தொடர்கள்
தொடர்கள்
ப்ராக்டிகல் சீரீஸ் – 14 கே. ஜி. எஃப்…..  மாலா ரமேஷ்

20220503212628402.jpg

துப்பாக்கிச்சூடு பறக்க பறக்க… ரத்தம் தெறிக்க தெறிக்க…..பிரம்மாண்டமா தியேட்டர்லபார்த்த கே ஜி எஃபுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கொழப்பமா இருக்குதாப்பூ….? அந்த கேஜிஎஃப் வேற…இது வேற…., இது வன்முறையே இல்லாத கேஜிஎஃப்.

இங்க கே ஜி எஃபுன்னா…..”கடேசி வரைக்கும் குட் ஃப்ரெண்ட்ஸ்”….

அட…நல்லாருக்கே….!!! இது என்னன்னுதானே கேக்கறீங்க….? வாங்க பாக்கலாம்….

இந்த பி எஃப் எஃப் னு சொல்றாங்க இல்ல…? பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஃபார் எவெர்னு….அதுபோலத்தான் கே ஜி எஃப்….கடேசி வரைக்கும் குட் ஃப்ரெண்ட்ஸ்….

ஃப்ரெண்ட்ஷிப் பத்தி சொன்னதும், “மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்” ன்னு ஒருகாலேஜ் சூழல மனசுல வச்சிட்டு முஸ்தபா முஸ்தபா பாட்டெல்லாம் பாடவேண்டாம்…, ஏன்னா, இந்த கே ஜி எஃப் பெத்தவங்களுக்கும் பிள்ளைங்களுக்கும் இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப்….

உலகத்துல பரவலா நிறைய மாயைகள் இருக்குது….அதுல ஒண்ணு….”நாந்தான் என்பிள்ளைக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்” அப்டீன்றது…..இதைக் கேட்டதும், சில பேருக்கு…குறிப்பா…. அம்மாக்களுக்கு கோவம் மூக்குக்கு மேல வரும்…..ஆனாலும், இது ஒருமாயைதான்….”

“அப்டீன்னா …இது பொய்யா….?” அப்டின்னு கேக்கக்கூடாது. இது உண்மை….உங்கபிள்ளைங்களுக்கு நீங்க பெஸ்ட் ஃப்ரண்ட்தான்….அவங்க அப்டித்தான் நினைக்கறாங்க…நம்பறாங்க….ஆனா, அதையே பிடிச்சுட்டு தொங்கக்கூடாது… அப்பதான் கேஜிஎஃபாஇருக்கமுடியும்.

சின்ன வயசில, அவங்க கூட சேர்ந்து நீங்க சோப்பு பபிள் விட்ருக்கலாம்….நீங்க சூப்பராபால் போட்டு உங்க குழந்தை பேட் பிடிச்சு அதிசூப்பரா விளையாடி இருக்கலாம்…. உங்ககூட ரன்னிங் ரேஸ் ஓடிருக்கலாம்… ஷட்டில் விளையாடிருக்கலாம்….சைக்கிள்ஓட்டிருக்கலாம்…..பீச்ல ஆடிருக்கலாம்… மழைல நனஞ்சிருக்கலாம்….

இதெல்லாம் பரஸ்பரம் இருக்கிற அளவு கடந்த அன்பு…ஆசை…பாசம்…

உங்க ஏரியால இருக்கிறதுலயே நல்ல ஸ்கூல், காலேஜ், க்ளாஸ்னு பாத்து பாத்துபோடுவீங்க….அது ஒரு நல்ல பெத்தவங்களுக்கான கடமை….

முடிஞ்சவரைக்கும் உங்க லிமிட்டுக்குள்ள அவங்க ஆசைகளை நிறைவேத்தறது….பெத்தவங்களோட பொறுப்புணர்வு….

அப்போ இந்த கேஜிஎஃப்…?

ம்….இப்போ பாக்கலாம் அதைப் பத்தி….

