தொடர்கள்
அனுபவம்
" கல்வி கடன்... வெறுத்துப்போயுள்ள இளம் உள்ளங்கள்.." - ஸ்வேதா அப்புதாஸ்..

ஒரு காலத்தில், அரசு கலை கல்லுரியில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படித்தாலே அது ஒரு பெரிய படிப்பாக கருதப்பட்டது. பி.ஏ. வரலாறு, பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.ஏ. பொருளாதாரம் மற்றும் பி.எஸ்.சி. என்று இருந்தது.20210523230220493.jpg

கிராமங்களில் ஒரு இளைஞர் பி.ஏ. படித்தார் என்றாலே, அது பெரிய படிப்பு. நீலகிரி கிராமங்களில் பட்ட படிப்பு என்பது ஒரு பெரிய படிப்புதான். பெள்ளி என்பவர் பி.ஏ. படித்துவிட்டால் அவர் பெள்ளி பி.ஏ. என்று தான் அவரை அழைப்பது உண்டு. அதிலும் குறைந்த செலவில், அரசு கல்லுரியில் தங்களின் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலையில் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள். உயர் கல்வி என்றால் கோவை அரசு கல்லூரி... சற்று வசதி படைத்தவர்கள், சட்டம் கோவை அல்லது சென்னை கல்லுரிகளில் படித்தார்கள்.

முதுகலை படிப்புக்கு சென்றவர்கள் சென்னையில்... மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ப்ரெசிடெண்சி காலேஜ் மற்றும் லயோலா கல்லூரி என்று தங்களின் உயர் கல்வியை படித்தார்கள். சிலர் மருத்துவம் படிக்கும் விருப்பத்தில் கோவை மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி என்று கல்லூரி ஹாஸ்டல்களில் தங்கி பயின்றனர்.

வருடங்கள் ஓடியது... கல்வி ஒரு கார்ப்பரேட் பிசினஸ் ஆகா மாறியவுடன்... ஏதேதோ படிப்புகள் வந்து குவிந்தன... அதற்கு ஏற்றால் போல், கல்லுரி கட்டணம் உயர ஆரம்பித்தது. இதில் கோவை தொழில் புள்ளிகள், தங்களின் பிசினெஸ் வேலையை காட்டத் துவங்கினார்கள். மெதுவாக கோவை முழுவதும் கல்லுரிகள் ஆக்கிரமிக்க துவங்கின.

20210523230951764.jpg
ஒரு பிரபல தொழில் அதிபர் குடும்ப குரூப்... பீளமேடு பகுதி முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து... கலை, அறிவியல் கல்லுரிகளை துவக்கி, கல்வியை பெரிது படுத்தினார்கள்... அவர்கள் தான் முதலில் பொறியியல் கல்லுரியை துவக்கினார்கள்.
இந்தக் கல்லுரியில் இடம் கிடைப்பது என்பது குதிரை கொம்பு தான். அதில் “ஜாதி” முன்னுரிமை வழங்கப்பட்டது. பின்னர் டொனேஷன் என்பதை அறிமுகம் செய்து வைத்தார்கள்...

கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏற்கனவே பள்ளிகளை நடத்தி வந்தனர்... அதில் பிரபல பள்ளிகள், கல்லூரிகள் தமிழ்நாட்டில் அடங்கும்... பெரும்பாலான இந்த நிறுவனங்கள், நடுத்தர வகுப்பினரின் கல்விக்காகவே நடத்தப்பட்டு வந்தன. இவர்களால்... பீளமேடு கல்வி குழுமத்துடன் போட்டி போட முடியவில்லை என்பது தான் உண்மை.

திடீர் என்று முளைத்தது ஒரு கிறிஸ்தவ பொறியியல் கல்லுரி... ஒரு சாதாரண வங்கி ஊழியர் துவக்கியது. ஒரு சிறந்த சேவை என்றும் பிராத்தனைகளும், பக்தியும் உள்ள கல்லூரி என்று நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் குவிய துவங்கினார்கள்... ஏதேதோ கேள்வி படாத படிப்புகளில், பட்ட படிப்பை துவங்கினார்கள்...

