தொடர்கள்
பேரிடர்
"தப்பித்த நீலகிரி...” - ஸ்வேதா அப்புதாஸ்..

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தை கடந்தவுடன், நீலகிரி மாவட்டம் மழையை சந்திக்க தன்னை தயார் படுத்திக் கொள்வது வழக்கம்.

20201019130348601.jpg
மாவட்ட நிர்வாகம், வருடத்தில் வரக் கூடிய இரண்டு பருவ மழைகளை கையாள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதை ஒரு முக்கிய பங்காகவே செய்து வருகிறது.ம்

2020101913063166.jpg
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்க்கும்... இந்த கடும் மழையில் பாதிக்கப்படுவது கூடலூர் பகுதி... கடந்த சில வருடங்களாக அதிக வெள்ளப் பெருக்கில் சிக்கி தத்தளிக்கிறது இந்தப் பகுதி.. பந்தலூர், கூடலூர் பகுதி கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளத்தில் சிக்கி, 250 பழங்குடி வாசிகள் மீட்கப்பட்டனர்... மீட்பு நடவடிக்கை மற்றும் மழையின் பாதிப்பும் இந்த மாவட்டத்தில் எப்போதும் ஒரு தொடர் கதை...

20201019130728212.jpg
ஒரு பக்கம் தென் மேற்கு பருவ மழை நீலகிரியை தாக்குவதும், அதில் கூடலூர் மற்றும் ஊட்டி பகுதிகள் அதிகம் பாதிப்புகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று....

இரண்டு பருவ காற்று, இந்தியாவில் ஏற்படும் ஒரு இயற்கை சூதாட்டம் என்று வர்ணிக்கிறார்கள் புவியலாளர்கள்.

20201019130935756.jpg
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தென் மேற்கு பருவக்காற்று, கூடலூர் பகுதியை தாக்கியது.... அதைத் தொடர்ந்து வட கிழக்கு பருவ காற்று பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று தான் மாவட்ட நிர்வாகம் கணித்திருந்தது... சென்னை, தூத்துக்குடி, கோவை போன்ற இடங்களை பதம் பார்த்தது.. பலத்த மழை பெய்யும் என்று வானிலை அறிவித்திருந்தது.. அதே போல கடந்த வாரம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறியது... வீடுகள், மருத்துவமனை என்று வெள்ளம் புகுந்து பயமுறுத்தியது..

20201019131115519.jpg
அதே சமயத்தில், நீலகிரியில் பலத்த ஆக்ரோஷ காற்று வீசத் துவங்கியது... மாவட்ட நிர்வாகமும், மின்சார வாரியமும் உண்மையில் பயந்து போய் விட்டனர். காரணம், ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விடும்... நிறைய பாதிப்புகள் இருக்கும் என்று எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து நிரம்ப ரெடியாகவே இருந்தார் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா.... ரொம்பவே உஷாராக இருந்தவர்கள் மின்சார வாரியத்தினர் தான். கரண்ட் கட் ஆகாமல் இருக்கவும், கட் ஆன கரண்ட்டை உடனே சரி செய்யவும் உடன் நடவடிக்கை எடுத்தனர்.

20201019135525651.jpg
பயங்கரமான பருவ மழை காலகட்டத்தை நீலகிரி கடந்து வந்துள்ளது.
1978 ஆம் வருடம் தான் நீலகிரியை திருப்பிப் போட்ட வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் ஊட்டி மற்றும் குன்னூர் மிகவும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் மூழ்கிய இந்த சுற்றுலா தலங்களால், பல உயிர்கள் வெள்ளத்துக்கு இறையானது.

20201019143629611.jpg

வெள்ளத்தின் கோர முகத்தை, ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆய்வு செய்து, அனைத்து நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்தி, வெள்ளம் இனி எங்கும் புகாமல் இருக்க நகரின் மத்தியில் உள்ள கோடப் மந்து கால்வாயை விரிவு படுத்தி... அனைத்து தண்ணீர் ஓடும் ஓடைகளையும் தூர் வாரி சரி செய்து, இனி எந்த வெள்ளமும் பாதிப்பை ஏற்படுத்தலாகாது எனும் வகையில் நடவடிக்கை எடுத்ததை எவரும் இன்னும் மறக்கவில்லை.