உங்க வீட்டு குட்டிப் பையனை பக்கத்து வீட்டு பையன் ஏதோ சொல்ல, இவன் அவனைஅடிக்க… அவன் இவனை அடிக்க….பக்கத்து வீட்டுக்காரர் வந்து உங்க கிட்ட உங்கபையனைப் பத்திக் கம்ப்ளையிண்ட் பண்ணா என்ன செய்வீங்க…?

உங்க சின்னப் பையனையோ பொண்ணையோ சுத்தி இருக்கிறவங்க கேலி செய்யும்போது, பேந்தப் பேந்த முழிச்சிட்டு, வாங்கிகிட்டு, நின்னுட்டே இருந்தா என்ன செய்வீங்க…?

முக்கியமான நேரத்துல உங்க பையன் ஹால் டிக்கட்டைத் தொலச்சுட்டா அதை எப்படி டீல்பண்ணுவீங்க…?

ரொம்ப காஸ்ட்லியான பொருளை உடச்சுட்டா என்ன சொல்லுவீங்க…?

பல ஆயிரம் ஃபீஸ் கட்டி பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சு, சில ஆயிரம் ஃபீஸ் கட்டி பெரியஇடத்துல டியூஷன்லாம் போட்டும் உங்க பையனோ பொண்ணோ முக்கியமான பரிட்சைலஃபெயில் ஆயிட்டா…அதை எப்படி எடுத்துப்பீங்க…?

வயசுக்கோளாறுல வேண்டாத விஷயங்களப் பத்திப் பேசறதா ஸ்கூல்ல டீச்சர் சொன்னா என்னசெய்வீங்க…?

உங்க பொண்ணு பின்னாடி ஒரு பையன் சுத்தறான்னா அதை எப்படி ஹேண்டில்பண்ணுவீங்க…?

இல்லை…..வேற யாரோடயோ உங்க டீன் ஏஜ் பொண்ணை ஒரு கடைலயோ இல்லமால்லயோ பாத்தா என்ன சொல்லுவீங்க…?

சொல்லாம கொள்ளாம திடீர்னு கம்பனில பாத்துட்டு இருக்கிற வேலைய விட்டுட்டு பையன்வீட்டுக்கு வந்துட்டா என்ன செய்வீங்க…?

வேலைக்குப் போற உங்க பையனோ பொண்ணோ யாரையோ காதலிக்கிறதாவும்அவங்களத்தான் கல்யாணம் செய்வேன்னும் சொன்னா அதை எப்படி எடுத்துப்பீங்க…?

“ஏம்மா….நல்லதே தோணாதா…?” ன்னு கேக்காதீங்கப்பூ…..இது உங்க வீட்டுக்கு மட்டும்சொன்னதில்ல…..நம்மள சுத்தி இருக்கிற இடங்கள்ள ஏதோ ஒரு வீட்டுல இந்த நிமிஷம்நடக்கக்கூடிய நிகழ்வுதான் இது.

இதையெல்லாம் ஒரு கேஸ் ஸ்டடியாக்கூட நினச்சிக்குங்கப்பூ….

நம்மை நாமே கேட்டுப் பாத்துக்கத்தான் இந்தக் கேள்விகள். இந்த மாதிரி இடங்கள்ளலாம் எப்படி பிள்ளைங்கள நடத்துவோம்…? எந்த அளவுக்கு அவங்க பக்கம் இருக்கிறதை காதுகொடுத்து கேப்போம்….? எந்த அளவுக்கு அவங்களுக்கு நம்பிக்கை கொடுப்போம்…? எந்தஅளவுக்கு அவங்க பிரச்சினைக்குத் தோளோடு தோள் கொடுத்து மீட்டு எடுப்போம்…? எல்லாத்துக்கும் மேல….எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படாம….நிதானமா… விஷயங்களைஹேண்டில் பண்ணுவோம்ன்றதப் பொறுத்துதான் ஒருத்தங்க கேஜிஎஃபா இல்லையான்னுதெரியும்….

