கவிதை
மே தினம்..! - சி. கோவேந்த ராஜா,

20200401161911495.jpg

ஆண்டின் மூன்றில் ஒரு பங்கு முடிந்து -
முதல் நாள் - ‘உழைப்பாளர் தினம்’ என்பது...
உலக நாள் கணக்கு...!

ஆண்டு முழுவதும் ‘உழைப்பாளர் தினம்’ என்பது....
உயரிய வாழ்நாள் கணக்கு...!

உழைப்பின் மகத்துவத்தை...
உலகிற்கு உணர்த்திடும்... ஓர்
உன்னதத் திருநாள்....!
இந் நன்னாள்....!

உழைப்பினை மதித்திடுவோம்....!
உழைப்பினால் உயர்ந்திடுவோம்...!

கொலைவெறி கொண்ட...
கொரோனாவை.. ஒழித்திடுவோம்...!

நோய் தொற்று... பரவாமல்....
புண்ணிய தினம்.. புலரட்டும்...!

உன்னத உலகம் உருவாக...
உருவாக்க உறுதி கொள்வோம்....!

அமைதிச் சூழல் -
அடுக்கடுக்காய் பரவட்டும்...!

ஆக்கச் சூழல் -
அலங்காரமாய் தொடரட்டும்...!

இனிய உலகம்...
பசுமை மண்டலமாய் மிளிரட்டும்..!

ஆனந்த மனநிலை ...
அணிகலனாய் அமையட்டும்...!

மலர்ச்சி மலரட்டும்....!
வளர்ச்சி பெருகட்டும்...!
வாழ்க்கை சிறக்கட்டும்...!
வனப்பு...பூக்கட்டும்...!