20201019143740354.jpg..
என்னதானாலும், ஒரு புவியியல் ஆய்வில் கடந்த எண்பது வருடமாக பல கோணங்களில் இந்த இரண்டு பருவ மழைகளும் நீலகிரியை பதம் பார்க்கத் தவறியதில்லை... 1993 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாளை, நீலகிரி வாசிகள் இன்னும் மறக்கவில்லை... அன்று இரவு பெய்த வடகிழக்கு பருவ மழையின் தாக்கம், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை சாலையை துவம்சம் செய்து விட்டது.

20201019144057935.jpg
மரபாலம் என்ற இடத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, ஏகப்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. காலகாலமாக அங்கு இருந்தது ஒரு தர்கா! அந்த இடத்தில் பேருந்துகள் வரும் போது அங்கு தவறாமல் நிறுத்தப்பட்டு...பயணிகள் கண் மூடி பிராத்திப்பது வழக்கம்...

20201019144419718.jpg

அந்த இரவில் கொட்டித் தீர்த்த மழையால், அந்த தர்கா இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது... சில பேருந்துகள் கூட காணாமல் போய்விட்டன... ரயில் பாலம் எங்கு என்றே தெரியாமல் போய்விட்டது.

2020101914465855.jpg

அடுத்த நாள் காலை நாம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் வழியாக மரபாலம் சென்று பார்த்தோம். நிலச்சரிவை புகைபடம் எடுக்க... ஒரு திட்டு போல இருந்த இடத்தின் மேல் ஏறி நிற்க...அந்த நொடி நாம் சற்று கால் வழுக்கி கீழே விழ இருந்தோம். ஒரு காவல்துறை நண்பர் நம்மைப் பிடிக்க... அந்த இடத்தில் ஒரு பெண்ணின் சேலை தெரிந்தது....

20201019144914282.jpg

உடனே அங்கு இருந்த தீயணைப்பு படையினர் ஆய்வு செய்ய... அது ஒரு பெண்ணின் சடலம்... அதன் மேல் தான் நாம் நின்று இருக்கிறோம் என்று தெரிந்து அதிர்ந்து போனோம்...! அந்த இடத்தில் ஏகப்பட்ட உயிர் பலிகள் ஏற்பட்டு, உடல்கள் மண்ணோடு சேரும் சகதியினுள் காணாமலே கூட போய்விட்டன....

2020101914501951.jpg
1989 ஆம் ஆண்டு கெத்தை என்ற இடத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு. பருவ மழையின் தாக்கத்தால், மின்சார வாரிய குடியிருப்புகள் தரைமட்டமாகி, பல ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் பலியாகிவிட்டனர் என்ற சோகம் இன்றும் அந்தப் பகுதியில் மறையவில்லை. அந்த சோக சம்பவத்தன்று நாமும் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டோம்... ஒரு வித மயான அமைதி. கட்டிடங்களின் ஈடிபாடுகளுக்குள் சடலங்கள் பரிதாபமாக கிடந்தன.... ஒரு மயில் மட்டும் ஒரு வித சோகத்தில் அகவிக் கொண்டிருந்தது....

இப்படி வருடம் தோறும் பருவ மழையினால் ஏகப்பட்ட அழிவுகளை நீலகிரி சந்தித்து வருகின்றது... இது இங்குள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

1996 ஆம் வருடம் இதே நவம்பர் மாதத்தில் ஊட்டி கேத்தி பகுதியில் உள்ள அவ்லஞ்சி என்ற கிராமத்தில், பூமி பிளந்து கிராமமே காணாமல் போய் விட்டது.. அடுத்து.. அடுத்த வருடங்களில் ஏகப்பட்ட நிலச்சரிவுகள்... பலத்த மழை, வெள்ளம் என்று ஏகப்பட்ட பாதிப்புகள் இந்த மாவட்டத்தை உலுக்கி வருகிறது.