பெத்தவங்க குடுக்குற தைரியமும்...….அவங்க பிள்ளைங்க மேல வச்சிருக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையும் ரொம்ப முக்கியம்…அதுதான், அவங்கள சுயக்கட்டுப்பாட்டோடவச்சிருக்கும்….

தும்பை விட்டு வாலைப் பிடிக்கமுடியாது….குழந்தைகள் மனசுல நம்பிக்கையையும்…ஒருநல்ல புரிதல் உணர்வையும்.. சின்னதுலயே விதைக்கணும்….அவங்க வளர வளர அதுவும்வளரும்…. எல்லா விஷயங்களையும் அவங்க சொல்லவரும்போது, குறுக்கிடாம பொறுமையாகேக்கும்போது…தன்னோட அப்பா அம்மாதான் உலகத்துலயே பெஸ்ட் அப்டின்ற உணர்வுஅவங்க மனசுல தானா ஏற்படும்…

அப்போ, ஸ்கூல்ல தன் கிட்ட யாராவது தப்பா பேசினாலோ..நடந்துக்க முயற்சி செஞ்சாலோகூட எந்தவித தயக்கமும் இல்லாம வந்து சொல்லுவாங்க….

மாறா….அவங்க சொல்லும்போதே , “இதுக்குத்தான் நான் அப்போவே சொன்னேன்…ஒனக்கு .கொஞ்சமாவது அறிவிருந்தாதானே…?” ன்ற மாதிரியான டயலாக்குகள்…அவங்கவாயை அடச்சுடும்.

பிள்ளை வீட்டுக்குத் தெரியாம க்ளாசை கட் செஞ்ச விஷயம் தெரியவரும்போது, “நீ இதைஎங்கிட்ட சொல்லிட்டே செஞ்சிருக்கலாம்….” ன்னு அசால்ட்டாச் சொன்னால, தடுமாறிடுவாங்க. அதுக்குப் பதிலா, பழைய படத்துல வர்ர மாதிரி பெல்ட்டைக்கழற்றதோ…..துடைப்பத்தைத் தூக்கறதோ…உங்கள் உரிமையை நிலை நாட்டும்னுநினைச்சா….அது வெறும் பிரமைதான்….

சில விஷயங்களைச் சொன்னா திட்டு விழும்….அடி விழும்….டீச்சர் கிட்டசொல்லுவாங்க…நாலு பேர் எதிர மானத்த வாங்குவாங்கன்னு மனசுல பட்டுட்டா….அதோடசேப்டர் க்ளோஸ்….

அதுக்குப் பிறகு, என்னைக்கும் கேஜிஎஃபா இருக்கிறது கஷ்டம்….

ஏற்ற இறக்கங்களை இன்னைக்கு சூழ்நிலைல, ரொம்பப் பொறுமையா ஹேண்டில்செய்யணும்….அப்போதான்….நல்ல சூழலை உருவாக்கமுடியும்…

அதற்கு முக்கியமா….வெளி சூழல்…அதிலிருக்கும் ஆபத்துக்கள்….இதையெல்லாம் சொல்லி வளக்கணும்….எல்லா சூழல்லயும் சமாளிக்கலாம் அப்டீன்ற நம்பிக்கையத்தரணும்….வெளி உலக அனுபவம் நிச்சயம் வேணும்…..

நம்ம குழந்தைக்கு நம்மதான் ஃப்ரெண்ட்… “நம்மதான் உலகம்”ன்ற மாயைய உருவாக்கவும்கூடாது….அந்த மாயைல நாமளே விழவும் கூடாது….

