தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 26 - காவிரிமைந்தன்

2021011206342310.jpg

20210104161412313.jpg

காவிரி மைந்தன்

20210204082627989.jpg

எல்லாமே தேன்! தேன்!!

எழுதுகின்ற கவிதைமலர் வரைவதற்கு எடுத்த முயற்சி.. உன் எண்ணத்தில் விழுந்தபோதே கிட்டியதே என்னில் மகிழ்ச்சி!

தொட்டு அணைத்து வரும் சுகம்கூட கோடி பெறும் என்பதால் தொடாமல் எழுதுகின்றேன் இன்று நான்!

ஏனென்றால் கோடியெல்லாம் காதல் கொள்கைப்படி ஒரு கணக்கே அல்ல!

முத்தத்தால் மட்டுமே இக்கணக்கில் வரவு வரும்! மோகத்தால் நான் தவிக்கும் தாகத்தால் ஆசையெழும்!

பளிச்சென்று பதில் எழுத பாவையவள் வருகையெனில் பகலிரவு இனி எதற்கு .. உனை நினைத்தாலே கொள்ளை சுகம்!!

இச்சை செயல்போல ஆகிவிட்ட இக்கடிதம் அணிச்சை செயலாகும் என்றெல்லாம் நினைக்காதே!

பசி உறக்கம் மனக் கலக்கம் எதிலும் நீ இருந்தபடியால் என்னையே நான் மறந்தேன்!

உன்னிலே நான் கலந்தேன்!

உறவினில் மகிழ்கின்றேன்!

உள்ளமே தருகின்றேன்!

ஓடோடி வருகின்றேன்!

சித்திரை முழுநிலவு சிரிக்கும் ஓர் பெண்ணழகு!

கண்ணழகு காட்டிவிட்டால் காதலிலே நான் மிதப்பேன்!

மொழியின் சுவை அறியும்விதம் பழகும்கலை அறியும்போது.. கவிதைமணம் வீசுவதுண்டு!

உன்னிலே நான் கண்டேன் இன்று!!

என் இருதயத்தின் பக்கத்திலே இப்படியா நீ உட்காருவது?

கவியாக்கம் எப்படித்தான் நடக்கிறதோ இங்கு என்று பார்க்கத்தான் வந்தேன் என்றாய்!

பேசும் பேச்சில் கலந்த தேனை நான் ஏட்டில் வரைந்து காட்டுகிறேன்.. அவ்வளவுதான்!

கொட்டிக்கவிழ்த்துவிடும் அற்புதச் சுரங்கத்தை எங்கே வைத்துள்ளீர் என்றாய்!

என்வசமாய் நானிருந்து எழுதுகின்றபோதெல்லாம் இதுபோல் எழுத்துக்கள் வருவதில்லை!

உன்வசமே என்னைத் தந்தபின் ஏடெடுத்தேன்.. எல்லாமே தேன்! தேன்!!