பது தெரியவில்லை . ஓர் சில வார்டுகளை தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் எந்த பணியும் நடப்பது இல்லை என்று புலம்புகின்றனர் .

20220704164644759.jpg
கடந்த 2017 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் நாசரேத் கான்வென்ட் கீழ் உள்ள பியோலி நடைபாதையை தோண்டி அப்படியே விட்டு விட முதல்வர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்து பாதி நடைபாதையை மட்டும் நகராட்சி சரி செய்து விட்டு மீதி பாதி பாதை அப்படியே கிடக்கிறது . செடிகளும் புல்லும் வளர்ந்து மிகவும் மோசமான நிலைமையில் இருக்க நகராட்சி கண்டு கொள்வதாக இல்லை . காட்டு பன்றி , தோடர் எருமைக்கூட்டம் வந்து பயமுறுத்துகின்றது. அதை பற்றி நகராட்சிக்கு எந்த கவலையும் இல்லை . இப்படி பல வார்டுகளில் எந்த வேலையும் நடப்பதாக தெரியவில்லை என்கின்றனர் ஊட்டி வாசிகள் .

20220704164937384.jpg
தற்போது ஊட்டி மார்க்கெட்டை விரைவில் புதுப்பிக்கும் வேலை துவக்க இருக்கிறார்கள் அதுவும் கோடிகள் செலவில் எவ்வளவு தூரம் இந்த வேலை நடக்கபோகிறதோ என்ற கேள்வி உண்டு . பல வருடங்களுக்கு முன் இந்த ஐடியா உருவாகி நின்றுபோனது என்பது குறிப்பிடத்தக்கது .

20220704165437953.jpg
இதற்கிடையில் நீலகிரி ஆணவக்காப்பக இயக்குநர் வேணுகோபாலின் முயற்ச்சியால் நீலகிரி எம் பி ராசா முதல்வரிடம் பேசி ஊட்டி 200 ஆம் ஆண்டும் உதயத்தை சிறப்பிக்க ஊட்டி நகரை புதுப்பித்து அழகு படுத்த 10 கோடி ஒதுக்கி வழங்கியுள்ளார் முதல்வர் அதற்கும் நகராட்சி என்ன செய்யப்போகிறார்கள் என்று தான் தெரியவில்லை .
அ தி மு க கவுன்சிலர் அக்கீம் பாபு நகர மன்றத்தில் மிகவும் காட்டமாக பேசி வருகிறார் அவரை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20220704165658415.jpg

" ஊட்டி நகரம் என்பது ஒரு முக்கியமான நகரம் இங்கு எந்த கட்சி பாகுபாடும் இல்லாமல் தான் 36 கவுன்சிலர்களும் இருக்கிறோம் .அதே சமயம் நகராட்சி எந்த வார்ட் வேலையையும் செய்வது இல்லை ,நகரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் ,எதை பற்றியும் கவலை படுவதாக இல்லை இந்த நகராட்சியும் நகர மன்ற தலைவியும் .நகர மன்ற தலைவி இது வரை ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை .எல்லா பதிலும் துணை தலைவர் ரவிக்குமார் தான் கூறுகிறார் . மேலும் ஆணையாளர் தான் நகர மன்றத்தில் பேசுகிறார் . ஒரு சிறிய சாக்கடை வேலையை கூட இந்த நகராட்சியால் செய்ய முடிவது இல்லை என்பது வருத்தமான ஓன்று . கவுன்சிலர்களாகிய நாங்கள் தான் மக்களை சந்திக்கிறோம் ஓட்டு போட்ட வார்ட் மக்கள் எங்களை சும்மா விடுவார்களா .இப்படியே போனால் நகர நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் " என்று முடித்தார் .


மிக பெரிய குழப்பத்திலும் டென்ஷனில் உள்ள ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜை அவரின் சேம்பரில் சந்தித்து பேசினோம் ,

20220704170223339.jpg
" எப்பொழுதும் நடக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது . எங்களுடைய வேலை 36 வார்டுகளுக்கும் சென்று சேரவேண்டும் அது இல்லாமல் வி ஐ. பி களின் விசிட் அதற்கான வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .மேலும் ஊட்டி 200 குறித்த பணிகளும் நடக்க இருக்கின்றன . ஒரு விஷயம் எல்லா கவுன்சிலர் களும் கோடி கணக்கில் தங்களின் வார்டுகளில் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் சொல்லுங்க .எது முக்கிய அவசர வேலையோ அதை உடனடியாக செய்து வருகிறோம் ,இதில் பலத்த மழை வேறு என்ன செய்ய எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்ய முடியாது .
ஏகப்பட்ட வேலைகள் நகரில் முடிக்காமல் இருக்க நகர மன்ற தலைவிக்கு ஏன் புதிய ஆடம்பர அறை ? என்று கேட்க

20220704170808776.jpg
நகர மன்ற தலைவிக்கு சரியான அறை இல்லை ஏற்கனவே இருந்த ஒரு சிறிய ஹாலை தான் புதுப்பித்து கொடுக்கிறோம் மற்றபடி எதுவும் புதியது இல்லை , தேவையற்ற குற்றச்சாட்டுகள் ஏன் என்று தன் புரியவில்லை .நான் இந்த நகரம் புது பொலிவு பெற எல்லா முயற்ச்சிகளை எடுத்து வருகிறேன் . கட்டாயம் ஊட்டி நகர் அழகு படுத்த படும் .மாவட்ட நிர்வாகமும் எல்லா உதவி மற்றும் ஒத்துழைப்பை இந்த சிறப்பு நிலை நகராட்சிக்கு கொடுக்கின்றனர் ".என்று முடித்தார் .

