தொடர்கள்
கல்வி
நீட் அரக்கனா..? ஒரு உன்னத கல்வியாளரின் பார்வை...  -  ராம் / அனு.

20200818194747160.jpeg

நீட் தமிழகத்தை உலக்கி விட்டது போலவும் இது ஏதோ பெரிய தீங்கு என்பது போலவும் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்க, இதைப் பற்றி படிப்பறிவில்லாத அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மேல் தான் முதல் குற்றச்சாட்டு வைக்க வேண்டும்.

உண்மையான நீட் பற்றிய பார்வை, கல்வியாளர்கள் அதிலும் நடுநிலையான சிந்தனையாளர்களிடம் தான் உண்மையான கருத்து இருக்கும்.

சனத் குமார், மாற்றுத் திறனாளி.

உண்மையில் இவரது சாதனைகளையும், வாழ்க்கையையும், கல்விக்கு இவர் ஆற்றும் தொண்டினையும், வயோதிகர்களுக்கு இவர் நடத்தும் முதியோர் இல்லத்தையும் பார்த்தால், இவர் தான் திறனாளி. நாம் தான் மாற்றுத் திறனாளிகள் என்று தோன்றும்.

நீட் பற்றிய புரிதலை அறிய சனத் குமார் அவர்களை தொடர்பு கொண்டோம்.

நீட் என்பதைத் தாண்டி, இவரது வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் பாடம்.

செருப்பில்லாததை நினைத்து வருந்தாதே, காலில்லாதவனை நினைத்து சந்தோஷப்படு என்று ஒரு பழமொழி இருக்கிறது.

சின்ன வயதில் போலியோ தாக்கிய குழந்தைக்கு தவறான ஒரு மருத்துவரின் அஜாக்கிரதையால் நிரந்தரமாக கால்கள் செயலற்றுப் போக, அந்த மனிதாரால் இன்று ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை செயல்திறனோடு மாறியிருக்கிறது.

இறைவன் ஒரு கதவை மூடினால், ஆயிரம் வாசல்களைத் திறப்பான் என்பதற்கு நம் சனத் குமார் சார் ஒரு உதாரணம்.

சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது என்று சுயமுன்னேற்ற கட்டுரைகள் சிவசங்கரி எழுதியிருப்பார்.

கல்லூரிக்கு செல்லாமல் பல்லாயிரக்கணக்கானவர்களை பட்டதாரியாக்கி வரும் இவரின் சேவை…

தேர்வுத் தோல்விகளில் தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவரும் இவரிடம் வந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சனத் குமாருடன் ஒரு நேர்முகம்.

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதைப் பார்த்தால் அவர் வாழ்க்கையும், கல்வி முறைகளும் மட்டுமல்லாமல் நீட் குறித்த ஒரு புரிந்துணர்வும் நிச்சயம் வரும்.

நீட் அரக்கனா ?? கல்வியாளரின் பார்வையில்... ஒரு சூப்பர் டிஜிட்டல் வீக்லி!