உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்.
மோடி நினைத்ததை முடிப்பவர் !!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அறிவிப்பு.
அதெல்லாம் எப்பவோ நிறைவேற்றியாச்சுன்னு சொல்றாங்க !!
சீமான் மிகவும் ஆபத்தான அரசியலை பேசுகிறார் தொல்.திருமாவளவன்.
ஆமா ஆமா உண்மை எல்லாம் சொல்லிடுறாரு !!
கச்சத்தீவை கொடுத்ததற்காக திமுகவும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அண்ணாமலை.
மன்னிப்பெல்லாம் அவங்களுக்கு பெரிய விஷயமே இல்லை !!
கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற கட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு.
நீங்களும் உத்தரவு உத்தரவுன்னு சொல்றீங்க அண்ணா ஒன்னும் நடக்குற மாதிரி தெரியல !!
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் ஆளுநர் ரவி.
இது என் டயலாக் ஆச்சே என்று அலறுகிறார் தொல் திருமா !!
சிபிஐயால் மட்டுமே சரியான நீதியை பெற்று தர முடியும் அமைச்சர் எல்.முருகன் கருத்து.
ஆமா நீங்க சொல்லுவீங்க அவங்க செய்வாங்க !!
வேங்கை வயல் பிரச்சனை அரசியல் ஆக்க கூடாது கி.வீரமணி.
அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்கன்னு ஒருத்தர் சொன்னாரே ?
கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கடும் உயர்வு.
போன வாரம் வெங்காயம் இந்த வாரம் தேங்காய் அவ்வளவு தான் வித்தியாசம் !!
போராட்டத்திற்கு ஆதரவு அளித்த பழனிச்சாமிக்கு, மேலூர் மக்கள் நன்றி பாராட்டு விழாவுக்கு வருமாறும் அழைப்பு.
போன வாரம் முதல்வர், இந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர், அடுத்த வாரம் அண்ணாமலை இப்படி மேலூர் மக்கள் பாராட்டு நடத்துவதில் பிஸியா இருக்காங்க !!
புனித நீராடுவது வறுமையை ஒழிக்குமா கார்கே கேள்வி.
ஒன்லி வாக்கிங் டாக்கிங் தான் !!
ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஓட்டுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று முடிவு பண்ணிட்டு இருப்பாங்க !!
நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை இட ஒதுக்கீடு தான் கேட்கிறோம் டாக்டர் ராமதாஸ்.
மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்னபோது நன்றி எல்லாம் சொன்னிங்க !!
தைலாபுரத்தில் அன்புமணிக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டது 14 சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை.
ஏற்கனவே பெரிய டாக்டர் மூலம் தலைவலி இருக்கு, இப்போ உங்களால புது தலைவலி.
Leave a comment
Upload