தொடர்கள்
கவிதை
மௌனக் கண்ணாடி - இரா.மணிகண்டன்

20250101104019791.jpeg

கண்ணாடியென்று தெரிந்தபின்னும்

மோதிவிட்டு மௌனமாகச் சென்றுவிட்டாய்!

என்னால் முடிந்தவரை உடைந்த சத்தம்

யாருக்கும் கேட்காமல் பார்த்துக்கொண்டேன்,

உனக்கும் கூட!

சத்தம் கேட்ட பின்னும்

நீ பார்க்காமல் சென்றுவிட்டால்

என்ன செய்வது?

மீளாத காயங்களால் நொறுங்கியக்

கண்ணாடி,

மீண்டும் உடையத் தயாராயில்லை!

நீ திரும்பிப் பார்க்காமலேயே செல்லலாம்!

***