காக்கையின் எச்சம் - அதில்
விதையின் உயிர்ப்பு...
கால்நடையின் எச்சம் - அதில்
பூச்செடியின் வாசம்...
முட்டையின் ஓடும் - கூட
முன்னிற்கும் அலங்காரமாய்...
தேங்காயின் சிரட்டை - அது
தேநீருக்குக் குவளையாய்...
சிப்பிகளும் சங்குகளும் - உயிர்
வாழ்ந்ததன் மிச்சம்...
மேளங்களும் பறைகளும்
வாழ்ந்த உயிரின் மிச்சம்...
மனிதா உன் மிச்சம் - குறள்
சொல்லும் எச்சம்...
வாழ்க்கையின் சுவடு – என்றும்
குறள் சொல்லும் எச்சம்...
Leave a comment
Upload