தொடர்கள்
பொது
“ஆளில்லா, பூட்டிய மைதானத்தில் குதிரை பந்தயம்..!” - ஸ்வேதா அப்புதாஸ்

20210316133509971.jpeg

ஊட்டி குதிரை பத்தியம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது..
நுறு வருடத்தை கடந்து, நடத்த பட்டு கொண்டிருக்கும் ஊட்டி குதிரை பந்தயம், 1894 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி துவக்கப்பட்டது.

20210316133537782.jpeg

குதிரை பந்தயத்தை பிரிட்டிஷார் துவக்கியதே கோடை காலத்தில்தான். இது பொழுது போக்கான ஒரு விளையாட்டு மற்றும் சுற்றுலாக்களை கவரவும்தான். உயர்ந்த மலை பிரதேசத்தில், உயர்ந்த சீதோஷண இடத்தில் நடத்தப்படும் ஒரு பொழுது போக்கு விளையாட்டான குதிரை பந்தயம், இந்தியாவிலே ஊட்டியில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2021031613361052.jpeg

ஊட்டியில்.. வருடம் தோறும், கோடை சீசன் துவங்கி விட்டால்... பல பல புதிய விஷயங்கள் முளைத்து விடும். அதில் உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாக்களையும் கவர்ந்தது வரலாற்று சிறப்பு மிக்க குதிரை பந்தயம்.
கம்பிரமான குதிரைகள், நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து. அழைத்து வர படுகின்றன.

ஒரு காலத்தில், குதிரைகள் நீலகிரி மலை ரயிலில் கூட கொண்டு வரப்பட்டன. ரேஸ் குதிரைகளை காண உள்ளூர் வாசிகள் ஆவலுடன் சென்று பார்ப்பது ஒரு த்ரில்லிங்...

20210316133659342.jpeg

கால போக்கில் குதிரை ரேஸ், சூதாட்டமாக மாறி... பலர் தங்களின் வாழ்வாத்ரத்தையே இழக்கவும் காரணமாக இருந்தது.

1975 ஆம் வருடம், ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு குதிரை பந்தயத்திற்கு தடை விதித்தது...

தடையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மெட்ராஸ் ரேஸ் கிளப் மீண்டும் குதிரை பந்தயத்தை நடத்த... தி.மு.க. அரசு, குதிரை பந்தயத்தை அரசே எடுத்து நடத்தும் என்று சில காலம் நடத்தியது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு... மீண்டும் மெட்ராஸ் ரேஸ் கிளப் கைக்கே குதிரை பந்தயம் வந்து சேர்ந்தது.

20210316133740849.jpeg

கடந்த வருடம் கொரோனா தாக்கம் என்பதால் குதிரை பந்தயம் நிறுத்த பட்டது. இதனால், குதிரைகள் ஓட முடியாமல் முடங்கி கிடந்தன... இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று எண்ணி.... ரேஸ் நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டு, மெட்ராஸ் ரேஸ் கிளப் ஊட்டி ரேஸை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.
கடந்த ஒரு வருடமாக முடங்கி கிடந்த 500 குதிரைகள் ஊட்டி வந்து சேர்ந்தன... ஜாக்கிகளும் ஆஜர்...

அதே சமயம்... இரண்டாவது கொரோனா அலை விஸ்வரூபம் எடுக்க... பொது மக்களை அனுமதிக்காமல் குதிரை பந்தயம் நடத்தலாம் என்று அரசு கூற...

பூட்டின மைதானத்தில் குதிரை பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலர் ராமனை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும்... எந்த பதிலும் இல்லை.

20210316132603990.jpeg

வழக்கமாக மெட்ராஸ் ரேஸ் கிளப்பை தொடர்பு கொண்டால்.. சரியான பதில் வருவது கடினம்...

குதிரை பந்தயம் தானே நடக்கிறது... ஏதோ மர்ம விஷயம் நடப்பது போல, தகவல் தெரிவிக்கவே பந்தா காட்டுவது வழக்கம்... அது இன்றும் தொடர்கிறது... கொரோனா வந்த பின் கூட... தொடர்வது வருத்தமான விஷயம்.

20210316133823433.jpeg

குதிரைகளிடம் கூட பேட்டி எடுத்து விடலாம்... ஆனால், இந்த டிப் டாப் நபர்களிடம்... மிக கடினம்... என்ன செய்ய..