கல்லுரியாக துவக்கப்பட்ட நிறுவனம்.. பெரிய அளவில் வளர்ச்சி பெற்று தன்னாட்சி பல்கலைக்கழகமாக உருவெடுத்தது... அதே போல.. மருத்துவ கல்லூரிகள், பார்மசி கல்லுரி என்று உருவாகியது... மைசூரை தலைமையிடமாக கொண்டு ஊட்டியில் உருவானது ஒரு பார்மஸி கல்லூரி. உலக அந்தஸ்த்தில் எங்களின் படிப்பு உங்களை கூட்டி செல்லும் என்று அட்மிஷன் செய்தார்கள்...

இதையெல்லாம் பார்த்த நம் சமுதாய மாணவர்கள் விழி பிதுங்கி, எப்படியாவது இப்படிப்பட்ட கல்லுரியில் சேர்ந்து படித்து, வெளிநாட்டிற்கு பறந்து விட வேண்டும் என்ற கனவில் பெற்றோர்களை நச்சரிக்க துவங்கி விட்டார்கள்...

பெரும்பாலான பெற்றோர்கள் நடுத்தர வர்க்கத்தினர்... மாத சம்பளத்தை நம்பி வாழக்கையை ஓட்டி கொண்டிருப்பவர்கள். அப்பா, அம்மா அரசு ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களாக இருந்தால், ஒருவரின் சம்பளத்தை தங்களின் மகன், மகள். பிள்ளைகளுக்கு கட்டி பேலன்ஸ் செய்து வருகின்றனர்... அதே சிங்கிள் சம்பளம் என்றால், திண்டாட்டம் தான்.

இப்படி பட்ட கல்லுரிகளில்... படிப்பு கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் என்று வருடத்திற்கு இரண்டு லட்சம் வரை வந்து விடும். தற்போது அது எகிறி கொண்டிருக்கிறது... மருத்துவம், பார்மஸி என்றால் மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று சர்வ சாதாரணமாக கேட்கிறார்கள். இப்படி கல்லுரிகளும், பல்கலைக்கழகங்களும் முளைக்க... முதலில் படையெடுத்து வந்தது கேரளா ஜாம்புவான்கள் தான். எல்லாமே ரெடி கேஷ் தான்... அதே நேரத்தில்... நம்ம ஊர் மாணவர்கள், கல்வி கட்டணத்தை பார்த்து கண் கட்டி, தலை சுற்றி நின்றார்கள்... உடனே பளிச் என்று விழித்து கொண்டன நம் மத்திய அரசும், வங்கிகளும்.... கல்வி கடன் வழங்குகிறோம் என்று ஒரு பெரிய ஆசையை உருவாக்கின. உடனே இளைஞர்களின் பார்வை, கல்வி கடனை பெற்று படித்து விடலாம் என்று திரும்பியது. இந்தக் கடனை வாங்கினவர்கள், பெரும்பலானோர் நடுத்தர வர்க்கத்தினர்...

கல்வி கடனை இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து அறிவித்து... மாணவர்கள் தங்களின் படிப்பு முடிந்து ஒரு வருடத்தில் நிலுவையை கட்ட வேண்டும் என்று நிர்ணயித்தது. அதே சமயம் இதற்கான வட்டி 14 சதவிகிதம்... படிப்பு, எதிர் கால வேலையை பற்றி மட்டும் சிந்தித்த இளைஞர்கள், இந்த வட்டி கட்டுவதை பற்றி யோசிக்கவே இல்லை என்பது தான் உண்மை. சிலர் வேலை கிடைத்து, பணத்தை திருப்பி கட்டி வருகிறார்கள். வேறு சிலர் வேலை கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

சில கேரளத்து புத்திசாலிகள், கல்வி கடனில் படித்து விட்டு துபாய் சென்று செட்டில் ஆகி விட்டனர். அவர்களிடம் எப்படி கடனை வசூல் செய்வது என்று ஒரு ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் கூறுகிறார்...

