ஜூன் 04 . பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிறந்த தினம்.
இன்றைய சூழ்நிலையில் அண்ணாமலை என்ற நபர் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்று கட்டத்துக்கு தமிழக அரசியலில் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக இருக்கிறார் அண்ணாமலை.
Pic Courtesy: Oreynaadu
மத்திய அரசு பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் விலையை குறைத்தபோதும், மற்ற மாநிலங்கள் குறைத்தபோதும் இன்னும் நம் தமிழக அரசு குறைக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் அதற்காக குறைக்கவிட்டாலும் பரவாயில்லை அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன காரணத்திறகாகவாவது குறைக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளார் அண்ணாமலை.
மே மாதம் 30ஆம் தேதி மாபெரும் பேரணி போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தார். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் கோட்டை வரை என்று முடிவு செய்து தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் பாஜக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
சுமார் 12 மணிக்கு அண்ணாமலை வருகை தரும்போது 20,000க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் டெல்டா பகுதியின் ஆய்வுக்கு சென்றிருந்ததால் கோட்டைக்கு போயும் பயன் இல்லை. இருந்தாலும் தங்களின் இருப்பையும்,எதிர்ப்பையும் காண்பிக்க நினைத்தனர் பாஜகவினர். அனைத்து தலைவர்களும் உரையாற்றிய பின் வழக்கம் போல் அனல் பறக்கும் பேச்சால் கூட்டத்தை அதிரவைத்தார்.
கூட்டம் முடிந்து கோட்டைக்கு புறப்பட நினைக்கும்போது சுற்றி வளைத்து போலீசார் தடுத்தனர். அனைவரையும் கைது செய்ய மூன்று பேருந்துகளும் வந்தன. ஆனால் வந்த கூட்டத்தை கைது செய்ய முப்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தேவை என்பதால் இப்படியே கலைந்து போக காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர். காலை ஆறு மணி முதல் காவல் காக்கும் காவலர்களின் நிலைமையை மனதில்கொண்டு அப்படியே கலைய நினைத்தனர். அண்ணாமலை சூழ்ந்துகொண்டு கூட்டம் அவரை நகர விடவில்லை . எப்படியோ இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா துணை கொண்டு ஒரு ஆட்டோவில் பறந்தார்.
ஒருவழியாக கமலாலயம் வந்தவர் தன்னை பத்திரமாக அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரை தன் அறையில் அமரவைத்து மகிழ்வித்து அனுப்பினார்.
அவர் உரையில் முக்கியமாக கவனிக்க பட்ட விஷயம் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என்பது தான்
ஆம் ஜூன் 20ஆம் தேதி ஒரு போராட்டமும் 30ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டமும் கூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் திருவாரூரில் தேர்வீதிக்கு கலைஞர் பெயரை சூட்டப்போவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் நடத்திய கூட்டமே மிக பெரிய அளவில் பேசப்பட்டது. சென்னை கூட்டம் அதையும் விட பிரம்மாண்டமாக கூடியதில் ஆளும்கட்சி தரப்பு சற்று ஆடித்தான் போயிருக்கிறது.
போதும் போதாததற்கு, நான்கு அல்லது ஐந்தாம் தேதி இரண்டு தமிழக மந்திரிகளின் ஊழலை வெளியிடுவதாக வேறு கூறியிருக்கிறார். அண்ணாமலையின் அதிரடி ஆட்டத்தால் ஆடிப் போயிருக்கிறது ஆளுங்கட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை பேசாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின் கூட இப்போது அண்ணாமலை பற்றி வாய்திறந்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் அவருக்கு பாராட்டு பத்திரம் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். தன் காவல்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வந்திருக்கும் அண்ணாமலை பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"அண்ணாமலை அரசியல் செய்கிறார் நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் " என்றார் ஸ்டாலின். ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலினை போலவே பாமக ராமதாஸ் அவர்களும் அரண்டு போயிருக்கிறார். அன்புமணி தலைவராக பொறுப்பேற்றிருக்கும் வேலையில் தனது கட்சி தொண்டர்களுக்கு ஒரு கட்டளையிட்டுருக்கிறார். அதாவது தமிழ்நாடு இளைஞர்கள் அதிகம் பாஜகவில் சேருகின்றனர் அதனை தடுக்க வேண்டும் பொங்கியிருக்கிறார்.
இவர்களாவது பரவாயில்லை மாற்று கட்சியினர்.எதிர் அணியினர். இவர்கள் கூட்டணிக்கட்சியான அதிமுகவே மிரண்டு போயிருக்கிறது. ஆம் இவ்வளவு நாள் எங்கே இருந்தார் என்றே தெரியாத பொன்னையன் மற்றும் ஜெயக்குமார் அண்ணாமலையை விமர்சித்துள்ளனர் .
மொத்தத்தில் அண்ணாமலையின் அதிரடி ஆட்டம் ஆளுங்கட்சி எதிர்கட்சி வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
Leave a comment
Upload