எம்.ஏ.எம். ராமஸ்வாமி மிகவும் இயல்பாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

20210316132738885.jpeg

இந்த வருட குதிரை பந்தயம், ஐ.பி.எல். போல ஆன் லைன் விளையாட்டு...
ரேஸ் கோர்ஸினுள் சென்று பந்தயம் கட்டி விளையாடுபவர்கள், ஏமாந்து போய் ரோட்டில் நின்று கொண்டு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தனர்...

20210316133906559.jpeg

கடந்த நாற்பது வருடமாக ஊட்டி ரேஸில் விளையாடி கொண்டிருந்த மனோகரன் கூறும் போது... “நான் 40 வருடமாக ரேஸ் விளையாடி கொண்டிருந்தவன்.... கொரோனா வந்து, கடந்த வருடம் ரேஸ் இல்லை... இந்த வருடம் உள்ளே போகலாம் என்று இருந்தோம், கிளோஸ் பண்ணிட்டாங்க... இப்படி பூட்டின ரேஸ் கோர்ஸில் ரேஸ் நடத்துவது இது தான் முதல் முறை. வெளிநாட்டில் எல்லாம் இப்படித்தானாம்... ஆன் லைன் ரேஸிங்.. அது நமக்கு ஒத்துவராது... சும்மா ரேஸை பார்க்கிறோம், அவ்வளவுதான் என்ன செய்ய?” என்று விரக்தியில் கூறினார்.

சேவியர் என்பவர் நம்மிடம்... “ஆன் லைன் ரேஸ் நம்மால் விளையாட முடியாது... நம் பேங்க் பேலன்ஸ் மினிமம் பத்தாயிரம் இருக்க வேண்டும்... நேரடியாக பணம் கட்டி அல்லது டிக்கெட் எடுத்து விளையாடுவது போல இருக்காது... இது பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஒத்து வரும்” என்று நகர்ந்தார்.

20210319122732184.jpeg

நடராஜ் என்பவர் கூறும் போது.. “நான் முப்பது வருடமாக விளையாடி வருகின்றேன்.... என்ன செய்ய கொரோனா தாக்கம்... கடந்த வருடம் ரேஸ் இல்லை. இந்த வருடம்.. பொது மக்களை அனுமதிக்கவில்லை... நல்லது தான்... பணக்காரர்கள் ஆன் லைனில் விளையாடிக்கொள்கிறார்கள்... நான் பார்க்க தான் வந்துள்ளேன்... ஒரு விஷயம்.. தற்போது நடக்கும் ஊட்டி ரேஸ்.. கடந்த ஒரு வருடமாக முடங்கி கிடந்த குதிரைகளுக்கு பயிற்ச்சி அளிக்கும் ரேஸ் என்று தான் நான் கருதுகிறேன்” என்று முடித்தார்.

ஏப்ரல் 14 ஆம் தேதி துவங்கிய ஊட்டி குதிரை பந்தயம், ஜூன் 11 ஆம் தேதி வரை நடை பெரும். வாரம் இரு ரேஸ் என்று மொத்தம் 18 ரேஸ் நடைபெறும்.

பூட்டின ரேஸ் கோர்ஸில் மக்கள் இல்லாமல்... டிப் டாப்.. குதிரை முதலாளிகள், பயிற்ச்சியாளர்கள், ஜாக்கிகள், ரேஸ் கிளப் உறுபினர்கள் மட்டும் கலந்து கொண்டு நடக்கும் ஒரு வித்தியாசமான, வருமானமில்லாத ரேஸ் இந்த வருடம்.

ஒரு காலத்தில்... எம்.என். நம்பியார், சிவாஜிகணேசன், சாவித்ரி, சரோஜாதேவி, ஜெமினி கணேசன், நாகேஷ், இந்தி நடிகர்கள் மற்றும் கோவை, திருப்பூர், சேலம்... சென்னை நகரங்களிலுள்ள பிரபலங்கள் என்று ஊட்டி ரேஸை ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம்... இன்று வெறிச்சோடி... குதிரைகள் மட்டும் ஓடும் நிலைமை.

கொரோனவை மீறி கொண்டு ஓடும் குதிரைகளுக்கு மட்டும் இந்த ஊட்டி ரேஸ் ஒரு நல்ல பயிற்ச்சி.