தொடர்கள்
கவிதை
பெருமைமிகு பெண்... - சி. கோவேந்த ராஜா.

20210205170705296.jpeg

அனைத்தையும் தருபவர்... அம்மா...!
ஆண்டவனின் மறு உருவம்.... அம்மா....!
“இல்லை”...என்ற வார்த்தையை அறியாதவர்....!

“அம்மா”வின் மறு உருவம் - அக்காள்...!
ஆனந்தமயக் குடும்பத்திற்கு.....
அனைத்தும் புரிபவள்.... அக்காள்....!

தன் கையாகவே மாறி விடுபவள்... தங்கை...!
குடும்ப மகிழ்ச்சியின் மொத்தக் குத்தகை…. அவள் கையில்....!

தோள் கொடுத்து... தாங்கிக் கொள்பவள்.....
தட்டிக் கொடுத்து.. புகழ் ஓங்கச் செய்பவள்.... தோழி...!

புதுமைகளைப் புகுத்திடவே...
நல்லனவற்றை..... நடத்திடவே....
பிறந்த வீட்டிலிருந்து.... புகுந்த வீட்டிற்கு....
“நாற்று”... ஆகவே... ஆனார்..... நாத்தனார்....!

மனதாய் மாறி விடுபவள்..... மனையாள்....!
புதிதாய் உயிர்ப்பிக்கும்... மாது.... அவள்....!

மார்ச் - 8 ஒரு மந்திர தினம்.....!
மகிமைகள் பொங்கும்....
மங்கையர் தினம்......!

அழகு உலகம் -
மங்கையரின் கைவண்ணம்....!

அற்புத எண்ணங்கள் -
மங்கையரின் மனவோட்டம்....!

ஆனந்த நிகழ்வுகள் -
மங்கையரின் செயலாக்கம்...!

இனிய நினைவுகள் -
மங்கையரின் உருவாக்கம்...!

மார்ச் - 8 ஒரு மந்திர தினம்.....!
மகிமைகள் பொங்கும் ....
மங்கையர் தினம்...... !

வளம் கொழிக்கும்....
மழை மகளின்
மண் நீர்...
வாழ்த்துடன்... வரவேற்றிடுவோம்....!

களம் காத்திடும்...
நில மகளின்...
செந் நீர்.....
சிறப்புடன்.... காத்திடுவோம்...!

இல்லங்களை.. இயக்கிடும்...
இனிதே அமைத்திடும்...
இனிய மனை மகளின்....
கண்ணீர்.... அது...
ஆனந்தக் கண்ணீராக... மட்டுமே...
அன்புடன்.. அமைத்திடுவோம்...!

மையால்... மட்டுமல்ல....
மெய்யாலும்...
மனதாலும்...
பெண்மையை...
பெருமையுடன்.. போற்றிடுவோம்...!

மார்ச்- 8 ஒரு மந்திர தினம்.....!
மகிமைகள் பொங்கும்....
மங்கையர் தினம்......!

வணங்கிடுவோம்...!
வாழ்த்திடுவோம்...!

வணக்கங்கள்..!
வாழ்த்துக்கள்...!