தொடர்கள்
நெகிழ்ச்சி
சுதாங்கன் நினைவலைகள்... - ராம்

20200818183850926.jpg

விகடன் மாணவ நிருபர் திட்டத்திலேயே வியந்து பார்த்த ஆளுமை சுதாங்கன் சார்.

ஜூனியர் போஸ்டில் மாணவ நிருபராக அலுவலகம் செல்லும் போது, மின்னலென வெளிப்படுவார் சுதாங்கன். மிக மிக குறைந்த தொடர்பு தான் அவருடன்.

ஆனால், விகடகவிக்கு பின் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போதும் கொஞ்சம் பயத்துடன் தான் அவரிடம் பேசுவோம்.

ஏனெனில் அவரது விஷய ஞானம். அபார ஞானம். அபார வாசிப்பு உள்ளவர். எந்தத் துறையானாலும் டாண் டாண் என்று பேசக் கூடியவர்.

புத்தகத்துடன் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.

சுதாங்கன் சாரைப் பற்றி சென்ற வாரம் சுபா எழுதிய கட்டுரையில் அவரைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் வந்து விட்டது என்றாலும் அவரைப் பற்றி சொல்ல அது போல நூறு கட்டுரைகள் போதாது.

குழந்தை போல கோபமும் அடிக்கடி அவருக்கு வரும்.

சமீபத்திய ஜூம் மீட்டிங் ஒன்றில் சுதாங்கன் சாருடன் ஒரு இராணுவ அதிகாரியை பேட்டி எடுப்பது என்று முடிவாகி அது பற்றி மேப்ஸும் நானும் அவருடன் பேசிக் கொண்டிருக்கையில், ஏதோ ஒரு யோசனை சொல்லப் போக... சுதாங்கன் சார் கொஞ்சம் நிதானித்து, ‘யோவ் ஆறாயிரம் இண்டர்வியூ பண்ணியிருக்கேன்யா.. எனக்கு சொல்லித் தர்றீங்களா?’ என்று சிரித்தவுடன் அசடு வழிந்தோம்.

நினைத்துப் பார்த்தால், இன்று சுதாங்கன் சார் இங்கு நம்முடன் இல்லை என்பதே ஜீரணிக்க முடியாத உண்மை.

ஆரம்ப கால ஜூவியின் ஒவ்வொரு பக்கங்களுமே, அதன் வெற்றியுமே சுதாங்கனை சேரும் என்றால் அதுவும் மிகையில்லாத உண்மை.

20200818184150921.jpeg

இந்த வாரம் உலகப் புகழ் வாய்ந்த கார்டூனிஸ்ட், எழுத்தாளர் நமது விகடகவியின் ஆசிரியர் மதன் சாருடன், விகடகவியின் முதல் ஆண்டு நிறைவு சமயத்தில் சுதாங்கன் எடுத்த பேட்டி இங்கே…..

சுருக்கமாக சொன்னால், தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு பக்கத்தை இழந்து விட்டன.