வீட்டிலேயே பீட்சா..!
இக்கரைக்கு அக்கரை பச்சை போல, நம்மூர் குழந்தைகளுக்கு இத்தாலிய பீட்சா என்றால் உயிர்.
(இத்தாலிய குழந்தைகளுக்கு இட்லி பிடிக்குமோ?)
பீட்சா உடம்புக்கு அவ்வளவு நல்லதில்லை என்றாலும் கேட்க மாட்டார்கள்.
ஆனால், இதையே வீட்டில் செய்தால் கொஞ்சம் பரவாயில்லையா என்றால் ஓரளவுக்கு சுகாதாரமாக செய்யலாம் என்று தோன்றுகிறது.
தேவியிடம் எனக்கு பீட்சா ஆகாது என்று ஒரு முறை சொன்னேன். பீட்சா அதிலும் கொஞ்சம் ஆறிப் போய் சாப்பிட்டால் பாட்டாவின் ஹவாய் செருப்பை சாப்பிடுவது போலவே இருக்கு என்று சொன்னதும், எனக்கு உங்களைப் போல் பாட்டா ஹவாய் செருப்பு சாப்பிட்டு பழக்கம் இல்லை. ஆனால் வீட்டிலேயே நல்ல பீட்சா செய்வது எப்படி என்று தெரியும் என்றார்.
பீட்சா என்றதும் எனக்கு அந்த பேய்ப் படம் வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.
எனக்குத் தான் அது ஞாபகம் வந்ததென்றால், தேவிக்கும் அந்தப் படம் தான் முதலில் தோன்றியிருக்கிறது.
இனி. வீட்டிலேயே இத்தாலியை வரவழைக்க…
Leave a comment
Upload