தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்
20210316161815571.jpeg

“நாமக்கல்லில்14 வயது சிறுமியை சீரழித்த 12 கயவர்கள்... பெற்றோருக்கு ரூ. 10,000 நஷ்ட ஈடு கொடுத்த கொடுமை!”

“சேலத்தில் ரூ.10 லட்சத்திற்கு சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழிலதிபர் கைது..”

“பாடகி மகளுக்கு பாலியல் வன்கொடுமை” - பாதிரியார் கைது..

பெற்ற தாய் மற்றும் உறவுகளே, தங்கள் சொந்த பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வல்லுறவுக்கு உடந்தை ஆவது ஏன்..? இது போன்ற சம்பவங்களை தடுப்பது எப்படி?

க.மணிராஜ், திருச்சி.

இதுல கருத்து சொல்ல என்ன இருக்கு..? இந்தக் கொடுமையெல்லாம் நம்ம நாட்டுல இப்ப ரொம்ப அதிகரிச்சு போச்சு. இப்ப தான் திருச்சியில் 12 வயசு குழந்தைக்கு, 22 பேரு பாலியல் தொந்தரவு கொடுத்தாங்க. அதுக்குள்ள இந்த செய்தி.. முடியல சாமி.. நம்ம நாடு அழிவை நோக்கி போய்கிட்டு இருக்கு.. பண்ணுங்கடா..! என்னென்ன அட்டூழியம் பண்ணுவீங்களா பண்ணுங்க.. கடைசியா இந்த கொரோனாதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்ட போகுது...


மா.ரகுபதி, கத்தார்.

சிறு குழந்தைகளின் துஷ்பிரயோகத்திற்கு முக்கியக் காரணம், வீட்டினுள் பெற்றோர் குழந்தைகளை கவனிக்காமல் அலட்சியம் செய்வதே... பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும், அவர்களின் நடத்தை மாற்றத்தை அவதானிக்க வேண்டும். மிகவும் சிறு குழந்தை என்றாலும், அவர்களை கூர்ந்து கவனித்து பார்த்தால் அவர்கள் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும். இவர்கள் தான் குற்றவாளிகள் என்று தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும், காவல்துறை ஒரு வழக்கைத் தாக்கல் செய்வதிலும், துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதிலும், பணமும், செல்வாக்கும், அச்சுறுத்தலும் பங்கு வகிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.


ச.நாராயணன், செங்கல்பட்டு.

ஒரு பிரபலத்திற்கு நெருக்கமான ஒருவரை இது பாதிக்கும் போது மட்டுமே, இந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும். மற்றபடி சாதாரண மக்களுக்கு இது நடந்தால், பெரும்பாலும் இது போன்ற துயர சம்பவங்கள் பொதுவெளியில் வராமலேயே போய் விடும்.


ஷர்மிளா ஸ்ரீதர், வளசரவாக்கம்.

18 வயதிற்குட்பட்ட மைனர் குழந்தைகளை, பெற்றோர் துணையின்றி வீட்டு வேலைக்காக ஒருவரது வீட்டில் தங்க வைப்பது சட்டவிரோதமாக்கி... அதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில் தண்டனை மற்றும் லட்சங்களில் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றி, அதை கடுமையாக கடைபிடித்தால் மட்டுமே இதுபோன்ற துயரங்களுக்கு ஓரளவாவது தீர்வு கிடைக்கும்.


லட்சுமி நரசிம்மன், தாம்பரம்.

பெற்ற தாய் தந்தை என யாராக இருந்தாலும், அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இல்லை என்றால் மரண தண்டனை கூட வழங்கலாம். ஆனால் குற்றவாளிகளை எளிதில் வெளியே விடக் கூடாது.


வ.கோவிந்தன், சைதை.

4 வருடம் முன் அயனாவரம் சிறுமியை சீரழித்த 16 பேருக்கு என்ன தண்டனை கொடுத்தாங்க???? லிப்ட் மேன், பிளம்பர், எலக்டிரீஷயன்,வாட்ச் மேன் etc etc எல்லாரும் தத்தம் வேலைக்கு திரும்பிட்டாங்களா அல்லது கம்பி எண்ணுறானுங்களா? அத முதல்ல சொல்லுங்க.. அப்புறம் என் கருத்தை நான் சொல்றேன்.


