#சொர்க்கம் #
சொர்க்கம் எதுவென்று ஒரு சிந்தனை
வாழ்விற்குப் பின் நாம் செல்லும் சொர்க்கம்
எப்படி இருக்கும் என்பது புரியாத புதிரே!
ஆனால் வாழும் போதே
சொர்க்கத்தை காண முடியும்
தாயின் பாசத்தில்
தகப்பனின் நேசத்தில்
ஆசிரியரின் கண்டிப்பில்
உறவுகளின் அரவணைப்பில்
நட்பின் பூரிப்பில்
படிப்பின் சுவாரசியத்தில்
வேலையின் பயனில்
கணவனின் கனிவில்
மனைவியின் மாண்பில்
குழந்தையின் புன் சிரிப்பில்
பணத்தின் தேவை பூர்த்தியில்
வேதனையின் பாடத்தில்
சோதனையின் முடிவில்
நற்செயலின் பலனில்
பேருதவியின் பெருமையில்
சிந்தனையின் வளத்தில்
முதுமையின் நிறைவில்....
Leave a comment
Upload