1998ம் ஆண்டு மழை, அதிகமாக கொட்டி பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
1999 ஆம் ஆண்டு, கோத்தகிரி பகுதியில் பல கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சில உயிர் பலிகளும் ஏற்பட்டது...

20201019145505450.jpg
கடந்த இரண்டு வருடமாக ஜூன் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை கொட்டி ரொம்பவே பயமுறுத்தியது... வெள்ளம்... நிலச்சரிவு ஏற்பட்டால் அரசியல் பிரமுகர்களின் விசிட் அதிகமாகும்... அதிலும் தேர்தல் சமயம் என்றால் சொல்லவே வேண்டாம்....
கடந்த வருடத்தை விட இந்த வருடம் குறைவான மழை பெய்து இருக்கிறது என்று மழையின் அளவு காட்டியுள்ளது.

20201019145633198.jpg
இந்த கடும் பருவ மழையில் மிகவும் பாதிக்கப்படுவது மின்சார வாரியமும் அதன் ஊழியர்களும்தான். அவர்கள் படும் பாடு சொல்லவே வேண்டாம்...

மின்சார வாரிய பொறியாளர் சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசினோம்...

20201019150046258.jpg

“எங்க மின்சார வாரியம் தான் இந்த இரண்டு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளால் போராடி வருகிறோம்... மழை மட்டும் பெய்தால் பயம் இல்லை. ஆனால், காற்று அடித்தால்... எங்களுக்கு பெரும் சவால் ஏற்படுகிறது. மரங்கள் நிறைய காற்றில் விழும், பெரிய மரங்களின் கிளைகள் மின்சார போஸ்ட் மற்றும் கம்பிகளில் விழும்போது, பெரிய அளவில் சேதங்கள் ஏற்படுகிறது... எங்களுக்கு உறுதுணையாக, தீயணைப்பு படையினர் மரங்களை அப்புறப்படுத்த உதவி செய்கின்றனர்... கடந்த வருடம் பெய்த மழையில், அவலாஞ்சி... கிளென்மார்கன், பைக்காரா, குந்தா, கெத்தை பகுதியில் மரங்கள் விழுந்தால் மின்சாரம் துண்டிப்பது சகஜம் தான். மழை, காற்று ... ஏற்படும் போது ஏகப்பட்ட பாதிப்பு. அதை சரி செய்ய எங்க ஊழியர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து ரெஸ்டோர் செய்வார்கள்...

20201019150418799.jpg

நானும் எங்க பொறியாளர்களும் விடிய விடிய சுற்றிக் கொண்டே இருப்போம். ஜூன் முதல் செப்டம்பர் வரை எங்களுக்கு ஓயாத வேலை... செப்டம்பரில் கொஞ்சம் ரிலீப்.... மீண்டும் அடுத்த பருவ மழை துவங்கி... எங்களை பந்தாடி விடும். கடந்த வாரம் அடித்த ஆக்ரோஷ காற்று எங்களை தூங்க விடவில்லை... ஒரு சில இடத்தில் மரம் விழுந்து, மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. கொட்டும் மழையில் எங்க ஆட்கள் சரிசெய்வது மிகவும் கடினமான விஷயம். இதைப் பற்றி யாருக்கும் புரியாது.... கரெண்ட் வரவில்லை என்றால் போனில் எங்களை துளைத்து எடுத்து விடுகிறார்கள். அதை பொறுத்துக் கொண்டு, பதில்கூறி எங்களின் பணியை செய்து வருகிறோம்...