தி மு க மூத்த கவுன்சிலர் முஸ்தபா கூறும் போது,

20220704171042874.jpg

" எப்படியெல்லாம் இருந்த சிறப்பான நகர மன்றம் நகராட்சி இன்று எந்த வேலையும் நடப்பது இல்லை என்பது வருத்தமான ஓன்று தான் .பணம் இல்லை என்று நகராட்சி அதிகாரிகள் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை .

20220704171253416.jpg

ஊட்டி 200 வருடம் சிறப்பிக்கும் தருணத்தில் கோடப் மந்து கால்வாயின் நிலைமையை போய் பாருங்க இன்னும் அதை சரி செய்து கொண்டே இருக்கிறார்கள் . சிறந்த ஆட்சி நடந்து கொண்டிருக்க நகராட்சி இப்படி மெத்தனமாக இருப்பது சரியில்லை. இதற்கான முயற்ச்சியை நகர மன்ற தலைவி முன்னின்று எடுத்து செய்வது அவரின் கடமை எங்களின் முழு ஒத்துழைப்பு இந்த நகரின் வளர்ச்சிக்கு இருக்கும் ,நகராட்சி தன் மெத்தனத்தை போக்கி துரிதமான பணிகளை எல்லா வார்டுகளிலும் தொடர வேண்டும் ".
நகர மன்ற தலைவி வாணீஸ்வரியை சந்தித்து பேசினோம் ,

20220704171729413.jpg

" இந்த நகரின் முன்னேற்றத்திற்காக தான் நான் நகர மன்ற தலைவியாக அமர்ந்துள்ளேன் , நகராட்சி ஆணையாளர் பணம் இல்லை என்று சொல்லுவதை ஏற்கமுடியவில்லை இவர்கள் செய்வதால் என்னை தான் பாதிக்கிறது .உண்மையில் நகரில் எந்த வேலையும் நடப்பது இல்லை நானும் தினமும் ஆய்வு செய்து வருகிறேன் நிறைய குறைகள் தெரு விளக்குகள் கூட சரியாக எரிவது இல்லை . விரைவில் சரிசெய்வோம் " என்று கூற
நீங்கள் இதுவரை மன்ற கூட்டத்தில் பேசவே இல்லையாமே ? என்று கேட்க
அது சரி தான் சற்று பயத்தால் தான் என்னால் பேச முடியவில்லை இனி வரும் கூட்டங்களில் பேசி முடிவெடுப்பேன் என்று கூறி தொடர்ந்தார் ,
அரசு ஊட்டி 200 ஆம் வருடத்திற்கான வளர்ச்சி பணிகளுக்கு 10 கோடி வழங்கியுள்னர் அதை என்ன செய்ய போகிறீர்கள் ? என்று கேட்க

20220704171946853.jpg
அதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்கிறோம் பட்பையர் என்ற இடத்தில் உலகதரம் வாய்ந்த மீன் அருங்காட்சியகம் மற்றும் சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள ஆதாம் நீரூற்றை சுற்றி எல் இ டி லைட் அமைக்கிறோம் மேலும் நிறைய ஊட்டி அழகு பொலிவு வேலைகள் மழைக்கு பின் துவங்கும் . ஊட்டி மார்க்கெட் விரைவில் புதுப்பிக்க படும் அது சிறப்பாக நடக்கும் .
கவுன்சிலர்கள் உங்கள் மேல் ஏன் அதிர்ப்தியில் உள்ளனர் ?என்று கேட்க
அது ஏன் என்று தெரியவில்லை நான் நகர்மன்ற தலைவியான அதிர்ச்சி கூட இருக்கலாம் அது எனக்கு வருத்தம் தான்சரியாகும் விரைவில்
நகரில் ஏகப்பட்ட வேலைகள் இருக்க உங்களுக்கு என்று தனி பெரிய அறை உருவாகிறது எதிர்ப்பை ஏற்படுத்துள்ளதே ? என்று கேட்க
என்னமோ எனக்கு சொந்தமாக அறை புதுப்பிக்கிறேன் என்று கூறுகிறார்கள் , இந்த அறையை பாருங்க ஒரு சிறிய அறை தான் எத்தனை பேர் இங்கு அமர முடியும் அதனால் தான் அந்த சிறிய ஹாலை ரெடி செய்ய சொன்னேன் அது தவறா ? என்று கேட்கிறார் ,
விரைவில் எல்லாம் சரியாகும் நகரில் முன்னேற்றம் தான் என் பணி அதற்காக நகரின் முன்னேற்றத்தை குறித்து அரசின் உதவி கேட்டு முதல்வரையும் உள்ளாட்சி துறை அமைச்சரை சந்திக்க சென்னை செல்கிறேன் " என்று முடித்தார் .
அனைத்து கவுன்சிலர்களுடன் இணைந்து சிறப்பான பணியை தொடருங்கள் என்று கூறி விடைபெற்றோம் .