பொது
என்னது? 70 லட்சம் கர்ப்பிணிகளா?! - ஆர்.ராஜேஷ் கன்னா

20200330214518620.jpg

உலகம் முழவதும் கிட்டதட்ட 200 நாடுகளுக்கு மேல் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள லாக்டவுன் செய்து கொண்டுள்ளது. அது ஏற்படுத்திய வடுக்கள் ஒருபுறம் என்றாலும் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

உலகம் முழவதும் ஆண்கள் கருத்தடை சாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கடந்த இரு மாதங்களாக உற்பத்தியை நிறுத்தி முடங்கிவிட்டது. வீட்டிலிருந்தே வேலை செய் என்று லாக் டவுன் செய்த நாடுகள் தனது குடிமக்களுக்கு அறிவுறை சொல்லிவிட்டது. உலக நாடுகளில் பெண்கள் அல்லது ஆண்கள் உபயோகிக்கும் கருத்தடை காண்டம்களின் தட்டுப்பாடு பல இளம் ஜோடிகளை தேவையில்லாத கர்ப்பத்திற்கு இட்டுச் சென்றுவிட்டது.

பல நாடுகளில் தம்பதிகள் வீட்டிற்குள் முடங்கியதால், 70 லட்சம் பெண்கள், தேவையற்ற, திட்டமிடாத கர்ப்பம் தரித்திருக்கிறார்கள். இன்னும் ஊரடங்கு தொடர்ந்தால், பல லட்சம் தேவையற்ற கர்ப்பங்கள் உருவாகி விடும் என ஐ.நா நிதியம் மற்றும் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தினை வெளியிட்டுள்ளது.

20200330214550870.jpg

“ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் 3.1 கோடி பெண்களுக்கு ஏற்படும். ஊரடங்கினால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தை நடத்தும் திட்டமிடுதலுக்கான திறன், உடல் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பை இழப்பார்கள். உலகம் முழுவதும் ஊரடங்கு இன்னும் 3 மாதங்கள் தொடர்ந்தால், 1.5 கோடி பாலின வழக்குகள் உருவாகும். வரும் காலத்தில் 10 லட்சம் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும், குழந்தை திருமணமும் நடைபெறும் சாத்தியக்கூறுகள் உள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு தொடர்ந்தால், உலகில் 4.7 கோடி பெண்கள் கர்ப்பதடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மாத்திரை தட்டுபாட்டால் இன்னும் சில மாதங்களில் தேவையற்ற கர்ப்பத்தின் விளைவை சந்திக்கும் சாத்தியம் உண்டு” என ஐ.நா. நிதியம் மற்றும் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் நாடாலியா சுனென் தெரிவிக்கிறார்.