தொடர்கள்
அரசியல்
" துணை ஜனாதிபதி விசிட் ஊட்டிக்கு வர மறுத்த ஹெலிகாப்டர் " - -ஸ்வேதா அப்புதாஸ்

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆறு நாள் விசிட்டுக்காக 15 ஆம் தேதி ஊட்டி வருவதாக அனைத்து ஏற்பாடுகளும் ரெடியாக இருந்தன .

2022041923512500.jpg
ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் ராஜ்பவன் மத்திய பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டன .

20220419235236664.jpg
கொரோனாவுக்கு பின் ஊட்டி கோடை சீசன் களைகட்டி சுற்றுலாக்கள் மொய்த்து கொண்டிருக்கும் நேரத்தில் போலீஸ் நகர் முழுவதும் ஏகப்பட்ட கெடுபிடிகளை கடைபிடிக்க தீட்டுக்கல் ஹெலிபேட் முதல் ராஜ்பவன் வரை கான்வாய் ஒத்திகை நடக்க சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளூர் வாசிகளும் சுற்றுலாக்களும் தவித்து விட்டனர் .

2022041923534044.jpg
ஊட்டி உட்காக் சாலையில் தேங்கி கிடந்த மழைநீரை மோட்டார் கொண்டு உரிஞ்சி எடுக்க மழை தொடர்ந்து கொட்டி கொண்டிருக்க தண்ணீர் வடிந்த பாடில்லை. சாலைகள் முழுவதும் பளிச் என்று சுத்தம் செய்தனர் நகராட்சி ஊழியர்கள் .

20220419235444712.jpg
பதினைந்தாம் தேதி வரவேண்டிய துணை ஜனாதிபதி யு.ஏ இ அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் இறுதி மரியாதையை செலுத்த சென்று விட்டதால் இரண்டு நாள் ஊட்டி விசிட் தள்ளி போனது .
16 ஆம் தேதி அபுதாபியில் இருந்து நேராக கோவை வந்த துணை ஜனாதிபதி மோசமான வானிலை காரணமாக பைலட் ஹெலிகாப்டரை இயக்க மறுத்து விட .வெங்கய்யா நாயுடு கோவை விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டியதாகிவிட்டது .
கடந்த டிசம்பர் மாதம் இந்திய ராணுவ தளபதி பிபின் ரௌத் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்து விபத்தில் சிக்கி தன் மனைவியுடன் பரிதாபமாக இறந்து போனதை யாரும் மறக்கவில்லை .

20220419235902752.jpg
வானிலை மோசமாக இருப்பதால் துணை ஜனாதிபதியும் ஹெலிகாப்டர் பைலட்டுகளும் யோசித்து விஷ பரீட்சை வேண்டாம் என்று ஹெலிகாப்டர் பயணம் தவிர்க்க பட்டு 17 ஆம் தேதி கோவையில் இருந்து கார் மூலம் வெல்லிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்த துணை ஜனாதிபதி பயிற்சி ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி முப்படை அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பை பற்றி பேசி விட்டு சாலைவழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு தன் குடும்பத்தார் சகிதமாக வந்து சேர்ந்தார் . வெல்லிங்டன் முதல் கோத்தகிரி சாலை வழியாக வர போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார்டன் சாலையில் உள்ள நடைபாதை கடைகள் மூடப்பட்டு வியாபாரிகளின் பிசினெஸ் தடை பெற்றது .சுற்றுலா பயணிகளுக்கும் ஏக பட்ட எரிச்சல் .


பின்னர் 18 ஆம் தேதி லவ் டே லில் உள்ள லாரன்ஸ் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார் .

164 வருட பாரம்பரிய வரலாற்றை கொண்ட இந்த பள்ளிக்கு விஜயம் செய்தது பெருமையான ஒன்று என்று விசிட்டர்ஸ் புத்தகத்தில் எழுதி வைத்தார் துணை ஜனாதிபதி .

20220420000131983.jpg
அன்று மதியம் நீலகிரி எம் .பி .ராசா வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நகர மன்ற துணை தலைவர் ரவி குமார் துணை ஜனாதிபதியை சந்தித்து பேசினார்கள் .

20220420000315556.jpg

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக என்று கூறினாலும் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் வெங்கய்யா நாயடு களத்தில் குதிப்பதால் தி மு க வின் ஆதரவை எதிர்பார்த்து தான் இந்த சந்திப்பு என்ற பேச்சும் உண்டு .

தமிழக முதல்வர் ஊட்டி வந்தவுடன் துணை ஜனாதிபதியை சந்திப்பதாக தகவல் வர ஒரு பரபரப்பு ஊட்டி குளிரை மீறி எட்டி பார்த்தது ஆனால் 19 ஆம் தேதி காலை 8 .30 மணிக்கு சற்று அவசரமாக துணை ஜனாதிபதி ஊட்டிக்கு குட்பை சொல்லிவிட்டு கோத்தகிரி வழியாக கோவை செல்ல டோடல் போக்குவரத்து மூடப்பட்டு மீண்டும் சுற்றுலாக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் டென்ஷனில் தவிக்க காவல்துறை தங்களின் கெடுபிடியை காட்ட மிகவும் பாதிக்க பட்டவர்கள் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தான் .


காவல்துறையின் கெடுபிடியை மீறி அவர்களால் பொது தேர்வை எழுத பள்ளிக்கு செல்ல முடியவில்லை .தேர்வு எழுதாமல் தவித்த மாணவர்களுக்கு யார் பதில் சொல்வது தனி தேர்வை நடுத்துவார்களா என்ற கேள்வியுடன் கலங்கி போயுள்ளனர். துணை ஜனாதிபதிக்கு புகார் கடிதம் அனுப்ப மாணவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். ஊட்டி கோடை சீசன் சமையத்திலும் பொது தேர்வு நேரத்தில் வி வி ஐ பி கள் ஊட்டி பக்கம் வராமல் இருந்தால் கோடி புண்ணியம் என்கிறார்கள் நீலகிரி வாசிகள் .

இனி மேல் வி.ஐ.பிக்கள் இது போல வரும் போது விடுமுறையில் வந்தால் என்னவாம்???