தொடர்கள்
பொது
இனி தேர்வுகள் இப்படித்தான் ! ஆல் பாஸ் அட்ராசிடீஸ். - விகடகவி டீம்.

20220504093048464.jpeg

வாட்சப்பில் உலா வந்த செய்தி இது தான். ஒரு வேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கேள்விகளும் பதில்களும் எப்படி இருக்கும் என்றும் வாட்சப்பில் களேபரமாக இருக்கிறது.....

கேள்வி:ராக்கெட் கிளம்பும் முறையை விளக்குக

மாணவன்: சொய்ய்ய்ங்...

ஓரளவிற்கு சரியாக உள்ளது. Pass

கேள்வி : திருவள்ளுவர் திருக்குறளை ஏன் எழுதினார்

பரீட்சையில் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக. பாஸ்.

கே: பஞ்ச பூதங்கள் எவை?
ப: கணிதம், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் & புவியியல்.

கேள்வி : கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள்

கேஸ் விலை கட்டுப்படி ஆகவில்லை.

கேள்வி : ஏன் ஆண்களுக்கு அதிகம் தலையில் முடி உதிர்ந்து சொட்டை விழுகிறது

பிரச்சினைகளை நினைத்து தலையைப் பிய்த்துக் கொள்வதால்.

கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

பதில்: அவரது கடைசி போரில்...(பழசு தான் இருந்தாலும் பாஸ்)

கேள்வி : தண்ணீரில் வாழும் உயிரினம் ஐந்து கூறு?
பதில் : 3 மீன் 2 தவளை. (இந்தப் பையன் எஸ்.வி.சேகர் டிராமா பாத்துருக்கான். பரவாயில்ல. பாஸ்)

கேள்வி : ஊர்ந்து செல்லும் உயிரினம் எது?

பதில் : பம்பு. (பையன் புத்திசாலி. பாம்புக்கு கால் கிடையாதுன்னு சொன்னதை வெச்சு காலை எடுத்துட்டான். பாஸ் பாஸ்)

இதே ரீதியில் உங்களிடம் கேள்வி பதில் இருந்தால்.... காமெண்டவும். சிறந்த கேள்வி பதில் நம் ஆசிரியர்களுக்கு மார்க் போட உதவும். பாவம்.