இதை விட கொடுமை... ஒரு பெண் கல்வி கடனை வாங்கி திரும்ப காட்டமுடியாது சூழலில் தவிக்க... அவர் வசிக்கும் பகுதிக்கு, அவரது புகைப்படத்துடன் வந்து இவர் கல்வி பெற்று கடனை திருப்பி கட்டவில்லை என்று கேவலப்படுத்தியுள்ளது ஒரு வங்கி. அவர் உடனே தன்னிடம் இருந்த நகைகளை விற்று பணத்தை திருப்பி கட்டியுள்ளார்.

20210523231656563.jpg
திமுக தன் தேர்தல் அறிக்கையில்... “நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றால், கல்வி கடனை ரத்து செய்வோம் என்று கூற.... தமிழகத்தில் கல்வி கடன் வாங்கின இளைஞர்கள் உற்சாகத்தில், தங்களின் வாக்குகளை திமுக-விற்கு பதிவு செய்ய, ஆட்சியும் வந்தது. முதல் சட்டமன்ற கூட்டத்தில்... ஆளுநர் உரையில் இதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்பது பெரிய ஏமாற்றம் என்கிறர்கள்...

ஸ்னேகா என்பவர் நம்மிடம் கூறும் போது... நான் கோவையில் பிரபல கல்லுரியில் எம்.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷனை படித்தேன். கல்லூரி கடைசி வருடத்தில், கனடா அனுப்புவோம் என்று கூறி ஏமாற்றி விட்டனர். அந்தக் கனவில் தான், இந்த கல்வி கடனான நான்கு லட்சத்தை வங்கி படித்தேன். சரியான வேலை கிடைக்கவில்லை, திருமணமும் நடந்து விட்டது. எனக்கு குழந்தை பிறந்துள்ளதால், என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை... இந்தக் கடனின் சுமை, என் தந்தையின் தோளின் மேல் உள்ளது. அவரும் மாதந்தோறும் நிலுவையை கட்டி வருகிறார். சிண்டிகேட் வங்கியில்தான் கடன் வாங்கினோம். அவர்கள் பெரிய அளவுக்கு டென்ஷன் கொடுக்கவில்லை.

20210523233349167.jpg

தற்போது, கனரா வங்கியாக மாறிய பின், டென்ஷன் கொடுக்க துவங்கியுள்ளனர். நான் வாங்கினது நான்கு லட்சம் கடன். தற்போது.. அது வட்டியுடன் ஐந்து லட்சத்து அறுபதாயிரமாக இருக்கிறது. நம் முதல்வர் இந்தக் கல்வி கடனை ரத்து செய்யும் முயற்ச்சியை எடுத்தால் எவ்வளவு நல்லது. அடலீஸ்ட் வட்டியை ரத்து செய்தாலே போதுமானதாக இருக்குமே. இதை விட கொடுமை... கடந்த வருடம் கொரோனா காலம் என்பதால் சில மாதங்கள் கழித்து நிலுவையை கட்டலாம் என்று கூறினார்கள். சில மாதங்கள் கழித்து கட்டும்போது, கொரோனா காலத்தில் விடுபட்ட மாதங்களுக்கான வட்டியையும் சேர்த்து வாங்கி வருவது என்ன நியாயம். இந்த வருடம், எந்தச் சலுகையும் இல்லை. என்ன அநியாயம் பாருங்க... நான் முதல்வருக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். இதற்கான அக்னோலெட்ஜ்மெண்ட் கூட எனக்கு வரவில்லை...” என்று முடித்தார்.

20210523233519973.jpg

ஹென்னா என்ற பெண் கூறும் போது... “நான் பொறியியல் படிக்க 2010 கல்வி கடன் வாங்கினேன். 2015 முதல் 2019 வரை மாதந்தோறும் வட்டி கட்டி வந்தேன். பின் திருமணம் மற்றும் குழந்தை பிறந்த பின் வேலைக்கு செல்லவில்லை... தற்போது கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறேன்... இந்தியன் வங்கியில் இருந்து ரொம்பவே தொந்தரவு செய்கிறார்கள்...

