தொடர்கள்
அழகு
பறவைகள் பலவிதம் இந்த வார பறவை - நத்தை குத்தி நாரை  ப ஒப்பிலி

20250101103205968.jpeg

ஆசிய நத்தை குத்தி நாரை அதிக எடையுள்ள ஒரு பறவை. ஆழமற்ற நீர்நிலைகளில் உள்ள நத்தை, மீன், மற்றும் இதர பூச்சிகளை உண்டு வாழக்கூடிய ஒரு நாரையாகும். இறக்கைகளின் பிற்பகுதியில் மினுமினுக்கும் கருப்பு நிறத்துடன் இறக்கைகளின் மேல் பகுதி பளீர் வெள்ளை நிறத்திலும் காணப்படும். எழுபத்தியாறு சென்டிமீட்டர் உயரம் கொண்ட பறவையாகும் இந்த நாரை.

இந்த நாரையின் சிறப்பு இதன் அலகாகும். மேல் உள்ள அலகிற்கும் கீழே உள்ள அலகிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும். அதனாலேயே இந்த நாரைகள் நத்தைகள் போன்ற ஓட்டுக்குள் வசிக்கும் சிறு பூச்சிகளை உண்டு வாழ வசதியான அலகுகள் அவை. எனவேதான் இந்த பெயர் இதற்கு ஏற்பட்டது. நத்தைகளை தவிர தவளைகள், நண்டுகள், பெரிய பூச்சிகள் இவற்றின் உணவில் அடங்கும்.

தென் இந்தியாவில் நவம்பர் முதல் மார்ச் வரையான காலத்திலும், வட இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும் இந்த நாரைகள் முட்டை இடும். கூட்டமாக பறவைகள் உள்ள சரணாலயங்களிலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற இடங்களிலும் இந்த நாரைகள் வசிப்பதை காணலாம்.

சுள்ளிகளை வட்ட வடிவமாக அடுக்கி, நடுவில் இலை தழைகளை மெத்தைபோல் வைத்து கூடு கட்டும் வழக்கம் கொண்டது இந்த நாரைகள். ஒரு சமயத்தில் நான்கு முட்டைகளை ஈனும். கோபால் பல்பொடி போல இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், மியான்மர், மற்றும் ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் காணப்படும் ஒரு பறவை.