தொடர்கள்
ஆன்மீகம்
பிரம்ம முகூர்த்தம்

ஆன்மிகம் தெரிந்து தெளிவோம் - 1
சுந்தரமைந்தன்.

பிரம்ம முகூர்த்தம்!!

பிரம்ம முகூர்த்தம்


பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்குப் பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதான்!!
ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. அதனால் இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள்.
பிரம்ம முகூர்த்த வேளைக்குத் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் எதுவும் கிடையாது. இந்த நேரம் எப்பொழுதும் சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்யத் துவங்கினால் அன்று எல்லாம் ஜெயம் தான்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாகச் சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன.
பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.
விடியற்காலையில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வழங்குகின்றது.
உடல் - வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பிரம்ம முகூர்த்தத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, நமது பணிகளைத் தொடங்கினால், வாழ்வில் மாற்றத்தைச் சந்திக்கலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். லட்சுமி கடாட்சம் பெருகும்.
தெய்வங்கள், சித்தர்கள், மகான்கள் பிரம்ம முகூர்த்தத்தில் பூமியில் உலா வருவதாக ஐதீகம். ஆகையால் இவர்களுடைய அருள் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழும் பொழுது கிடைக்கிறது என்பதால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவதை நமது மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போகப் பழகிவிடும்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் ஒரு மாற்றம் கண்டிப்பாக நிகழும்.

பிரம்ம முகூர்த்தம்