கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ பாண்ட்ஸ் ரமணி மாமா
தனது பக்தர்களுக்கு ஆசிகள் மட்டும் வழங்காமல் அவர்களின் இல்லத்தில் ஒருவராக அவர்களின் வியாபார விஷயத்திலும் அறிவுரைகள் அளித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியவர் ஸ்ரீ மகா பெரியவா. அந்த காலத்திலேயே மக்கள் அவதிப்படாமல் இருப்பதற்கும், வியாபாரம் பெருகவும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்காமல் வியாழன் விடுமுறை விட சொன்னதெல்லாம் எப்பேர்ப்பட்ட அனுக்கிரஹம்.வியாபாரமும் பெருகும் மக்களும் ஏமாறாமல் இருப்பர்.
ஸ்ரீ மஹாபெரியவா காலத்தில் நாம் இல்லையே என்று ஏங்க வைக்கும் அனுபவம். அவர் சரீரத்தில் இல்லையே விட நம்முடன் இன்றும் நமக்கு அனுக்கிரஹம் செய்து கொண்டு தான் இருக்கிறார். இன்றும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தினமும் நடக்கும் ஆச்சரிய நிகழ்வுகளே அதற்கு சாட்சி.
இந்தவார அனுபவமும் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும்
Leave a comment
Upload