பெயர் சொல்ல விரும்பவில்லை, சென்னை.

இந்த மாதிரி செய்தி போடுறத விட்டுட்டு முதல்ல இதுக்கெல்லாம் அடிப்படைக் காரணமான நமது அரசையும், நீதித்துறையையும் தண்டிக்கவேண்டும். பாலியல் ரீதியான குற்றங்களுக்கு, சட்டரீதியாக கடுமையான தண்டனை கொண்டு வரும் சக்திவாய்ந்த பதவிகளில் இருப்பது அரசுத்துறை மற்றும் நீதித்துறையில் இருக்கக்கூடியவர்கள். இதுவரை இதுக்கு எந்த ஒரு நிரந்தரமான தீர்வை ஏன் கொண்டு வரவில்லை..?? குற்றவாளிகளுக்கு தண்டனை ‌கொடுப்பதற்கு முன் அத்தனை அரசு அதிகாரிகளையும் நீதிபதிகளையும் தண்டிக்க வேண்டும்.


ப.துரைராஜ், ஆதம்பாக்கம்.

பாலியல் ரீதியான குற்றங்களுக்கு நிரந்தரமான கடுமையான தண்டனை கொண்டு வந்து, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். ஆனா, நிஜத்துல என்ன நடக்கும்?? எப்போதும் போல
கொஞ்ச நாளைக்கு இந்தச் செய்தியை போட்டு பரபரப்பாக்கி... அதுக்கப்புறம் எல்லாரும் அவங்க வேலையை பார்க்க போயிடுவாங்க. அப்படியே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாலும், கொஞ்ச நாளில் மேல்முறையீடு பண்ணி வெளியே வந்துற போறாங்க... இதுக்கு எதுக்கு போலீஸு, கோர்ட்டு, நீதி எல்லாம்.. போய் வேற வேலை இருந்தா பாருங்கம்மா..


எஸ்.வேலுமணி, வேளச்சேரி.

ஓட்டல் உள்ள பூந்து சோறு சாப்பிட வந்தவங்கள போட்டு அடிக்கிறாங்க.. அவ்வளவு நியாயவாதிகளாம்‌ நம்ம காவல்துறை.. அதனாலே சோறு சாப்பிட வந்தவனுக்கே இந்த கதின்னா... கண்டிப்பா, இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான்னு, ஊருக்குள்ள பொதுமக்கள் பேசிக்கிறாங்களாம்.. அதானே போலீஸ்கார்..!


S.ஜான் விக்டர், மடிப்பாக்கம்.

பாடகிய புடித்து உள்ளே போடுங்க சார்... பெத்த பிள்ளைய 8 வருடமாக அடுத்தவர் வீட்டில் விட்டு வளர்த்தது முதல் குற்றம். தங்கை கணவனை சுட்டு கொல்லுங்க.... பாதிரியாரை மக்களிடம் ஒப்படைங்க... சிலுவையில் அடித்து பாவமன்னிப்பு வழங்குவோம்.


மீனா சுந்தர், நங்கநல்லூர்

பெற்ற குழந்தையை விற்க மனசு எப்படி வந்ததோ தெரியவில்லை. அந்த நாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.


மைதிலி கிருஷ்ணன், திருவாரூர்.

ஒரு தொழிலதிபர் சிறுமியைத் தத்தே பெற்றாலும், சட்டதிட்ட வழிமுறைகள் தெரியாதா என்ன? அந்த வித்த குழந்தையை கூட உண்மையாய் இவ தான் பெத்தாளா..? இல்ல எங்கயாவது திருடிட்டு வந்தாளா? மக்களே அவங்கவங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துகோங்க.


ம.தங்கராஜ், திருச்சி.

வரவர இந்த பாதிரியார்கள், மதகுருக்கள், சாமியார்கள் தொல்லை பெண்களுக்கு அதிகமாகிறது. இவங்க எல்லாம் இல்லாமலேயே சர்ச், மசூதி, கோயிலுன்னு நடத்த கூடாதா? பண்றது பூரா பொறம்போக்குத்தனம்.. கடவுளுக்கு ஏஜெண்ட்டா இவங்க எல்லாம்..? அவங்கெல்லாம் வேற சம்பளம், கார், வீடு குடுத்து வச்சிக்கிறதுக்கு..... ச்சே..!