ஓஓஓஓ, வா தலைவா, ஆண்டவரே, வேற லெவல்…..
கிட்டதட்ட இரண்டரை வருஷம் கழித்து தமிழ் படத்துக்கு போன உற்சாகம்!!!
கொரோனா காரணமாக, ஹாங்காங்ல, எந்த தமிழ் படமும் சமீபகாலத்துல ரிலீஸ் பண்ணலை..
அதெல்லாம் சேர்த்து வச்சி சந்தோஷ ஆராவரத்துடன் விக்ரம் 2 படம் ரிலீஸுக்கு ஹாங்காங் தமிழ் மக்கள், பெரிய எதிர்பார்புடன் திரையரங்கம் விரைந்தோம்..
ஏய் உன் சீட்டு எங்க இருக்கு, பாத்து கால மிதிச்சிடாம போமா.. இப்படியெல்லாம் கேட்ட பொழுது, காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது!
சரி! இப்ப படத்த பத்தி பாத்தோம்னா, ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த “சூப்பர்” படம்..
பெரிய நட்சத்திர பட்டாளம். கமலுக்கு மட்டும் சிறந்த வேடமில்லாமல், படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் சிறப்பு இடம் கொடுத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு மனமார்ந்த பாராட்டுகள்.
டிரைலர் பார்த்த எல்லாருக்குமே தெரியும், இது ஒரு சண்டை (ஆக்ஷன்) படம். விறுவிறுவென்று வேகமாக ஓடும் கதைகளம். துப்பாக்கி சுடும் சத்தம்!
மூன்று பிரிவுகள் அதற்க்கு மூன்று தலைவர்கள்.. சிறப்பு ஏஜெண்டுகள், போலீஸ் அதிகாரிகள், பக்கா லோக்கல் ரௌடிகள் முதல் hifi வில்லன்கள்..
படத்துல நல்ல ஒரு மெசேஜ் - போதை பொருள் அறவே அழிய வேண்டும்.. அதற்காக போராடும் ஹீரோக்கள்.
இதற்கிடையில் மகன், பேரன், காதல் செண்டிமென்டுகள் பிரமாதம்!
டைமிங் காமெடி, கமல் ஆங்காங்கே பேசும் மெட்ராஸ் தமிழ், கண்டிப்பாக கைதட்ட வைக்கிறது. நிச்சயம் டிரெண்டிங் டைலாக்ஸாக வலம் வரும்.
இசை படத்தின் பெரிய பலம். அனிருத் கலக்கல்! பாடலகள் மற்றும் பீஜீயம் ராக்கிங்!
மெலடி பாடல் முதல், பின்னனி இசை ஆங்கில வரி பாடல்கள் அவரை (புரியாவிட்டாலும்), நம்மை தலை அசைக்க வைகின்றது.
ஆக்ஷன் படம்! சண்டை காட்சிகளை ஹாலிவுட் அளவிற்க்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால் அது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம் தான்.
எடிட்டிங் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைகர்களும் படத்தின் பெரிய பக்க பலம்!
நல்ல ஒரு படம். அதில் மாற்றமில்லை!
ஆனால் இளகிய மனம் உடையவர்களுக்கு ( என்னை போல்😃) - அட என்னப்பா படம் முழுசா சண்டையான்னு லேசான எண்ணம்!
படம் எப்படி இருந்தது என்பது, என்னை போல் வெளி நாட்டு வாசிகளுக்கு இரண்டாம் பட்சம் தான்! திரையரங்கம் சென்று, பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே, நண்பர்களுடன் சேர்ந்து தமிழ் படம் பார்த்தோம் என்ற புத்துணச்சி மற்றும் மகிழ்ச்சி.
படத்தில் ஒரு ஐடம் சாங்க்கூட இல்லையே என்ற நண்பரை கிண்டல் செய்து கொண்டே வீடு சேர்ந்தோம்!
விக்ரம் 2 வில் இறுதியில் வரும் சூர்யா! நிச்சயம் விக்ரம் 3 தொடரும் என்ற அறிகுறி!
கொரோனா அழியட்டும், நல்ல படங்களுக்காக காத்திருக்கிறோம் !
Leave a comment
Upload