தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
பணியிடங்களில் பாலியல் தொல்லை! - ஆர்.ராஜேஷ்கன்னா

20210205180704876.jpg

தமிழகத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து காவல்துறையினர் ஒரு புறம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம் நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களுக்கு எதிரான சாட்டையடி தீர்ப்புகள் வழங்கி குற்றவாளிகளை தண்டித்து வந்தாலும்... பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்ந்து தான் வருகிறது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்த நபர், தன் உடன் பணிபுரிந்த பெண்ணை பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழந்து, விசாரணை நடைப்பெற்றது. விசாரணை முடிவில், பாலியியல் தொல்லை கொடுத்த ஆண் வெல்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தன்னை பணிநீக்கம் செய்தது செல்லாது என ஆலை நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட நபர், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற விசாரனையில் பாதிக்கப்பட்ட பெண், தன் வழக்கை வாபஸ் பெற்று விட்டதாக தெரிவிக்கவும்... மீண்டும் பணியில் சேர்ந்த்துகொள்ள ஆலை நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. ஆலை நிர்வாகம் தொழிலாளர் நல நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

சில குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக, பாலியல் தொல்லையால் பாதிக்கபட்ட பெண், புகாரை திரும்ப வாபஸ் பெற்று விட்டதால், பாலியல் குற்றசாட்டிலிருந்து ஆண் வெல்டரை விடுவிக்க முடியாது. அப்படி விடுவித்தால், அது சமுதாயத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் . பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வரை, சமத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்து விட்டதாக பெண்கள் உரிமை கோரமுடியாது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு கருணை காட்ட முடியாது. எனவே பணியிடத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆண் வெல்டரை மீண்டும் பணியில் சேர்க்க உத்திரவிட்ட தொழிலாளர் நல நீதிமன்றம் வழங்கிய உத்திரவினை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சில வருடங்களுக்கு முன்பு, சென்னையில் இருக்கும் பிரபல கம்பியூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனது ப்ராஜக்ட் மேனேஜர், சக ஊழியர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். அப்போது ப்ராஜக்ட் மேனேஜர் பாலியல் தீண்டல் தொந்தரவு செய்த போது, தான் எதிர்ப்பு தெரிவிக்கவும்... தன் மேலாதிகாரி ஒன்றும் நடக்காதது போல் சென்றுவிட்டார். நடந்த விவரத்தினை, தன் தலைமை அதிகாரிக்கு சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பெண் கவலையுடன் தன் சக ஊழியர்களிடம் தெரிவித்து இருந்தார்.

அடுத்த சில மாதங்களில்... பராஜக்ட் மேனேஜர் மற்றும் சில ஊழியர்களுடன் ஏற்கனவே பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண்மணியும் லண்டன் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். விசேஷ மீட்டிங் இருக்கிறது என்று சொல்லி அந்த பெண்ணை இரவு 11 மணி வரை அந்த ப்ராஜக்ட் மேனேஜர் தன் அறையில் காக்க வைத்தார். பெண்ணின் செல்லில், பேட்டரி பவர் முழுவதுமாக தீர்ந்து செல்போன் செயல் இழந்தது. அதன்பின் ப்ராஜக்ட மேனேஜர், தன் பாலியல் சீண்டல்களை அந்தப் பெண்ணிடம் நிகழ்த்தியுள்ளார். ப்ராஜக்ட் மேனேஜர் ரூமிலிருந்து பதற்றத்துடன் வெளியேறிய அவர், பதட்டத்துடன் தனக்கு உடம்பு சரியில்லை என்று தன்னுடன் பணிபுரிபவர்களிடம் கூறி, தன் இருப்பிடத்திற்கு அவர்களின் உதவியுடன் சென்றார்.

பணியிடத்தில் தன் மேலாதிகாரியால் நடந்த பாலியல் சீண்டல்களை மனித வள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பின், சென்னையில் இருக்கும் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் தனக்கு உரிய நீதிகிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தன் சக ஊழியர்களிடம் தெரிவித்தார்.

20210205182044881.jpg

மத்திய பிரதேசம், இந்தூரில் இயங்கும் பிரபல வங்கியில் பணியாற்றும் பெண்ணிற்கு அவரது மேலாதிகாரி மூலம் பாலியல் சீண்டல் நடைப்பெற்றது. இதனை புகாராக அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணை, வங்கி நிர்வாகம் வேறு காரணங்களை கூறி பணியிட மாற்றம் செய்தது. பாதிக்கப்பட்ட பெண், தனக்கு வங்கி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மத்தியபிரதேச உயர்நீதிமன்றம், பணியிடத்தில் பாலியல் சீண்டல் பாதிப்புக்குள்ளான பெண்ணை பணியிட மாற்றம் செய்தது செல்லாது என உத்திரவிட்டது. மத்திய பிரதேச உயர்நீதிமன்ற உத்திரவினை எதிர்த்து, வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பணியிடத்தில் பாலியியல் சீண்டல் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பணியிட மாற்றம் செய்தது செல்லாது என மத்திய பிரதே உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது, பெண்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கான அவமரியாதை என்று உச்சநீதிமன்றம் தனது சாட்டையடி தீர்ப்பில் கூறியது. அதன்பின் 2013-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது.

சமீபத்தில், தமிழகத்தில் பணியிடத்தில் நடந்த ஒரு பாலியியல் சீண்டல் சம்பவத்தில் கூட சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய பரிகாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பணியிடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சீனியர் மோஸ்ட் பெண் தலைவராக கொண்ட குழு அமைக்க வேண்டும். நிறுவனத்தினை சேர்ந்த ஆண் ஒருவரும், வெளிநபர் ஒருவரும் கமிட்டியினுள் இருக்க வேண்டும் என்ற கைடு லைன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரினையும் வெளியிட sexual harassment of women at workplace (prevention, prohibition and redressal) Act 2013 தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்முலம் பாதிக்கப்பட்ட பெண், தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக கூறும் குற்றசாட்டு உண்மைதானா என்று விசாரிக்க ஏதுவாகிறது.

பணியிடத்தில் பெண்களுக்கு சில மேலாதிகரிகளால் பாலியல் சீண்டல் குற்றசாட்டு அவ்வப்போது எழந்து வருகிறது. பணியிடத்தில் ஏற்படும் பாலியல் சீண்டல்களை பல பெண்கள் தங்களின் குடும்ப நிலைமையை கருதி புகார் கூட அளிப்பதில்லை என்பது வேதனையான விஷயமாக உள்ளது.

திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஓழிக்க முடியாது!