சில சந்தோஷங்கள பெற்றவர்களால நிரப்பமுடியாது…. சின்ன வயசுல, டூ வீலர்ல, உங்க கூடமுன்னாடி நின்னுட்டு ரோட்ட வேடிக்க பாத்துட்டு வந்ததையே வளர்ந்த பின்னாடிசொல்லமுடியாது… சம வயசு ஃப்ரெண்ட்ஸ் கூட போற பைக் ரைட்தான் அப்போபிடிக்கும்……”அதெல்லாம் அனுப்பமுடியாது” ன்னு அடம் பிடிக்கிறத விட,

“ லைசன்ஸ் எடுத்துக்கிட்டியா…? ஆர் சி புக் இருக்குதா…? பெட்ரோல் இருக்குதாபாத்துக்கோ…இல்லன்னா தள்ளுவண்டியாயிடும்,…இந்த வெயில்ல தள்ள முடியுமா..? ஹெல்மெட் போட்டுக்கோ… ஜாக்கிரதையா போயிட்டு வா…. தேவையில்லாம ரூல்ஸ்வயலேட் பண்ணிட்டு ட்ராஃபிக் போலீஸ் கிட்ட நிக்காத… டேக் கேர்…ஹாவ் அ குட் டைம்..”ன்னு சொல்லும்போது, சூழ்நிலை வேற மாதிரி இருக்கும்.....எந்த வித மனவருத்தமும் இல்லாமநிம்மதியா போவாங்க….”

எடுத்த எடுப்புலயே “யாரக்கேட்டு நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வரேன்னு சொல்லிட்டுவந்திருக்க…? என்னை ஒரு வார்த்தை கேட்டியா…? அதெல்லாம் அனுப்பமுடியாது” ன்னுருத்ரதாண்டவம் ஆடறதெல்லாம் காலத்துக்குப் பொருந்தாது. இல்லைன்னா….பர்மிஷனுக்காக சண்டை போட்டுட்டு….அதே டென்ஷன்ல அவங்க ரோட்டுல போக வேண்டிஇருக்கும்….மேலும், காலத்துக்கும் சில விஷயங்கள தடுத்துட்டே இருக்கவும் முடியாது. மதிச்சு விஷயத்தைச் சொல்லி அனுமதி கேக்கும்போது…. அதுல இருக்கிறசாதகபாதகங்களைச் சொல்லிட்டு அனுமதி தரணும்….அப்ப, குடுக்கிற அனுமதிய ஒழுங்கா யூஸ் பண்ணினாத்தான் அடுத்த தடவ தைரியமா கேக்கமுடியும்ன்ற எண்ணம் அவங்களுக்கும்தோணும். இப்ப இருக்கிற பிள்ளைங்க நம்மளவிட புத்திசாலிங்கதான்….அதனாலபுரிஞ்சிப்பாங்க…

உங்க மக…பார்த்த சினிமாவை உங்களோட விவாதிக்கறதும்….அவ ஃப்ரெண்ட்ஸ் கூடவிவாதிப்பதும் ஒண்ணாகாது…. அவளே சின்ன வயசுல உங்களுக்கு ஆயிரம் கதைய வாய்ஓயாம சொல்லி இருப்பா…..

இது ஒரு வகைல…சுத்தி இருக்கிறவங்க….உங்கள .”அக்கா….அண்ணா…” ன்னுகூப்பிட்டது போயி, “ஆன்ட்டி …அங்கிள்…” ன்னு கூப்பிட்டு…திடீர்னு…”பாட்டி…தாத்தா…” ன்னு கூப்பிடற மாதிரிதான்….

குழந்தைகள் நமக்கு உடமையான பொருள் அப்டீன்ற பொசசிவ்னெஸ் இல்லாமல், அவங்கஉணர்வுகளை மதிக்கும்போது, நிச்சயம் எல்லோருமே கேஜிஎஃபாக இருக்கமுடியும்.

உலகம் ரொம்பப் பெரிசு…. அதைக் காட்டணுமே தவிர… , கிணத்துத்தவளை போல…குறுகிய வட்டத்தை வாழ்க்கையாக் காட்டக்கூடாது….நம்மையே சார்ந்திருக்கும்படி, எந்தக்காலத்திலும் வளர்க்கக்கூடாது…. எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கத்துத்தரணும்….அப்போதான் ஒவ்வொருத்தரும் கேஜிஎஃப்………சரிதானேப்பூ….

அடுத்த வாரம் தொடரலாம்….