இந்த மலை மாவட்டத்தில் கடினமான பணியை மேற்கொள்வதால் தான்... கடந்த வருட புயலில் சென்னை, சிதம்பரம் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, அங்கு நாங்கள் டீமாக சென்று பழுதான டிரான்ஸ்பார்மர்களை சரிசெய்து மின்சார சப்ளையை கொடுத்தோம்... இப்படி எங்களின் பணி தொடர் கதையாக போய்க்கொண்டே இருக்கும்...எங்களை யாரும் பாராட்ட வேண்டாம்... எங்கள் ஊழியர்களின் கஷ்டத்தை இந்த பருவகால மழை சமயத்தில் புரிந்து கொண்டாலே போதுமானது” என்று முடித்தார்.

20201019150614829.jpg
நீலகிரியை பொறுத்த மட்டில் இரண்டு பருவ மழையின் தாக்கத்தால் ஏகப்பட்ட மரங்கள் விழுவது, நிலச்சரிவு... இதனால் சாலை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவது, இதை உடனடியாக ஓடோடி வந்து சரி செய்வதெல்லாம் தீயணைப்பு துறையினர்.....

ஜூன் மாதம் வந்துவிட்டாலே மாவட்ட தீயணைப்பு துறை தங்களை தயார் நிலையில் வைத்து கொள்வது சகஜம். இருபத்தி நாலு மணிநேரமும் விழிப்புடன் காத்து கொண்டிருப்பார்கள். அதிலும் பலத்த காற்று, மழை என்றால் சொல்லவே வேண்டாம்.. கடந்த வருடம் ஜூன் மாதம் துவங்கின இவர்களின் பணி, டிசம்பர் மாதம் வரை தொடர்ந்தது...

20201019150735608.jpg

இந்த வருடம் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில், கூடலூர் பகுதியில் வெள்ளம். மரம் விழுந்ததை சரி செய்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்.... அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வந்துவிட்டாலே ரொம்பவே உஷாராக தங்களை தயார்படுத்தி கொள்கிறார்கள் தீயணைப்பு துறையினர்.

கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்ட்டது. காரணம் , சென்னை, தூத்துகுடி, கோவை போன்ற பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் என்பதால், நீலகிரிக்கும் பாதிப்பு வரும் என்று தீயணைப்பு துறையினர் ரெடியாக இருந்தனர்...

20201019151652886.jpg
குன்னூர், ஜிம்கானா செல்லும் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்..... அதே போல அருவங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பெரிய மரம் விழுந்தது, அதை இரவில் அப்புறப்படுத்தியுள்ளனர்.... கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரத்துக்கு போகும் வழியில் ஏகப்பட்ட மரங்கள் சாலையை பார்த்து முறைத்து கொண்டிருக்கும்.. இந்த பருவ மழை காலத்தில் எப்பொழுது விழும் என்று தெரியாது.... அதை மழைக்கு முன்பே வெட்டினால் நன்றாக இருக்கும் என்று பல முறை கூறியும் யாரும் காதில் வாங்குவது இல்லை.... மழை காற்று அடிக்கும் போது தானாக விழுவதால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. நல்லவேளை இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் இந்த மரத்தின் தாக்குதலில் சிக்கவில்லை என்பது ஆறுதலான தகவல்... அங்கு விழுந்த மரங்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்தினார்கள் தீயணைப்பு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

கடந்த வருடம் கொட்டிய மழையில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கி தப்பினார்கள் என்பது மறக்கமுடியாத நிகழ்வு..

தொடர்ந்து பல வருடங்களாக, நீலகிரியில் இரண்டு பருவ மழைகளின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றன.... பல இயற்கை அழிவுகள் தொடர்ந்து வந்த நிலையில்... இந்த வருடம் பெரிய ஆபத்துகளில் இருந்து நீலகிரி தப்பித்துள்ளது என்பது ஆறுதலாக இருக்கிறது. அதே வேளையில் அடுத்த வாரம்... 26 ஆம் தேதி மீண்டும் ஒரு மழை தாக்கம் இருக்கிறது என்று வானிலை அறிவித்துள்ளது.... அதை நினைத்து மீண்டும் ஒரு வித நவம்பர் மாத பயம் மாவட்டத்தை கவ்விக் கொண்டுள்ளது.......