20210523233754376.jpg

ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று புரிவது இல்லை... முதல்வர் ஸ்டாலின் கல்வி கடனை ரத்து செய்வோம் என்று கூறினார். அது ஆறுதலாக இருந்தது. தற்போது அதை பற்றி பேச்சே இல்லை... அவர் இந்த பேட்டியை படிப்பாரா.. படித்தால் என்னை போன்ற பல இளம் பெண்கள் தவிக்கிறார்கள்... கடனை கட்ட முடியாமல், வேலையும் கிடைக்காமல்... இதில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அறுபதாக உயர்த்தி இருப்பது எங்களை போன்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை இந்த அரசு மாறுக்கிறதா... இந்தக் கடன் தொல்லையில் இருந்து மீண்டு வர அரசு உதவி புரிய வேண்டும்” என்று வறுத்தப்பட்டு கூறினார்.

20210523233922450.jpg
ஆனி என்ற பெண்ணிடம் பேசினோம்... “ஐயோ ஆளை விடுங்க... அந்தக் கல்வி கடனை பற்றி பேசினாலே எனக்கு தலை சுற்றுகிறது. அந்த சிண்டிகேட் வங்கி ஆட்கள் பேசுவது தான் என் காதில் கேட்கிறது... நான் எம்.பி.ஏ படிப்புக்காக, கல்வி கடன் வங்கி பெரிய தப்பு பண்ணிட்டேன்... வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகிவிட்டது. பெங்களூரில் செட்டில். வேலை இல்லாமல், எப்படி லோனை கட்டுவது சொல்லுங்க. அப்பாவும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டி வந்தார்... திடீரென்று.... உடனே இவ்வளவு பணத்தை கட்டவேண்டும் என்று மிரட்டும் தோரணையில் பேசும் போது தான் எரிச்சல் வருகிறது. கொரோனா காலம் என்று பார்ப்பது இல்லை... வட்டி மேல் வட்டி போட்டு எங்களை மிரட்டுகிறார்கள்... நான் படித்த எம்.பி.ஏ. செலவைவிட அதிகமாகிவிடும் இந்தக் கல்வி கடன் என்று தான் தோன்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் எதாவது உதவியை செய்தே ஆக வேண்டும். நீங்கள் அவருக்கு இதை தெரிய படுத்துங்கள், ப்ளீஸ். ஒரு விஷயம்... இனி யாரும் கல்வி கடனை வாங்காதீர்கள். வாங்கி விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள், உங்கள் நிம்மதி தொலைந்து விடும்” என்கிறார்.

20210523234041261.jpg
பாரத் ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் வாங்கியுள்ளவர்கள், அந்த அலுலர்களின் மிரட்டலுக்கு அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை...

நாம் டெல்லியில் உள்ள ஓய்வு பெற்ற ஒரு வங்கி அதிகாரியிடம் பேசினோம்... தேர்தல் வாக்குறுதியில் உங்க முதல்வர், கல்வி கடனை ரத்து செய்வேன் என்று எப்படி கூறினார் என்று தெரியவில்லை. அதை மத்திய நிதி அமைச்சகமும், ரிசெர்வ் வங்கியும் தான் முடிவு எடுக்க முடியும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. கொரோனா காலத்தில், இந்த கல்வி கடனின் வட்டியை குறைக்கலாம்.. அல்லது நீக்கலாம்.. இதே பெரிய பணக்கார்களுக்கு கோடி கணக்கில் உள்ள பணத்தை தள்ளுபடி செய்கிறார்கள்.. அது எப்படி என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

வங்கியில் கடனை கட்டு என்று எவரும் தொந்தரவு செய்ய முடியாது... அப்படி தொந்தரவு செய்தால், புகாரை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு அனுப்பலாம். அல்லது வங்கி மேலாளரை சந்தித்து, விளக்கக் கடிதம் கொடுக்கலாம் என்று முடித்து கொண்டார்.

நாம், இந்தக் கட்டுரையில் பேட்டி எடுத்தவர்கள் ஒரு சிலர்.. எவ்வளவு பேர் இந்தக் கல்வி கடனில் சிக்கி தவிக்கிறார்கள்... இவர்களுக்கு நம் அரசு கூறும் பதில் என்ன.....?!