திருக்குறள் படிக்க மட்டுமல்லாமல் படித்தபின் நம்மை சிந்திக்கவும் வைக்கும். அதற்கு அது சுலபமாய் புரிந்து கொண்டு மேலும் சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தால் எப்படி என்று யோசித்ததின் விளைவே இந்த சிறு முயற்சி...அதிகாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குறள்கள் வீதம் வாரம் பத்து குறள்களை சிந்திப்போம்...
தகையணங்குறுத்தல்
நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.
என்னை பார்த்தாள்
அப்பார்வை
சேனையாய்
தாக்க
வருகிறது....
குறிப்பு அறிதல்
யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
நான் பார்க்க
நிலம் பார்த்து
பாராத போது
எனைப் பார்த்து
நகை செய்வாள்.
புணர்ச்சி மகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
நீங்கினால் சுடும்
நெருங்க குளிரும்
இப் புதுமைத் தீ
எப்படி இவளிடம்?
நலம் புனைந்துரைத்தல்
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று.
குவளை மலர்
இவள் கண் கண்டு
வெட்கி தலை
குனியுமாம்.
காதல் சிறப்புரைத்தல்
நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.
நெஞ்சிலே காதலர்
இருப்பதால் அஞ்சினேன்
சூடாய் எதையும் உண்ணவே.
நாணுத் துறவுரைத்தல்
யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
நான் பட்ட பிரிவுத் துன்பம்
இவர் அறியார்
ஆதலால் சிரிக்கிறார்
அறிவிலார்...
அலர் அறிவுறுத்தல்
ஊரவர் கௌவை எருவாக அன்னைச்சொல்
நீராக நீளும்இந் நோய்.
காதல் எனும் பயிர்
ஊர் துற்றலே உரமாய்
அன்னை வைதலே
நீராய்க் கொண்டு
வளர்கிறது.
பிரிவாற்றாமை
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
தோழி இல்லா ஊரில் வாழ்வது
வருத்தம், காதலரைப் பிரிந்து
வாழ்தல் அதனினும் .....
Leave a comment
Upload